Published:Updated:

கன்ட்ரோல் ரூம்

கன்ட்ரோல் ரூம்
பிரீமியம் ஸ்டோரி
கன்ட்ரோல் ரூம்

கன்ட்ரோல் ரூம்

கன்ட்ரோல் ரூம்

கன்ட்ரோல் ரூம்

Published:Updated:
கன்ட்ரோல் ரூம்
பிரீமியம் ஸ்டோரி
கன்ட்ரோல் ரூம்
கன்ட்ரோல் ரூம்

இரக்கமற்ற அதிகாரி!

நா
கை மாவட்டம் திட்டச்சேரி காவல் நிலையம் முன்பாகச் சமீபத்தில் ஒரு விபத்து. சிறப்பு உதவி ஆய்வாளர் ராஜதுரை, போலீஸ் வேனிலிருந்து இறங்கிச் சாலையைக் கடந்து காவல் நிலையம் செல்ல முயன்றார். அப்போது வேகமாக வந்த டூவீலர் மோதியதில், அவருக்குக் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. மாவட்டக் காவல் தலைமைக்கு இதுபற்றித் தகவல் கொடுத்தபோது, ‘‘சாலையைக் கடக்கத் தெரியாதவன் போலீஸ்காரனா? அவனெல்லாம் அப்படித்தான் அடிபடுவான். அதற்கென்ன செய்யறது” என இரக்கமில்லாமல் கமென்ட் வந்ததாம். இந்தச் செய்தி, சக காக்கிகளிடையே வைரலாகப் பரவ, ‘‘என்ன நடந்தாலும், நாளை நமக்கும் இதே கதிதானே...” என்று அவர்கள் மனம் வெதும்புகிறார்கள். 

கன்ட்ரோல் ரூம்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கன்ட்ரோல் ரூம்

லாட்ஜில் சிக்கிய எஸ்.ஐ!

நெ
ல்லையில் பெண் இன்ஸ்பெக்டர் பொறுப்பில் உள்ள ஸ்டேஷன் லிமிட்டில் பாலியல் தொழிலும், பணம் கட்டிச் சீட்டு விளையாடுவதும் கொடிகட்டிப் பறப்பதாகப் புகார் வந்தது. அதனால், தன் ஏரியாவில் உள்ள விடுதிகளில் ரெய்டு நடத்தினார் அந்தப் பெண் இன்ஸ்பெக்டர். தனியார் ஆம்னி பேருந்துகள் நிறுத்தும் இடத்துக்கு அருகிலுள்ள ஒரு லாட்ஜில் சோதனையிட்ட போலீஸார், உள்ளே இருந்த நபரைப் பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளனர். அவரை மறைக்கவும் முயன்றனர். வெளியில் நின்றுகொண்டிருந்த இன்ஸ்பெக்டர், “உள்ளே இருக்குற ஆளை வெளியே அனுப்புய்யா..’ என்று காட்டமாகக் கூறியுள்ளார். இதைத் தொடர்ந்து அந்த நபர் தலையைக் குனிந்தபடி, மெதுவாக வெளியே வந்திருக்கிறார். அவர் வேறு யாருமல்ல... அதே போலீஸ் ஸ்டேஷனில் வேலை பார்க்கும் எஸ்.ஐ. அவரைப் பார்த்தவுடன் இன்ஸ்பெக்டர் அதிர்ந்துவிட்டார். பெண் இன்ஸ்பெக்டரின் காலில் விழாத குறையாகக் கெஞ்சிக் கதறியுள்ளார் அந்த எஸ்.ஐ. தலையில் அடித்துக்கொண்டு அங்கிருந்து அகன்றுள்ளார் இன்ஸ்பெக்டர். இப்போது அந்த சப்-இன்ஸ்பெக்டர், ஸ்டேஷனுக்குக் குனிந்த தலை நிமிராமல் வந்துசெல்கிறார்.

கன்ட்ரோல் ரூம்

‘‘ஏவும் அதிகாரம் எனக்கு!’’

நா
கை மாவட்டத்தில் அதிகமான பிரச்னைகளைச் சந்திக்கும் குத்தாலம் காவல் நிலையத்தில் பணியாற்றும் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியன், எப்போதும் லேப்டாப் முன்பு அமர்ந்துள்ளார். புகார்களை கம்ப்யூட்டரில் ஏற்றி, கீழ்நிலை போலீஸாருக்குப் பிரித்துக் கொடுத்து, போனில் விரட்டி வேலை வாங்குகிறார். புகார் மனுவை எந்த போலீஸ் வாங்கி விசாரணை செய்கிறாரோ, அவர்தான் அந்த வழக்கை முடிக்க வேண்டும் என்பது இன்ஸ்பெக்டரின் உத்தரவு. புகார் கொடுத்தவர்கள் ஸ்டேஷனுக்கு வந்தாலும், பதில் கிடைக்காது. ‘‘உங்க புகாரை விசாரிக்கறவர் வெளியே போயிருக்கார். அவர்தான் வந்து பதில் சொல்லணும்’’ என்பார்களாம். ‘‘இப்படி அலையவிடுகிறார்களே’’ என்று புகார்தாரர்கள் புலம்புகிறார்கள். ‘‘நான் நேரில் போய் விசாரிக்க வேண்டிய அவசியமில்லை. போலீஸை ஏவி வேலைவாங்கும் அதிகாரம் மட்டும்தான் எனக்கு” என்று இன்ஸ்பெக்டர் கூறுகிறாராம். ‘‘போலீஸ் வாகனத்தில் ஏரியாவை இன்ஸ்பெக்டர் சுற்றிவந்தால்தானே குற்றவாளிகளுக்குப் பயம் இருக்கும்’’ என்று காவலர்கள் கேட்கிறார்கள்.

கன்ட்ரோல் ரூம்

ஆதாயம் தேடும் ஸ்பெஷல் பிராஞ்ச்!

தி
ருவள்ளூர் மாவட்ட ஸ்பெஷல் பிராஞ்சில் நீண்டகாலமாக இருந்தவர்கள் மற்றும் குற்றச்சாட்டுக்கு ஆளானவர்களை எஸ்.பி சிபிச்சக்கரவர்த்தி ட்ரான்ஸ்ஃபர் செய்தார்.  அந்த எஸ்.பி ட்ரான்ஸ்ஃபர் ஆன பிறகு, இவர்களில் பலரும் மீண்டும் ஸ்பெஷல் பிராஞ்சுக்கு வந்துவிட்டனர். எஸ்.பி ஆபீஸில் உள்ள மாவட்ட ஸ்பெஷல் பிராஞ்ச் அலுவலகத்திலும், பல போலீஸார் நீண்ட காலமாகப் பணியாற்றி வருகின்றனர். பவர்ஃபுல்லாக இருக்கும் சப்-இன்ஸ்பெக்டர் ஒருவர், தனக்கு வேண்டப்பட்டவர்கள்மீது குற்றச் சாட்டுகள் இருந்தால், அவர்களை ஸ்பெஷல் பிராஞ்சுக்குக் கொண்டு வந்து காப்பாற்றுகிறாராம். நீதிபதி ஒருவரின் பரிந்துரையின் பேரில் ஸ்பெஷல் பிராஞ்சுக்கு வந்துள்ள ஒருவரும் கல்லா கட்டுவதில் கில்லாடியாக இருக்கிறாராம். காவல் நிலையங்களில் பதிவாகும் குற்றச்சம்பவங்களைத் தலைமைக்குத் தெரிவிக்காமல், ஸ்பெஷல் பிராஞ்ச் போலீஸார் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்தி ஆதாயம் தேடிக் கொள்கிறார்களாம். ‘‘புதிய எஸ்.பி பொன்னி, இவர்கள்மீது நடவடிக்கை எடுக்கவேண்டும்’’ என்கிறார்கள் நேர்மையான போலீஸார் சிலர்.

கன்ட்ரோல் ரூம்

களைகட்டுது கேரள லாட்டரி!

தி
ருச்சி மாநகர போலீஸ் கமிஷனராக அருண் இருந்தபோது, தனிப்படை அமைத்து லாட்டரி அதிபர் மனோகரன் மற்றும் அவரின் கூட்டாளிகளை, கடந்த ஆண்டு கைது செய்தார். மனோகரன், குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டார். அப்போது திருச்சி கோட்டை, உறையூர், காந்தி மார்க்கெட் உள்ளிட்ட காவல் நிலையங்களில் பணியாற்றிய 11 போலீஸார், லாட்டரி கும்பலிடம் பணம் வாங்கிக்கொண்டு செயல்பட்டது தெரியவந்தது. லாட்டரி அதிபருக்கு சில பெண் போலீஸார், ‘மாமா... மை டியர்’ என மெஸேஜ் அனுப்பி உறவாடியதும் தெரியவந்தது. இதனையடுத்து, லாட்டரி விற்பனைக்குத் துணைபோன இன்ஸ்பெக்டர்கள், எஸ்.ஐ-கள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு ட்ரான்ஸ்ஃபர் செய்யப்பட்டனர். கமிஷனர் அருண் ட்ரான்ஸ்ஃபரில் சென்றுவிட்டதால், லாட்டரிக்கு ஆதரவான போலீஸார் பலரும் மீண்டும் திருச்சிக்கு வர முயற்சி செய்கிறார்களாம். திருச்சி காந்தி மார்க்கெட், உறையூர், வரகனேரி பகுதிகளில் கேரள லாட்டரி எனும் பெயரில் மீண்டும் லாட்டரி விற்பனை களைகட்ட ஆரம்பித்துள்ளது. ‘‘இதைக் கண்டுகொள்ளாமல் இருக்கும் போலீஸார் காட்டில் மழை” என்கிறார்கள் திருச்சி மக்கள்.

-  காக்கி சான்
ஓவியங்கள்: ரமணன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism