Published:Updated:

“மோடியுடன் கூட்டு வைத்தது தவறு!”

“மோடியுடன் கூட்டு வைத்தது தவறு!”
பிரீமியம் ஸ்டோரி
“மோடியுடன் கூட்டு வைத்தது தவறு!”

“மோடியுடன் கூட்டு வைத்தது தவறு!”

“மோடியுடன் கூட்டு வைத்தது தவறு!”

“மோடியுடன் கூட்டு வைத்தது தவறு!”

Published:Updated:
“மோடியுடன் கூட்டு வைத்தது தவறு!”
பிரீமியம் ஸ்டோரி
“மோடியுடன் கூட்டு வைத்தது தவறு!”

‘மத்தியில் உள்ள மோடி அரசைத் தூக்கியெறிவோம்’ என்று ஒருமித்த குரலில் முழங்கினார்கள் ம.தி.மு.க-வின் முப்பெரும் விழா - மாநில மாநாட்டில் பேசிய தலைவர்கள்.

ஒவ்வோர் ஆண்டும், பெரியார் - அண்ணா பிறந்த நாள் விழாவை ஒரு மாநாடு போலவே நடத்துவது வைகோவின் வழக்கம். இந்த ஆண்டு, இந்த விழாவுடன், ம.தி.மு.க-வின் வெள்ளி விழா மற்றும் வைகோவின் பொதுவாழ்வுப் பொன் விழா ஆகியவற்றையும் சேர்த்து செப்டம்பர் 15-ம் தேதி ம.தி.மு.க-வினர் நடத்தினர். ஈரோடு - பெருந்துறை சாலையில் மூலக்கரை என்ற இடத்தில் சுமார் 25 ஏக்கரில் பிரமாண்டமாகப் பந்தல் அமைத்து மாநாடு நடைபெற்றது. மாநாட்டுத் திடலுக்கு, ‘கருணாநிதி நகர்’ என்று பெயர் சூட்டியிருந்தனர்.

“மோடியுடன் கூட்டு வைத்தது தவறு!”

‘திராவிட ரத்னா’ என்ற நினைவுப் பரிசை வைகோவுக்கு வழங்கினார், ம.தி.மு.க-வின் துணைப் பொதுச்செயலாளர் மல்லை சத்யா. ‘‘பாரத ரத்னா விருதைப் போல, திராவிடக் கொள்கைகளுக்காக உழைப்பவர்களுக்கு, தமிழ்நாட்டில் ‘திராவிட ரத்னா விருது’ கொடுக்கப்பட வேண்டும்’’ என்றார் அவர். ம.தி.மு.க பொருளாளர் கணேசமூர்த்தி, “தேர்தல் குதிரை, கொள்கைக் குதிரை என்ற இரு குதிரைகளில் ம.தி.மு.க சவாரி செய்துகொண்டிருக்கிறது. மக்கள் பிரச்னைகளுக்காக, தேர்தல் களத்தைத் தூக்கியெறியவும் அது தயங்காது’’ என அதிரடியாகப் பேசினார். ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் ஃபரூக் அப்துல்லா, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் திருநாவுக்கரசர் உள்பட மேடையில் பேசிய பலரும், ‘‘வைகோ மறுபடியும் நாடாளுமன்றம் சென்று கர்ஜிப்பதைப் பார்க்க ஆவலாக இருக்கிறோம்’’ என்றனர்.

வார்த்தைக்கு வார்த்தை வைகோவை, ‘நண்பா...’ என்று அழைத்து தி.மு.க பொருளாளர் துரைமுருகன் பேசியது, நெகிழ்ச்சியாக இருந்தது. நகைச்சுவையும் உருக்கமும் கலந்த துரைமுருகன் பேச்சு, மாநாட்டின் ஹைலைட்டாக இருந்தது. ‘‘வைகோவின் அறிவு, ஆற்றல், தைரியம் தமிழ்நாட்டுக்குத் தேவைப்படுகிறது. எதையும் எதிர்பார்க்காமல் அரசியல் தியாகம் புரிந்தவன் என் நண்பன். அவனுடைய தியாகம் வரலாற்றில் நிலைத்து நிற்கும்’’ என்றார் துரைமுருகன்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

“மோடியுடன் கூட்டு வைத்தது தவறு!”

‘‘பெரியார், அண்ணாவுக்குப் பிறகு என்னைக் கவர்ந்த ஒரே தலைவர் வைகோதான்’’ என மலேசியாவின் பினாங்கு மாநிலத் துணை முதல்வர் ராமசாமி குறிப்பிட்டார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், திராவிடர் கழகத் தலைவர் வீரமணி, நடிகர் சத்யராஜ், தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தலைவர் காதர் மொய்தீன், பேராசிரியர் ஜவாஹிருல்லா உள்பட பலரும் பேசினர்.

இறுதியாக மைக் பிடித்த வைகோ, ‘‘என் வாழ்க்கை துன்பமும் துயரமும் சோதனையும் நிறைந்தது. நடக்கக்கூடாத சில நிகழ்வுகள் நிகழ்ந்தன. நான் நல்லவற்றையே நினைக்கிறேன். என் பொதுவாழ்வு குதூகலம் நிறைந்ததல்ல. கோலாகலம் கொண்டதல்ல. கணக்கற்ற இரவுகள் கண்ணீரிலே கழிந்ததுண்டு. என் வாழ்வு என்றோ முடிந்து போயிருக்கும். என்றாலும், பல பிரச்னைகளில் தன்னலமற்றுப் போராடியிருக்கிறேன். திராவிட இயக்கத்துக்கு இன்று பேராபத்து வந்துள்ளது. அதைத் தடுப்பதற்காக, தி.மு.க-வுடன் இணைந்து செயல்பட முடிவெடுத்துள்ளேன். நரேந்திர மோடியுடன் கூட்டு வைத்தது, என் வாழ்வில் செய்த தவறுகளில் ஒன்று. மீதமிருக்கும் காலத்தில், பெரியார் - அண்ணாவின் கொள்கைக்காக, தமிழீழ விடுதலைக்காகத் தொடர்ந்து போராடுவேன்’’ என்றார் உருக்கமாக.

- நவீன் இளங்கோவன்,
படங்கள்: ரமேஷ் கந்தசாமி

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism