Published:Updated:

என்னஞ்சல்

என்னஞ்சல்
பிரீமியம் ஸ்டோரி
என்னஞ்சல்

என்னஞ்சல்

என்னஞ்சல்

என்னஞ்சல்

Published:Updated:
என்னஞ்சல்
பிரீமியம் ஸ்டோரி
என்னஞ்சல்

ன்புள்ள ‘அவள்’ ஆகிய உனக்கு...

சிலரைப்பற்றி எழுத நினைக்கையில் மட்டும்தான், கீபோர்டில் இருக்கும் பொத்தான்கள் ஒன்றோடு ஒன்று சண்டையிட்டு, ‘என்னை முதலில் பயன்படுத்து’ என்பதுபோல் விரல்பிடித்து  அதன் திசையில் அழைத்துச்சென்று, ஈர்த்து எழுத வைக்கும். Flames-ல் எழுதித் தீர்த்த உன் பெயரை, இந்தப் பத்தாண்டுகளில் பின் எப்போதும் பெயருக்குக்கூட எழுத யாரும் நிர்பந்தித்ததில்லை என்பதுதான் எனக்கிருக்கும் ஒரே ஆறுதல். நான் இங்கு வாழ்வதற்கான நேரத்தைக் கடத்திக்கொண்டிருக்க, நீயோ நேரத்தையே கடத்திக்கொண்டிருக்கிறாய். எப்போதேனும் போன் செய்யும்போதும் ஒவ்வொரு தேசத்தின் பெயரைச் சொல்வாய். சில வாரங்களுக்கு முன், லாஸ் ஏஞ்சல்ஸ் என நீ சொன்ன நம்பிக்கையில், கால் செய்து ‘குட் மார்னிங்’ என்றால், உன்னை நெருங்கும் நேரத்தில்தான் இருக்கிறேன் என ஆம்ஸ்டெர்டேம் என்பாய். உன் கடிகார முட்களைப் பிடித்துவிட்டேன் பார்த்தாயா என்பதுபோல் மும்பை என்பாய். சில சமயம் கூட்டன் மார்கன் guten Morgen (ஜெர்மனில் ‘குட் மார்னிங்’) என்பாய். முன்னெப்போதையும் விட, காலம் இப்போதெல்லாம் வேகமாக நகர்கிறது. அணையும் விளக்கு பிரகாசமாக எரிவதுபோல், பூமியும் அசுரப் பாய்ச்சலில் சுழன்றுகொண்டிருக்கிறது என்றுதான் நினைக்கத் தோன்றுகிறது. அதுவும் சட்டென நிற்கும் கடைசி நொடிக்காக ஆர்வமாகக் காத்திருக்கிறதோ என்கிற ஐயப்பாடுகளை அறிவியல் எச்சரிக்கைகள் அசரீரியாக ஒலித்துக்கொண்டே இருக்கின்றன. நினைவுகளால் மட்டுமே என்னை வாழவைத்து, விழுங்கிக்கொண்டிருக்கும் நேரக் கடத்தல்காரிக்குப் பல ஆண்டுகளாகப் பேச நினைத்ததில் இருந்த சில கிறுக்கல்கள். 

என்னஞ்சல்

எல்லா அற்புதங்களும் எதுவும் எதிர்பார்த்திராத பிரபஞ்சத்தின் ஏதோவொரு நொடியில்தான் நிகழத்தொடங்கும் என்பார்கள். காதல் என்பதும் ஒரு பெருவெடிப்பு தான். அது ஆரம்பிக்கும் கணம் எது எனக் கணிக்க முயன்றாலும், அதற்குரிய காரண காரியங்களையெல்லாம் நம்மால் ஒன்றுதிரட்டி ஒரு சட்டத்தினுள் அடக்க முடிவதேயில்லை. வேறு யாரோ ஒரு நண்பனுக்கு புக் செய்த டிக்கெட்டில், அன்று யதேச்சையாய் சந்திக்க இருந்த உன்னை “படத்துக்கு வர்றியா?” எனக் கேட்ட நொடியும் அப்படித்தான் நிகழ்ந்திருந்தது.  சென்னையோடு ஒட்டிப்பிறந்த மாற்றான் சகோதரரான சாலை நெரிசலில் நீ அன்று சற்றுத் தாமதமாகத்தான் வந்திருந்தாய்.

சில விருப்பங்கள் ஈடேறுவதற்கு எல்லாச் சூழலையும் இயற்கை தானாகவே உருவாக்கும் என்பார்கள். எப்போதும் சரியான நேரத்தில் திரைப்படத்தை ஆரம்பிக்கும் மல்டிபிளெக்ஸ் திரையரங்கில்கூட, அன்று நீ வரும் வரை ஆரம்பிக்காமல் காத்திருந்ததற்கான காரணத்தை இன்றுவரை என்னால் யூகிக்க முடியவில்லை. வேறு ஸ்கிரீனுக்குப் படத்தை மாற்றி, சாதாரண இருக்கைகளில் நான் புக் செய்திருந்த டிக்கெட்டுகளை ‘Couples Seat’-ஆக மாற்றி என... அந்த நாள் முழுக்கவே யதேச்சையாய் நிகழ்ந்த அற்புதங்கள் ஏராளம். நான் அத்தனைமுறை மன்னிப்புக் கேட்டும், நீ அதிகம் பேசாமல், “இத்தனை வருஷமா உன்னைத் தெரியும். வா” எனக் கரம்பிடித்து அமரச்செய்த நிகழ்வு கண்முன் விரிகிறது. பள்ளி நாள்களிலிருந்தே அறிமுகமான உன்னோடு முதல் படம் இப்படியாகத்தான் அமைந்தது. அமெரிக்காவிலிருந்து வந்த பயணக்களைப்பில் பதினைந்தாவது  நிமிடத்திலேயே நீ கண்ணயர்ந்துவிட்டாய். சரி, சினிமா பார்ப்பதற்காகவா எல்லோரும் திரையரங்குகளுக்கு வருகிறார்கள். உனது வலதுகையில் இருக்கும் ஆறாம் விரலை கிட்டத்தட்ட ஆறு ஆண்டுகள் கழித்து நேரில் காண்கிறேன். அதைப் பார்த்த வேளையில், சட்டெனத்  தோளில் தலையைப் பொருத்தி நீ எதைப்பற்றியும் கவலைகொள்ளாமல் தூக்கத்தின் அடுத்த நிலைக்குச் சென்றுவிட்டாய். என்ன செய்வதென அறியாது திக்கற்று நான் அமர்ந்திருக்க, சட்டையை ஈரப்படுத்தியது உன் கண்ணீர்த் துளிகள்.  இடைவேளையின் விளக்கு ஒளிக்காக் காத்திருந்தேன்.

கல்லூரி நாள்களில் முதல் செமஸ்டரில் மட்டும்தான் ஏனோ அகரவரிசையில் இருவரும் ஒரே எழுத்து என்பதால் ஒன்றாக அமர்த்தப்பட்டோம். பிறகு ஒவ்வொருமுறையும், உன்னைப் பார்க்க நான்கு கட்டடங்களைக் கடந்து வரவேண்டும். இப்போதிருக்கும் ஸ்மார்ட் பேண்டு கணக்கில் சொல்வதென்றால், நாள்தோறும் 3000 ஸ்டெப்புகளைக் கடந்தால் மட்டுமே உன்னைக் காண முடியும்.  “நான் உன் பாலியல் தோழி இல்லையா?’’ என உனக்கு வராத தமிழில் நீ சொன்ன வாக்கியமும் பேழையில் பத்திரமாகவே சிரித்துக்கொண்டிருக்கிறது. அடித்துப்பிடித்து நான்காவது மாடியில் இருக்கும் உன் டிப்பார்ட்மென்ட்டுக்கு வந்தால், எனக்கு முன்பாகவே நான்கு பேர் நின்றுகொண்டிருப்பார்கள். கம்ப்யூட்டர் டிப்பார்ட்மென்ட் எடுத்திருந்தால் நடக்கும் நேரமாவது மிச்சமாகியிருக்கும் என யோசிக்காமல் இருந்த நாள்களே இல்லை. சர்ச்சின் இருக்கைகளைப் போன்ற பெரிய இடைவெளி இல்லாமல் கட்டப்படும் மற்றொன்று கல்லூரி இருக்கைகள் . உட்காரக்கூடாது என்பதற்காகவே கட்டியிருப்பார்கள் போலும். உணவு இடைவேளையில் நாம் பேசி முடித்தபின், தத்தமது டிப்பார்ட்மென்டுக்கு வந்து இருவரும் மௌனமாய் இருக்கும் சந்தர்ப்பங்களில், ஆயிரம் வார்த்தைகள் காற்றில் கதைகளாய்ப்  பரிமாற்றம் செய்யப்பட்டுக்கொண்டே இருந்தன. காதலிப்பதாய் ஒத்துக்கொண்டபின் எல்லாம் மாறிவிடுகிறது, அதற்கு முன்பு இருந்த காதலும்.

தீபாவளிக்கு முந்தைய இரவில் எந்தக் குழந்தையும் தூங்குவதில்லை. நெருங்க நெருங்க ஒன்றன்மீதான எதிர்பார்ப்பு அதிகமாக ஹார்மோன்கள் தூக்கத்தையெல்லாம் இரையாக்கத் தயங்குவதேயில்லை. கனவுகளை நிஜத்தில் வாழக்கிடைக்கும் சந்தர்ப்பங்களை விடுத்து, ஓய்வெடுத்தல் பெருஞ்சாபம் அல்லவா.  ஹைதராபாத்தில் உனக்கிருந்த கான்பரென்ஸுக்கு பைக்கில் பயணித்ததும் இப்படியாகத்தான் அமைந்தது. ஊருக்குத் திரும்புகையில் பைக்கை எங்கோ போட்டுவிட்டு, உன் கரம்பிடித்து இரவில் உன்னோடு பயணம் செய்தது, டோல் கேட் நிமிடங்களில் இறங்கி வெறுங்கால்களில் ஆறு வழிச்சாலையைக் கடந்து, அந்தப் பக்கத்தில் இருந்த ஒரு கடைக்குச் சென்று மீண்டும் வந்து தண்ணீர் பாட்டில் வாங்கியது வரை எல்லாம் அப்படியே நினைவுக்குள் என்னை அழுத்துகிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

என்னஞ்சல்

பிறகொரு நாள் இருவருமே எதிர்பார்த்திராத தருணத்தில் அது நடந்தது. முதல்முறையாக நம் உடல்கள் நாம் சொல்லமுடியா காரணங்களைப் பரிமாற்றம் செய்துகொண்டிருந்தன. அது தவறு என உணரும் நிலையில் அன்று இருவருமே இல்லை. அது அவன் என்றேன் நான். அவளாய் இருக்கக்கூடும் என்றாய் நீ. ஆயிரம் கனவுகளுடன் முளைத்த அவ்வுயிரை அதுவாக்கியதன் பாவம் முழுக்க என்னையே சாரும். இப்போதும் சாலையில் நடக்கும் சில சிறுவர்கள் அவனை நினைவுபடுத்துவார்கள். சமீபத்திய கிருஷ்ண ஜயந்தியோடு அவனின் வயது ஆறைத் தொட்டிருக்கும். வெளிப்புறத்தில் நாம் ஆயிரம் சூழ்நிலைகளை உருவாக்கிக்கொடுத்தாலும், ஓட்டை உடைத்துக்கொண்டு அக்கரு உயிருடன் வெளியே வருவதென்பது அதன் நிலைப்பாட்டில் தான் இருக்கிறது. இயற்கையை எல்லாச் சமயத்திலும் யாராலும் சிசேரியன் செய்ய முடியாது. ஆயிரம் காரணங்களை அடுக்கிவைத்து சமாதானம் செய்ய முயன்றாலும், தூக்கு மேடையில் நிற்கும் ஒருவனுக்கு அந்நொடி எப்படியிருக்கும் என அவனால் மட்டுமே சொல்ல முடியும். இப்போதும் அந்த முடிவை சரியென மட்டுமே நான் நினைக்கிறேன். நான் பிழையானவன், ஆனால் முடிவு சரி.

தனித்திருத்தலே பெருந்தவம் என வாழப்பழகி எனக்குச் சில ஆண்டுகள் ஆகிவிட்டன. இது எனக்கு நானே உருவாக்கிக்கொண்ட ஒரு பெரும் திரை. சாலையோர கீரைக்காரக் கிழவியைக்கூட ஏமாற்றிவிடக் கூடாது என வாழும் ஒருவனுக்கு வாழ்க்கை முழுக்க ஏமாற்றங்களை மட்டுமே இவ்வுலகம் பரிசளிக்குமாம். ஒன்றைப் புரிந்துகொள்ளுதல், உணர்தல், ஏற்றுக் கொள்ளுதல்  என இவை மூன்றின் நடுவில்தான் அதிகபட்ச இடைவெளி காணப்படுகிறது. இத்தனை ஆண்டுகளில் நான் உன்னை எப்படியெல்லாமோ நினைத்திருந்தாலும், உன் நிலைப்பாடு என்ன என்பதில் ஆயிரம் முறை முரண்பட்டு இருவரும் விலகியிருக்கிறோம். இனி பேசவே கூடாது என முடிவெடுத்த அத்தருணத்திலும், யாரைப் பற்றியும் கவலை கொள்ளாது இரக்கமின்றிக் கொட்டித் தீர்க்கும் மழைபோல், வார்த்தைகளை இக்காற்றில் மீண்டும் விதைத்துக்கொண்டிருந்தோம். ஏதோவொன்றுக்கு ஆசைப்பட்டு, அது கிடைக்காத விரக்தியில் அழுதுகொண்டே தூங்கும் குழந்தைபோல், இப்புவியில் என்றேனும் விருட்சமாகும் அவ்வார்த்தைகளோடு நாள்களைக் கடத்திக்கொண்டிருக்கும்...

அன்பில்லா 

நான்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism