Published:Updated:

ஊழல் குற்றச்சாட்டு... காஞ்சியில் விளக்கம் சொன்ன எடப்பாடி!

ஊழல் குற்றச்சாட்டு... காஞ்சியில் விளக்கம் சொன்ன எடப்பாடி!
பிரீமியம் ஸ்டோரி
ஊழல் குற்றச்சாட்டு... காஞ்சியில் விளக்கம் சொன்ன எடப்பாடி!

ஊழல் குற்றச்சாட்டு... காஞ்சியில் விளக்கம் சொன்ன எடப்பாடி!

ஊழல் குற்றச்சாட்டு... காஞ்சியில் விளக்கம் சொன்ன எடப்பாடி!

ஊழல் குற்றச்சாட்டு... காஞ்சியில் விளக்கம் சொன்ன எடப்பாடி!

Published:Updated:
ஊழல் குற்றச்சாட்டு... காஞ்சியில் விளக்கம் சொன்ன எடப்பாடி!
பிரீமியம் ஸ்டோரி
ஊழல் குற்றச்சாட்டு... காஞ்சியில் விளக்கம் சொன்ன எடப்பாடி!

ண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்று கட்சிக்குப் பெயர் இருந்தாலும், எம்.ஜி.ஆரைத்தான் பிதாமகனாகக் கொண்டாடுவார்கள் ரத்தத்தின் ரத்தங்கள். காஞ்சிபுரத்தில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற அண்ணாவின் 110-வது பிறந்த நாள் விழாப் பொதுக்கூட்டம், அண்ணாமீதான எடப்பாடியின் பாசத்தை வெளிப்படுத்தியுள்ளது.

காஞ்சிபுரத்தில் உள்ள அண்ணாவின் வீட்டை 1980-ல் நினைவு இல்லமாக மாற்றிய அப்போதைய முதல்வர் எம்.ஜி.ஆர்., அதன் திறப்பு விழாவில் கலந்துகொண்டார். அதன் பிறகு, அந்த வீட்டுக்கு எம்.ஜி.ஆர் வரும் சூழல் அமையவில்லை. பலமுறை முதல்வராக இருந்த ஜெயலலிதா, சில நாட்களே முதல்வர் பதவியில் இருந்த ஜானகி, மூன்று முறை முதல்வராக இருந்த ஓ.பன்னீர்செல்வம் என அ.தி.மு.க-வின் முதல்வர்கள் யாரும் இதுவரை அண்ணா நினைவு இல்லம் வந்ததில்லை. ஆனால், கடந்த ஆண்டு வண்டலூரில் நடைபெற்ற எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவுக்கு முன்பாக, காஞ்சிபுரம் வந்து அண்ணா நினைவு இல்லத்தில் மரியாதை செலுத்தினார் எடப்பாடி பழனிசாமி. அவர் தற்போது, காஞ்சிபுரத்தில் நடைபெற்ற அண்ணா பிறந்த நாள் விழாவில், அண்ணா இல்லத்திலிருந்தே நிகழ்ச்சிகளைத் தொடங்கினார். 

ஊழல் குற்றச்சாட்டு... காஞ்சியில் விளக்கம் சொன்ன எடப்பாடி!

இந்த விழாவுக்காக பல தெருக்களில் அமைக்கப்பட்ட பேனர்களால், கடைகளுக்குள் யாரும் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டதால், பேருந்துகள் பல கி.மீ தூரம் திருப்பி விடப்பட்டன. ஆட்டோக்களுக்கும் அனுமதி இல்லை. எனவே, பலர் நடந்தே தங்கள் வீடுகளுக்குச் செல்ல வேண்டிய சூழல். 

அண்ணா இல்லத்தில் எடப்பாடியை வரவேற்கும் விதமாகக் குதிரைகள், செண்டை மேளம், ட்ரம்ஸ், ஆரத்தி என அதகளப்படுத்தினர். மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்த முதல்வர், அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்.

அரசு நிகழ்ச்சிகளை முடித்துக்கொண்டு, அ.தி.மு.க சார்பாகப் பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் கலந்துகொண்டார் எடப்பாடி. தொண்டர்கள் பாதியில் வெளியேற முடியாதவாறு தடுப்புகள் அமைத்து, எல்லோரையும் கிட்டத்தட்ட கட்டிப்போட்டு வைத்திருந்தனர். தன்மீதான ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு இங்கு விளக்கம் சொன்னார் எடப்பாடி. ‘‘எப்படியாவது ஆட்சியைக் கவிழ்க்க வேண்டும் என்று எதிர்க்கட்சியினர் துடிக்கிறார்கள். என் உறவினருக்கு டெண்டர் கொடுத்திருப்பதாக இப்போது ஊழல் குற்றச்சாட்டு ஒன்றைச் சுமத்தியுள்ளனர். ராமலிங்கம் அண்டு கோ என்ற நிறுவனம் 35 வருடங்களாக ஒப்பந்தத் தொழில் செய்கிறது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பிருந்துதான் அவர் எங்களுக்கு உறவினர். அது இன்டர்நேஷனல் டெண்டர். உலக அளவில் யார் வேண்டுமானாலும் பங்கேற்கலாம். அந்த ஒப்பந்தத்தில் யார் கலந்துகொள்கிறார்கள் என யாருக்குமே கடைசிவரை தெரியாது. அப்படி இருக்க எப்படி ஊழல் நடக்கும்? அதே ராமலிங்கம்தான், 2010-ல் தி.மு.க ஆட்சியின்போது உலக வங்கித் திட்டத்தில் ரூ.74 கோடிக்குக் குடிசை மாற்று வாரிய டெண்டர் எடுத்தார். தி.மு.க ஆட்சியின்போது, 10 டெண்டர்களை அவர்களுக்குக் கொடுத்துள்ளனர். அதில் சிங்கிள் டெண்டர் மட்டுமே ஐந்து. இதெல்லாம் தெரியாமல் நீதிமன்றம் சென்றுவிட்டனர். அதற்கான பலனை அவர்கள் அனுபவிப்பார்கள்’’ என்றார் அவர்.

எடப்பாடியின் கணக்கு பலிக்கிறதா என்பது தேர்தல் முடிவுகளில் தெரியும்!

- பா.ஜெயவேல், படம்: தா.அபினேஷ்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism