Published:Updated:

“சீக்கிரம் கோலிவுட்டுக்கு வருவேன்!”

“சீக்கிரம் கோலிவுட்டுக்கு வருவேன்!”
பிரீமியம் ஸ்டோரி
“சீக்கிரம் கோலிவுட்டுக்கு வருவேன்!”

“சீக்கிரம் கோலிவுட்டுக்கு வருவேன்!”

“சீக்கிரம் கோலிவுட்டுக்கு வருவேன்!”

“சீக்கிரம் கோலிவுட்டுக்கு வருவேன்!”

Published:Updated:
“சீக்கிரம் கோலிவுட்டுக்கு வருவேன்!”
பிரீமியம் ஸ்டோரி
“சீக்கிரம் கோலிவுட்டுக்கு வருவேன்!”

வித்யா வோக்ஸ்... யூடியூப் ஸ்டார். இந்திய இசையை வெஸ்டர்ன் பீட்களுடன் கலந்து கொடுக்கும் இவரின் தனித்துவமான பாடல்களைக் கேட்பவர்கள் ‘வாவ்’ மூடுடன்தான் கடந்துசெல்வார்கள். ஸாரி... கேட்பார்கள், கடந்துசெல்ல மாட்டார்கள். மூன்று வருடங்களுக்கு முன் யூடியூபில் ஒரு சுதந்திர இசைக் கலைஞராக (Independent artist) பயணிக்க ஆரம்பித்தவர், ‘தமிழ் பார்ன் கில்லா’, ‘குத்து ஃபயர்’ என ஹிட்ஸ் கொடுத்தார். 4.7 மில்லியன் சந்தாதாரர்களை அள்ளிவைத்துக்கொண்டு, இன்று உலக இசைப்பயணம் சென்று கொண்டிருக்கிறார். அமெரிக்காவில்  வசிக்கும் சென்னைத் தமிழச்சி வித்யாவை இ-மெயிலில் பிடித்தேன்.

“சீக்கிரம் கோலிவுட்டுக்கு வருவேன்!”

“வித்யா உங்கள் பெயர். அதென்ன வித்யா வோக்ஸ்?”

“லத்தீன் மொழியில ‘வோக்ஸ்’னா குரல்னு அர்த்தம். நான் பாடிய பாடல்களை என் நண்பர் சங்கர் டிக்கர், அவரோட சிஸ்டம்ல ‘வித்யா வோக்ஸ்’ என்ற ஃபைல் நேம்ல சேவ் பண்ணுவார். யூடியூப் சேனல் ஆரம்பிச்சப்போ, வித்தியாசமான பேருக்காக யோசிச்சேன். ‘இந்தப் பெயரையே வைக்கலாமே’னு அவர் சொல்ல, எனக்கும் அது பிடிச்சிருந்தது.’’

“சென்னை..?”


“எட்டு வயசுவரை அங்கேதான் வளர்ந்தேன். அங்க அண்ணாநகர்லதான் என் பாட்டி வீடு இருக்கு. சின்ன வயசுல பாட்டியின் தோட்டத்துக்கு நானும் என் தங்கச்சியும் தண்ணி ஊத்தினது, இளநீர் பறிச்சுக் குடிச்சது, மாம்பழம் சாப்பிட்டதுனு எல்லாம் பியூட்டிஃபுல் மெமரீஸ். என்னுடைய ‘குத்துஃபயர்’ ஆல்பத்துக்கு சென்னைக் குத்துப் பாடல்கள்தான் இன்ஸ்பிரேஷன். இப்படி சென்னை எப்பவுமே என் மனசுக்கு நெருக்கமானது. இப்பவும் அங்க அடிக்கடி வந்து போயிட்டுதான் இருக்கேன்.’’

“இந்தியாவில் சுதந்திர இசைக்கலைஞர்களின் வளர்ச்சி எப்படியிருக்கிறது?”

“ரொம்ப நல்லா இருக்கு. இண்டி பெண்டன்ட் மியூசிக்கில் சமூக வலைதளங்களோட பங்கு ரொம்ப முக்கியமானது.  ரெக்கார்டு லேபிள் (Record Label) இல்லாம, மக்கள்கிட்ட நம்ம இசையை சுலபமா கொண்டுபோய்ச் சேர்க்க அந்தக் கருவிதான் நமக்கு உதவுது. இந்த வளர்ச்சி இன்னும் பிரமாண்டத்தை நோக்கி நகரும்.’’

“தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்திப் பாடல்களை ஆங்கில பாப் சாங்ஸுடன் ‘மாஷ் அப்’ செய்யும் உங்களின் பாடல்கள் செம ஹிட்டானதன் காரணமாக எதை நினைக்கிறீர்கள்..?”


“இதைப் புது ஐடியானு சொல்ல மாட்டேன். சீனியர்ஸ் இந்த வகை இசை நிறைய செஞ்சுட்டாங்க. கர்னாடக சங்கீதம், இந்திய மொழித் திரைப்பாடல்கள், வெஸ்டர்ன் இசைனு இவை எல்லாத்தையுமே கேட்டு, ரசிச்சு, பாடி வளர்ந்த பொண்ணு நான் என்பதால, எனக்கு இந்த ஃப்யூஷன் ரொம்ப நேச்சுரலாவே கைவந்தது.’’

“உங்கள் குரல் மட்டுமல்ல, லிரிக்ஸும் அழகு. கவிதாயினி வித்யா பற்றி..?”


“என் வாழ்க்கை அனுபவங்களிலிருந்து தான் என் வரிகள் பிறக்கும். குறிப்பா, சோகப் பாட்டுகள் என்னால நிறைய எழுத முடியும். இந்திக் கவிஞர் கபீர் முதல் வளர்ந்துவரும் பெண் கவிஞர் ரூபி கெளர் வரை பலரின் மொழியும் என் மனசுக்குப் பிடித்தமானவை.’’

“கோலிவுட் அழைப்புகள் வந்திருக்குமே?”

“ தமிழ் சினிமா வாய்ப்புகள் நிறைய வந்தன. இசைப் பயணத்தில்தான் அதிகம் கவனம் செலுத்துறேன். பிடிச்ச விஷயமாக இருந்தா நிச்சயம் செய்வேன். இப்போ என்னுடைய முதல் முழு நீளத் தமிழ்ப் பாடலுக்காக வேலைபார்த்துட்டிருக்கோம். என் இசைப் பயணத்துக்காக சங்கர் டிக்கர்  இசையில் மதன் கார்க்கி அந்தப் பாடலை எழுதியிருக்கார். ’’

எம்.ஆர். ஷோபனா

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism