Published:Updated:

‘குட்’ டாக்டரும்... ‘குட்கா’ டாக்டரும்! - விஜயபாஸ்கரை விளாசிய தினகரன்

‘குட்’ டாக்டரும்... ‘குட்கா’ டாக்டரும்! - விஜயபாஸ்கரை விளாசிய தினகரன்
பிரீமியம் ஸ்டோரி
‘குட்’ டாக்டரும்... ‘குட்கா’ டாக்டரும்! - விஜயபாஸ்கரை விளாசிய தினகரன்

‘குட்’ டாக்டரும்... ‘குட்கா’ டாக்டரும்! - விஜயபாஸ்கரை விளாசிய தினகரன்

‘குட்’ டாக்டரும்... ‘குட்கா’ டாக்டரும்! - விஜயபாஸ்கரை விளாசிய தினகரன்

‘குட்’ டாக்டரும்... ‘குட்கா’ டாக்டரும்! - விஜயபாஸ்கரை விளாசிய தினகரன்

Published:Updated:
‘குட்’ டாக்டரும்... ‘குட்கா’ டாக்டரும்! - விஜயபாஸ்கரை விளாசிய தினகரன்
பிரீமியம் ஸ்டோரி
‘குட்’ டாக்டரும்... ‘குட்கா’ டாக்டரும்! - விஜயபாஸ்கரை விளாசிய தினகரன்

பெரும் போராட்டத்துக்குப் பிறகு நீதிமன்ற உத்தரவின் மூலம் டி.டி.வி.தினகரன் நடத்திய நிகழ்ச்சியாலும், அதற்குப் போட்டியாக அமைச்சர் விஜயபாஸ்கர் நடத்திய விழாவாலும் புதுக்கோட்டை மாவட்டம் பரபரத்தது.

தினகரனால் தமிழகத்தின் பல பகுதிகளிலும் நிகழ்ச்சிகளில் சுலபமாகப் பங்கேற்க முடிந்தாலும், புதுக்கோட்டை மாவட்டத்தில் மட்டும் நுழையவே முடியவில்லை. போலீஸார் மூலம் அமைச்சர் விஜயபாஸ்கர் கொடுத்த நெருக்கடிகளே அதற்குக் காரணம். புதுக்கோட்டை மாவட்டத்தில் தினகரன் பங்கேற்கும் நிகழ்ச்சிகளுக்காக, அ.ம.மு.க-வின் புதுக்கோட்டை தெற்கு மாவட்டச் செயலாளர் பரணி கார்த்திகேயன் பலமுறை முயற்சி செய்தும், போலீஸ் அனுமதி மறுக்கப்பட்டது. கடைசியில், நீதிமன்ற உத்தரவுபெற்று கடந்த 15-ம் தேதி புதுக்கோட்டை திருவப்பூர் அருகேயுள்ள நத்தம் பண்ணையில் அண்ணா பிறந்தநாள் பொதுக்கூட்டத்தை அ.ம.மு.க-வினர் பிரமாண்டமாக நடத்தினர். புதுக்கோட்டை - திருச்சி நெடுஞ்சாலை நெடுகவே, ‘நாளைய முதல்வரே!’, ‘சிம்மசொப்பனமே!’ என தினகரனுக்கு விதவிதமான கட்-அவுட்டுகள் வைத்து அ.ம.மு.க-வினர் அதகளப்படுத்தினர்.

‘குட்’ டாக்டரும்... ‘குட்கா’ டாக்டரும்! - விஜயபாஸ்கரை விளாசிய தினகரன்

இதற்குப் போட்டியாக, அடுத்த நாளே அண்ணா பிறந்தநாள் விழாவுடன், நாட்டுப்புறப் பாடகர் செந்தில்கணேஷ், ராஜலெட்சுமி, செல்ல.தங்கையா ஆகியோர் பங்கேற்கும் நாட்டுப்புறக் கலைத் திருவிழா மற்றும் நாட்டுப்புறக் கலைஞர்களுக்குப் பொற்கிழி வழங்கும் விழாவையும் நடத்துவதற்கு விஜயபாஸ்கர் திட்டமிட்டார். தினகரன் வந்த அதே நாளில், அமைச்சர் விஜயபாஸ்கர் புதுக்கோட்டை மாவட்டம் களமாவூரில் கட்டப்பட்ட புதிய ஆரம்ப சுகாதார நிலையத்தைத் திறந்து வைப்பதாக இருந்தது. ‘புதுக்கோட்டை மன்னனே’, ‘அரசியல் மேதையே’, ‘மக்களின் காவலனே’ என விஜயபாஸ்கரை வரவேற்று பிரமாண்டமான பேனர்கள் வைத்தனர் அ.தி.மு.க-வினர். தினகரன் பொதுக்கூட்டத்தாலும், தனக்கு அமைப்புச் செயலாளர் பொறுப்பு வழங்க இருப்பதை அறிந்தும் விஜயபாஸ்கர் இந்த நிகழ்ச்சிகளை ஒத்திவைத்தார்.

இப்படியான பரபரப்புகளுக்கு இடையே அண்ணா பிறந்தநாள் விழாப் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டதினகரன், கட்சியின் மூத்த நிர்வாகிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அவர் பேசுகையில், “இந்தியாவுக்கே வழிகாட்டியாக விளங்கிய டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி பிறந்த புதுக்கோட்டையில், இப்போது ஒரு டாக்டர் இருக்கிறார். டாக்டர் நல்லவர் என்றால், ‘குட் டாக்டர்’ என்போம், ஆனால் இந்த டாக்டர், ‘குட்கா’ டாக்டர். அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் சோதனை செய்யாத துறைகளே இல்லை. தொடர்ந்து ஊழல் குற்றச்சாட்டில் சிக்கி வருகிறார். ஆனால், அவருக்கு அமைப்புச் செயலாளர் பதவி கொடுத்துள்ளார்கள்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

‘குட்’ டாக்டரும்... ‘குட்கா’ டாக்டரும்! - விஜயபாஸ்கரை விளாசிய தினகரன்

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் ஓட்டுக்கு ஆறாயிரம் ரூபாய் கொடுத்தும், அவர்களால் வெற்றிபெற முடியவில்லை. ஆனாலும் நடைபெற உள்ள திருப்பரங்குன்றம், திருவாரூர் இடைத்தேர்தல்களில் வெற்றி பெறுவோம் என அ.தி.மு.க அமைச்சர்கள் பேசி வருகிறார்கள். இடைத்தேர்தலில் நாங்கள் போட்டியிடத்தான் போகிறோம். வெற்றிபெறுவது மட்டுமல்லாமல், அ.தி.மு.க-வை டெபாசிட் இழக்கச் செய்வோம்.

இரண்டு மாதங்களுக்கு முன் நான் நடைப்பயிற்சி சென்றபோது, என் எதிரே வந்த விஜயபாஸ்கர் எனக்கு வணக்கம் வைத்தார். முதல்வர் எடப்பாடி பழனிசாமி தன்னைக் கைவிட்டு விட்டதாக அவர் கலங்கினார். அமைச்சர் வேலுமணி அடித்த 800 கோடி ரூபாய் கொள்ளை தற்போது அம்பலமாகியுள்ளது. தெரிந்தது இவ்வளவுதான், தெரியாமல் இன்னும் நிறைய இருக்கின்றன.  அமைச்சர்கள் செல்லூர் ராஜு, உதயகுமார், வேலுமணி ஆகியோர் என்ன செய்வது என்று தெரியாமல் தடுமாற்றத்துடன் இருக்கிறார்கள். துரோகிகளை அரசியலிலிருந்து ஓரங்கட்டத்தான், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் ஆரம்பித்தோம்” என்று முடித்தார்.

‘குட்’ டாக்டரும்... ‘குட்கா’ டாக்டரும்! - விஜயபாஸ்கரை விளாசிய தினகரன்

தினகரன் பேசிய பேச்சுகளைப் பொறுக்க முடியாத விஜயபாஸ்கர், தான் நடத்தும் கலைத்திருவிழாவைப் பிரமாண்டப்படுத்த ஏற்பாடு செய்தார். அதனால், மாவட்டம் முழுவதிலுமிருந்து கட்சி சார்பற்ற பொதுமக்கள் பரவலாக வந்திருந்தனர். விஜயபாஸ்கரின் மனைவி, தாய், தந்தை ஆகியோர் மேடையின் அருகே அவரின் வருகைக்காகக் காத்திருந்தனர். இந்த நிகழ்ச்சிக்காக, 16-ம் தேதி மாலை சென்னையிலிருந்து விமானம் மூலம் திருச்சி வந்த விஜயபாஸ்கர், அங்கிருந்து காரில் புதுக்கோட்டை வந்தார். அமைப்புச் செயலாளராகப் பொறுப்பேற்ற பிறகு, புதுக்கோட்டைக்கு வருகைதரும் அவரை வரவேற்று, புதுக்கோட்டை- திருச்சி சாலை நெடுக்க, புதிய கட் – அவுட்டுகள் பளபளத்தன. அவர் மேடைக்கு வந்து சேர்ந்தபோது, மழை ஆரம்பித்தது. சுமார் மூன்று மணி நேரம் வெளுத்து வாங்கிய மழையால், நிகழ்ச்சி அடுத்தநாள் ஒத்திவைக்கப்பட்டது.

அவர் ஏற்பாடு செய்த, திலகர் திடலில் அடுத்த நாள் விஜயபாஸ்கருக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்த மாவட்ட தி.மு.க தேதி வாங்கி கிலி கிளப்பியிருக்கிறது.

மருத்துவர் ‘நலமாக’ இல்லை என்பதுதான் இப்போதை நிலவரம்!

- சி.ய.ஆனந்தகுமார்
படங்கள்: தே.தீட்ஷித்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism