Published:Updated:

கிளி ஜோசியம் பார்க்கலையோ கிலி ஜோசியம்!

கிளி ஜோசியம் பார்க்கலையோ கிலி ஜோசியம்!
பிரீமியம் ஸ்டோரி
கிளி ஜோசியம் பார்க்கலையோ கிலி ஜோசியம்!

கிளி ஜோசியம் பார்க்கலையோ கிலி ஜோசியம்!

கிளி ஜோசியம் பார்க்கலையோ கிலி ஜோசியம்!

கிளி ஜோசியம் பார்க்கலையோ கிலி ஜோசியம்!

Published:Updated:
கிளி ஜோசியம் பார்க்கலையோ கிலி ஜோசியம்!
பிரீமியம் ஸ்டோரி
கிளி ஜோசியம் பார்க்கலையோ கிலி ஜோசியம்!

மிழ்நாட்டின் பல முக்கியமோ முக்கியமான வி.ஐ.பி-களுக்குக் கிளி ஜோசியம் பார்க்கலாம் என்று முடிவெடுத்தோம். 

கிளி ஜோசியம் பார்க்கலையோ கிலி ஜோசியம்!

சென்டிமென்டாக, கிளியைக் கையில் வைத்திருக்கும் மீனாட்சி ஆளும் மதுரையிலிருந்து தொடங்குவதென்று நினைத்தோம். நம் நேரமோ என்னவோ தெரியவில்லை,  நகருக்குள் ஒரு கிளி ஜோசியரையும் காணோம். பின்பு மதுரை மாவட்டம் முழுக்கச் சுற்றி வந்து குருவித்துறையில் பிடித்தோம்.

எடப்பாடி பழனிசாமி

ஜோசியர் மணிகண்டன், “ஒரு பேருக்கு ஜோசியம் சொல்ல இருபது ரூபாய், பேர் சொல்லுங்க’’ என்றார்.  “முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி’’ என்றதும், ஷாக் ஆனார். “சார் நான் இந்தக் கிளியை நம்பித் தொழில் செஞ்சுட்டு வர்றேன். பெரிய இடத்துப் பொல்லாப்பு வந்திடக் கூடாது சார்’’ என்றார்.

‘`நீங்களா ஜோசியம் சொல்லப்போறீங்க, சிங்காரம் (கிளி) சொல்றதைத்தானே சொல்லப் போறீங்க... மக்களின் எதிர்காலத்துக்காகப் பல திட்டங்களைக் கொண்டு வருகிற முதலமைச்சரின் எதிர்காலத்தைப் பத்தித் தெரிஞ்சுக்க மக்கள் ஆசைப்படக் கூடாதா?’’ என்றதும், ஒருவழியாகத் தயங்கித் தயங்கிப் பார்க்க ஆரம்பித்தார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கிளி ஜோசியம் பார்க்கலையோ கிலி ஜோசியம்!

கூண்டைத் திறந்ததும் வேகமாக வந்த சிங்காரம் நாலாவது சீட்டை எடுத்துக் கொடுத்தது. உள்ளே முருகன் படம். ‘‘முருகனின் பெயர் கொண்ட எடப்பாடி பழனிசாமிக்கு முருகன் படமே வந்துள்ளதன் மூலம் அவர் தொட்ட காரியம் அனைத்தும் வெற்றிதான். அதே நேரம் அவருக்கு எதிர்ப்புகள் இருந்துகொண்டே இருக்கும். அதையெல்லாம் சமாளிக்கணும்’’ என்றார். நம்மைப்போலவே கிளியும் அவரை வியப்பாகப் பார்த்தது. பழனியின் சாமி முருகன்தானே!

குஷ்பு
 
“தமிழ்நாட்டில் சிறந்த நடிகை, பெரும் புகழுக்குச் சொந்தக்காரர் அக்கா குஷ்பு பேரால ஒரு சீட்டெடுத்துப் போடு’’ என்றதும், இரண்டாவது சீட்டை எடுத்துப் போட்டது, ‘`குஷ்புக்கு சிவபெருமான் வந்திருக்காரு. உடல் நலமும் தொழிலும்  91 வயசு வரை சிறப்பா இருக்கும். அவங்களிடமிருந்த கெட்டதுகள் ஆடி மாசத்துலேருந்து விலகிடுச்சு. இனி தொட்டது துலங்கும். எல்லாம் வெற்றிதான்’’ என்றார் உற்சாகமாக. சுந்தர்.சி பேரைச் சொல்லியிருந்தா பார்வதி சீட்டு வந்திருக்குமோ?!

சீமான்

சீமான் பெயரைச் சொன்னதும், வெளியே வந்து கொஞ்ச நேரம் சும்மா நின்றுவிட்டு, பிறகு நான்காவது சீட்டெடுத்துப் போட்டது. ‘`அண்ணன் சீமான் அவர்களுக்கு விநாயகரும், மணிகண்ட பிரபுவும் காட்சி தந்திருக்கிறார்கள்.  சில காலங்களாக ஏமாற்றங்களைக் கண்ட சீமானுக்கு இனி வரும் காலம் ஏற்றமாக மாறும்.எந்தப் போராட்டம் நடத்தினாலும்  வெற்றி கிடைக்கும்’’ என்றார். முப்பாட்டன் சீட்டு வரலையே ஒறவுகளே?!

எச்.ராஜா

கிளி ரொம்பத் தயங்கி தயங்கி தயங்கி சீட்டு எடுத்தது. 7வது சீட்டெடுப்பதற்குள் ஒரு வழியாகிவிட்டது. “எச்.ராஜாவின் பெயருக்கு ஆஞ்சநேயர் வந்திருக்கார். இவருக்குச் சில பிரச்னைகள் இருந்தாலும்  2018 ஆம் ஆண்டுக்குள் நல்ல விஷயம் நடக்கவுள்ளது. இனி அவருக்கு அரசியலிலும் குடும்பத்திலும் உடல் நலத்திலும் எந்தப் பிரச்னையுமில்லை’’ என்றார். அவருக்கு எந்தப் பிரச்னையும் இல்லை, அவராலதானே மத்தவங்களுக்குப் பிரச்னை!

இடம் : கோவை வ.உ.சி பூங்கா வாசல்

கிளி பெயர்: கணேஷ்

ஜோசியக்காரர்  பெயர் : செல்வராஜ்

 செல்லூர் ராஜூ

மூன்று முறை பெயரைச் சொல்லியும் கூண்டை விட்டு வெளியே வர அடம்பிடித்த கிளி, (மதுரைக்கார விஞ்ஞானிங்கிற பயம் இருக்கட்டும்) வெளியே வந்ததும் யோசிக்காமல் ஒரு சீட்டைக் கவ்வி, தன் எஜமானரிடம் ஒப்படைத்துவிட்டு உள்ளுக்குள் ஓடியது. 

கிளி ஜோசியம் பார்க்கலையோ கிலி ஜோசியம்!

“வினை தீர்ப்பவன் விநாயகனே வந்திருக்கிறார். லக்கன யோகம், கொடிகட்டி வாழோணும்ங்கிற யோகம் அமையுது. மனிதர்களுடைய சப்போர்ட் கிடையாது. தெய்வத்துடைய சப்போர்ட்தான். இவருக்கு அடிமைத்தொழிலே ஆகாது. மனைவியுடைய யோகத்தில்தான் அவர் சாதிப்பார். வார்த்தை ஸ்தானத்துல எவ்வளவு பிரச்னை வந்தாலும் அவரை பாதிக்காது” தெர்மாகோலில் ஒரு கூண்டு செஞ்சுகொடுங்க சார்!

ஜெ.தீபா

தீபா பெயரைச் சொன்னதும் ‘சீட்டை நீங்கள்தான் எடுக்க வேண்டும்’ என்பதைப்போல கிளி கொடுத்த ரியாக்‌ஷன் ஆஸம். தீபாவின் பெயருக்கு வந்தவர் வரம் பெற்ற ஐயப்பன். “இவரோடது தவபுத்ர வாழ்க்கை. ஆணுக்குள்ள திறமை வைராக்கியம் அப்படியே இந்த மங்கைக்கு உண்டு. குடும்பத்தில் எத்தனை குழப்பங்கள் வந்தாலும் பாதிக்காது. மலைபோல் பிரச்னை வந்தாலும் பனிபோல் தீரும். அதற்கு மூன்று அமாவாசை குலதெய்வத்தைக் கும்பிடணும்” அப்போ கட்சிக்கூட்டம், பிரசாரம் இதெல்லாம் தேவையில்லையாங்ணா?

கிளி ஜோசியம் பார்க்கலையோ கிலி ஜோசியம்!

மு.க.ஸ்டாலின்

“ஆத்தா பண்ணாரி மாரியம்மனே வந்திருக்கா.வாக்கு ஸ்தானத்துல எதிர்பாக்குற அளவுக்கு யோக திசை இருக்கு. பேரும் புகழும் கொண்டு உயர்ந்த இடத்தில் உட்காருவார். குடும்பத்தில் ஐம்பத்திரண்டு வேதனைகள் வரும். (அழகிரி தருகிற ஒரு வேதனை போதாதா...) ஆனால், பாதிக்காது. பொறுமை கூடினால் பெருமை தேடி அமையும். ஆத்திரப்பட்டு இறங்கினால் கொஞ்சம் தடங்கல் ஆகும்.” கிட்டத்தட்ட சரியாத்தான் இருக்கு கிளியாரே!

இடம் : தஞ்சாவூர் பெரிய கோயில் அருகே

கிளி ஜோசியக்காரர் பெயர் : சேகர்

கிளியின் பெயர் : கணேசன்

ஓ.பன்னீர் செல்வம்

“ஓபிஎஸ் பெயருக்கு சிவனும் பார்வதியும் வந்திருக்காங்க. இதுவரை ஆடாத ஆட்டம் போடாத வேஷம் எல்லாம் போட்டுட்டார். கேட்கக் கூடாதவங்க பேச்சைக் கேட்டு நடந்தார். மீண்டும் இவர் முதல்வர் ஆகிற யோகம் இருக்கு. அதிலும் பல சிக்கல்கள் வரும். ஆனால் அவை எல்லாம் விலகும். இவருக்கு இருக்கும் பிரச்னைகள் நீங்க, குலதெய்வக் கோயிலில் யாகம் வளர்த்து பூஜைகள் செய்ய வேண்டும்.’’ தியானம் செஞ்சா போதாதா?

இடம் : தஞ்சாவூர் பெரிய கோயில் அருகே

ஜோசியர் பெயர்  ; வேந்தப்பன்

கிளியின் பெயர் : அழகன் 

கிளி ஜோசியம் பார்க்கலையோ கிலி ஜோசியம்!

விஜய்

“ஆஹா, அந்த அழகன்  ஐயப்பனே  நம்ம விஜய்க்கு வந்திருக்கார். தம்பிக்கு அரசியல் மேல ஒரு ஈடுபாடு உண்டு. இவர் அப்பா இவரை ஒரு இடத்தில் உட்கார வைக்க வேண்டும் என நினைக்கிறார். ஆனால் இவர் இப்ப அரசியலுக்கு வரக்கூடாது.  51 வயசில்  அரசியலுக்கு வந்தால் முதல்வர் நாற்காலி இவருக்குத்தான். 78 வயசு வரை யாராலும் அசைக்க முடியாது. மனசு நல்ல மனசு. மக்களோட செல்வாக்கு இருக்கு.”

இதில் விஜய் ரசிகர் யார், கிளி ஜோசியக்காரரா, கிளியா?

நயன்தாரா

“கோலமாவு கோகிலாவுக்கு வந்திருப்பது பிள்ளையார். எதற்கும் கவலைப்பட மாட்டார். அவர் ஜாதகத்துல கிரகம் கண்டம் எல்லாம் விலகிடிச்சு. அவர் வளர்ச்சியைப் பார்த்து ஏகப்பட்ட பேர் போட்டி பொறாமைப்படுறாங்க. இருந்தாலும் வெற்றி உச்சத்தில் இருக்கும்.இவரைக் கட்டிக்கப் போறவர் ரொம்பவே கொடுத்து வைத்தவர்.”

கிளியே வெட்கப்படுதுங்கோ!  
                             
இடம் : திருப்போரூர் கந்தசாமி கோயில் அருகில்

ஜோசியக்காரர் பெயர் : சீனுவாசன்

டி.டி.வி.தினகரன்

“டி.டி.வி தினகரன் பெயருக்கு வள்ளி தெய்வானையோடு முருகப்பெருமான் மங்களகரமா வந்திருக்கார். அவர் எதிர்பார்த்த காரியமெல்லாம் ஜெயமாகும். எதிரிகள் ஒழிந்து, பட்டாபிஷேகம் சூடக்கூடிய நேரம் நெருங்கி வந்திகிட்டு இருக்கு. எல்லோரும் அவரைத் தேடிப் போகும் நேரம் வந்திருப்பதால், இனிமேல் அவருக்கு யோகம்தான்.” 

கிளி ஜோசியம் பார்க்கலையோ கிலி ஜோசியம்!

தட்சணையாக ‘20 ரூபாயை’ நாம் நீட்ட, முறைத்தார் கிளி ஜோசியக்காரர்.

வைகோ

“ஆஞ்சநேயர் வந்திருக்காரு. இவர் யாருக்கும் பயப்பட மாட்டார். ஆனா, அவர் எடுக்கக் கூடிய காரியமெல்லாம் ஆத்துல ஒரு கால் சேத்துல ஒருகால்னு எடுத்துக்கிட்டிருக்கிறார். எதிர்ப்பாதையில் சென்றுகொண்டிருப்பதால், அவருக்கு எல்லாமே எதிர்ப்பாகத்தான் போய்க்கொண்டிருக்கும்” ஏன்ன்ன்?

நரேந்திர மோடி

“திருப்பதி வெங்கடாசலபதி வந்திருக்கிறார். பணக்காரச் சாமியும் அவர்தான், கடன்கார சாமியும் அவர்தான். வெளிப்படையா சந்தோஷம், அமைதி எல்லாமே இருப்பதுபோலத் தெரியும். ஆனா உள்ளுக்குள்ள நிறைய சங்கடங்களும் பிரச்னைகளும் எதிர்ப்பும் நிறைய இருக்கு. அதை எல்லாத்தையும் எதிர்த்துப் போராடக் கூடிய நேரம் வந்திருக்கு. இனிவரும் காலங்கள் பிரச்னைகள் நிறைந்ததா இருக்கு. அதை எதிர்த்துச் சமாளிப்பது ரொம்பக் கஷ்டம். எதிர்ப்பு, தடங்கல் நிறையவே இருக்கு.” ஏழைத்தாயின் மகனுக்கு இப்படியொரு நிலைமையா?

இதுல எதெல்லாம் உண்மையோ இல்லையோ, எதெல்லாம் நடக்குதோ இல்லையோ, கிளி ஜோசியம் கேட்கிறப்போ ஜாலியாத்தான் இருக்கு.

செ.சல்மான், கே.குணசீலன், பா.ஜெயவேல், எம்.புண்ணியமூர்த்தி.

- படங்கள்: தி.விஜய், ஈ.ஜெ.நந்தகுமார், ம.அரவிந்த்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism