Published:Updated:

நினைவுகளை மட்டுமே எடுத்து வர வேண்டும்! - ஸ்ரீலட்சுமி

நினைவுகளை மட்டுமே எடுத்து வர வேண்டும்! - ஸ்ரீலட்சுமி
பிரீமியம் ஸ்டோரி
நினைவுகளை மட்டுமே எடுத்து வர வேண்டும்! - ஸ்ரீலட்சுமி

தனியே... தன்னந்தனியே...

நினைவுகளை மட்டுமே எடுத்து வர வேண்டும்! - ஸ்ரீலட்சுமி

தனியே... தன்னந்தனியே...

Published:Updated:
நினைவுகளை மட்டுமே எடுத்து வர வேண்டும்! - ஸ்ரீலட்சுமி
பிரீமியம் ஸ்டோரி
நினைவுகளை மட்டுமே எடுத்து வர வேண்டும்! - ஸ்ரீலட்சுமி

`பயணம், ஆரோக்கியமான ஓர் அடிமைத்தனம்’ என்கிறது ஒரு பொன்மொழி. சென்னையைச் சேர்ந்த ஸ்ரீலட்சுமியும் அப்படியோர் அடிமைதான். சோஷியல் மீடியா மார்க்கெட்டிங் மற்றும் வெடிங் ப்ளானிங் கம்பெனி நடத்தும் ஸ்ரீலட்சுமி, பயணங்களில் பாடம் கற்பதாகச் சொல்கிறார். இடம், பொருள், ஏவலுக்கேற்ப தனியாகவோ, சுற்றத்துடனோ பயணம் செய்கிறவரின் அனுபவங்கள், நமக்குமே பாடங்கள்!

``பிறந்த குழந்தையை, போட்டோ எடுக்கக் கூடாது; தூக்கிட்டு டிராவல் பண்ணக் கூடாதுனு நிறைய நம்பிக்கைகள் நம்மகிட்ட இருக்கு. ஆனா, எங்கம்மா அதைப்பத்தியெல்லாம் கவலைப்பட்டதே இல்லை. நான் பிறந்து எட்டு வாரத்துலேருந்து என்னைத் தூக்கிட்டு டிராவல் பண்ணியிருக்காங்க. அப்பாவுக்கு வேற வேற ஊர்களுக்கு டிரான்ஸ்ஃபர் ஆகிட்டே இருக்கும். தவிர, அம்மா அப்பா ரெண்டு பேருக்குமே டிராவல் ரொம்பப் பிடிச்ச விஷயமா இருந்ததால, பிறந்ததுமே எனக்கும் அது அறிமுகமாகிடுச்சு. அம்மா அப்பாகூட போயிட்டிருந்த பயணம், அடுத்து அக்காவோடும் ஸ்கூல் ஃப்ரெண்ட்ஸோடும் போகிற அளவுக்கு வளர்ந்தது. அப்புறம் காலேஜ் போனதும் டிராவல் ஒரு பேஷனாவே இருந்தது.

நினைவுகளை மட்டுமே எடுத்து வர வேண்டும்! - ஸ்ரீலட்சுமி

பெங்களூர்ல இன்ஜினீயரிங் புராஜெக்ட் பண்ணிட்டிருந்தேன். டிராவல் பண்ண நிறைய வாய்ப்புகள் அமைஞ்சது. என்னுடைய முதல் சோலோ ட்ரிப், ஹம்பி. காலேஜ்ல தொடர்ந்து ஒரு வாரம் லீவு கிடைச்சது. ஃப்ரெண்ட்ஸ் எல்லாரும் பிஸியா இருந்தாங்க. சென்னையில அம்மாவைப் பார்க்கப் போகலாமானு யோசிச்சிட்டிருந்தபோது, அம்மாவே `பக்கத்துல ஏதாவது ட்ரிப் போயிட்டு வாயேன்’னு சொன்னாங்க. அவசரத்துல பெருசா எதுவும் ப்ளான் பண்ணலை. ஹம்பி போலாம்னு முடிவு பண்ணினேன். அப்போ எனக்கு பீரியட்ஸ் டைம் வேற... போறதா, வேணாமானு நிறைய குழப்பம். கடைசியில செகண்டு க்ளாஸ்ல டிக்கெட் புக் பண்ணிட்டு ஏதோ ஒரு தைரியத்துல கிளம்பிட்டேன். முதல் சோலோ ட்ரிப் என்பதால, டிரெயின்ல ஏறும் வரை கொஞ்சம் பயமாதான் இருந்தது. ஹம்பி போனதும் ரூம் புக் பண்ணினேன். சைக்கிள் எடுத்துட்டு ஊர் சுற்றிப் பார்க்கப்போனேன். ராக் க்ளைம்பிங் பண்ணினேன்.  முதல் சோலோ ட்ரிப்பே சூப்பர் அனுபவமா அமைஞ்சதால, அடுத்தடுத்து தனியா டிராவல் பண்ற ஆசை எனக்கு அதிகமாச்சு...’’ - ஆரம்பம் சொல்கிற ஸ்ரீலட்சுமியின் பயண ஆர்வம், அதன்பிறகு பரந்து வளர்ந்திருக்கிறது.

``கோவா, ராஜஸ்தான், மும்பைனு  நிறைய சோலோ ட்ரிப்ஸ் போனேன். ஒரு மாசம் முழுக்க வடஇந்திய ட்ரிப் போனேன். ஏதோ ஒரு துடிப்புல ஒரு மாசம் ட்ரிப்னு முடிவு பண்ணிட்டேன். அத்தனை நாள் வீட்டை, ஃப்ரெண்ட்ஸை விட்டுட்டு இருக்க முடியுமானு ஒரு தயக்கம். 2015 ஜூன்ல நான் மும்பையில போய் இறங்கின அன்னிக்கு அங்கே வெள்ள எச்சரிக்கை கொடுத்திருந்தாங்க. நினைச்சமாதிரி எந்த இடத்துக்கும் போக முடியலை. ஃப்ரெண்டு வீட்டுல ரெஸ்ட் எடுத்துட்டு, பக்கத்துல உள்ள இடங்களுக்கு மட்டும் போனேன். மறுநாள் அகமதாபாத் போனேன். ஒவ்வொரு ட்ரிப்லயும் டிரெயினைத் தவறவிடுறது, க்ளைமேட் மாற்றம்னு சின்னச் சின்னச் சங்கடங்கள் வராம இருந்ததில்லை.  ஆனா, ஒவ்வொண்ணுமே எனக்கான பாடங்களா இருந்தது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

நினைவுகளை மட்டுமே எடுத்து வர வேண்டும்! - ஸ்ரீலட்சுமி

ஒருமுறை டிரெயினை மிஸ் பண்ணிட்டோம்னா அடுத்த முறை கவனமா இருப்போம். தூங்கிடாம சரியான நேரத்துக்கு எழுந்திருக்கணும், நாமதான் பொறுப்பா இருக்கணும்னு உணர்வோம். சில இடங்கள் பாதுகாப்பா இல்லையோனு தோணும். அப்ப என்னை நான் தற்காத்துக்கொள்ளக்கூடிய விஷயங்கள்ல கவனமா இருக்கணும்னு நினைப்பேன். லக்கேஜ் எடுத்துட்டுத் தனியா டிராவல் பண்ணும்போதுதான் அதை எப்படி குறைக்கணும்னு புரிஞ்சுப்போம். ரெண்டு ஜீன்ஸ், டி-ஷர்ட்டோடும் வாழலாம் அல்லது அங்கே போய் பேரம் பேசி வாங்கிக்கலாம்னு யோசிப்போம். இப்படி ஒவ்வொரு டிராவலும் அனுபவங்களைக் கொடுத்திருக்கு’’ என்கிறவர் பயணக் காதலர்களுக்கு ஒரு மெசேஜ் வைத்திருக்கிறார்.

``சமீபகாலமா `சஸ்டெயினபிள் டிராவலிங்' பற்றி அதிகம் யோசிக்க ஆரம்பிச்சிருக்கேன். பயணங்களின்போதுதான் நாம அதிகம் குப்பைகள் போடுறோம். டிராவல் பண்ணும்போது வாட்டர்பாட்டில் வாங்கிட்டுப் போறோம். யூஸ் அண்டு த்ரோ பாக்கெட்டுல சாப்பாடு வாங்குவோம். அந்த வகையில போற இடங்கள்ல எல்லாம் நிறைய குப்பைகளைப் போடுறோம்னு தோணினது. அதனால பயணங்களின்போது ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் வாட்டர்பாட்டில், டிபன்பாக்ஸ், காபிமக்னு எல்லாத்தையும் எடுத்துட்டுப் போக ஆரம்பிச்சிருக்கேன். பீரியட்ஸ் டைம்ல டிராவல் பண்ணினா, நாப்கினுக்குப் பதிலா மென்ஸ்டுருவல் கப்தான் உபயோகிக்கிறேன். ஓர் ஊருக்குப் போனா அந்த இடத்தின் நினைவுகளை நாம எடுத்துட்டு வரணுமே தவிர, நாம கொண்டுபோகிற குப்பைகளை விட்டுட்டு வரக் கூடாதுங்கிறதுக்கான முயற்சிகளைப் பண்ணிட்டிருக் கேன்.’’ - மாற்றி யோசிக்கச் சொல்கிற மெசேஜ்!

நினைவுகளை மட்டுமே எடுத்து வர வேண்டும்! - ஸ்ரீலட்சுமி

20 வெளிநாடுகளுக்கும், இந்தியாவில் ஐந்தைத் தவிர அனைத்து மாநிலங்களுக்கும் பயணம் செய்து முடித்துவிட்ட ஸ்ரீலட்சுமிக்கு ஓர் ஆதங்கம்.

``ஒரு பெண்ணைப் பார்த்ததுமே `நல்லா படிப்பியா, சமைப்பியா, க்ரோஷா வொர்க் பண்ணுவியா?’னுதான் கேட்கிறாங்க. அவளுக்கு ரன்னிங்கோ, டிராவலோகூட பிடிச்ச விஷயங்களா இருக்கலாம். இப்படிக் கேட்கிறவங்களை மட்டும் குறை சொல்ல முடியாது. அந்தப் பார்வை மாறணும்னா பெண்கள் நிறைய டிராவல் பண்ணணும்.’’

அழைக்கிறவருடன் கைகோப்போம்!

- சாஹா

நினைவுகளை மட்டுமே எடுத்து வர வேண்டும்! - ஸ்ரீலட்சுமி

மூக்கைச் சுற்றிலும் சிலருக்கு அரும்பரும்பாக பிளாக் ஹெட்ஸ் இருக்கும். இதை நீக்க, தக்காளிச்சாறு ஒரு டீஸ்பூன், ஆம்சூர் பவுடர் அரை டீஸ்பூன், எலுமிச்சைச் சாறு கால் டீஸ்பூன் மூன்றையும் ஒன்றாகக் கலந்து, பஞ்சில் நனைத்து மூக்கை அழுத்தித் துடைத் தெடுக்கவும். பிளாக் ஹெட்ஸ் உதிர்ந்துவிடும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism