Published:Updated:

கடிதங்கள்: மனிதநேயமும் பேரன்பும்!

கடிதங்கள்: மனிதநேயமும் பேரன்பும்!
பிரீமியம் ஸ்டோரி
கடிதங்கள்: மனிதநேயமும் பேரன்பும்!

கடிதங்கள்: மனிதநேயமும் பேரன்பும்!

கடிதங்கள்: மனிதநேயமும் பேரன்பும்!

கடிதங்கள்: மனிதநேயமும் பேரன்பும்!

Published:Updated:
கடிதங்கள்: மனிதநேயமும் பேரன்பும்!
பிரீமியம் ஸ்டோரி
கடிதங்கள்: மனிதநேயமும் பேரன்பும்!

னிமொழியின் விரிவான பேட்டி, பல சந்தேகங்களுக்குப் பதிலளித்தது. வெறுமனே அரசியல் என்றில்லாமல் இலக்கியம், எழுவர் விடுதலை என்று அமைந்தது சிறப்பு.

 - நல்லசிவன், கல்லிடைக்குறிச்சி.

கடிதங்கள்: மனிதநேயமும் பேரன்பும்!

ரூபாய் நோட்டோடு கசக்கப்படுகிற ஊழல் அமைச்சர்கள் என இந்த வார கார்ட்டூன் அபாரம். ஹாசிப் அண்ணே அசத்திட்டீங்க..

- சரவணன், பல்லாவரம்

பாலிவுட் இயக்குநர் அனுராக் காஷ்யப் பேட்டியில் கேள்விகளும் பதில்களும் நேர்த்தியாக இருந்தன. அனுராக்கை இன்னொரு வில்லன் நடிகர் எனக் கடந்திருப்போம். அவரை அறிமுகப்படுத்தியதற்கு நன்றி.

- ஆர்.பிரபுராஜன், சூலூர்.


ன்னர் அரசியல்வாதி ஜோக்குகளை விட்டால் உங்களுக்கு வேறுமாதிரி ஜோக்கே எழுதவராதா ஜோக் எழுத்தாளர்களே... விகடனாரே நீங்களாச்சும் இதையெல்லாம் தட்டிக்கேட்கக் கூடாதா?

- வி.தமிழ்ச்செல்வி, ராமேஸ்வரம்

`மேற்குத்தொடர்ச்சி மலை’ படக்குழு பற்றிய கட்டுரை அழகு. வாழ்த்துகள்.

- எம்.விஜயகுமார்,  www.vikatan.com

Hercules, Apocalypto, Avatar, Baahubali 1 & 2 ஆகிய படங்களின் மொத்த உழைப்பு, பணம், பொருள், காலம், மனித வளம், தொழில்நுட்பம் என்று அத்தனையும் ஒன்றிணைந்தால் மட்டுமே ‘வேள்பாரி’ முழுமையான திரைப்படமாக உருவாக முடியும்.

- பழனி, www.vikatan.com


சூப்பர் சிங்கரில் குட்டிப் பசங்களாக இருந்தவர்களை இப்போது பார்க்கவும் அவர்கள் பற்றித் தெரிந்துகொள்ளவும் வியப்பாக இருந்தது.

- கே.நாராயணி, விருதுநகர்.

நான்காம் சுவரில் குணா எனும் பேராயன்... அருமை... எழுத்தாளா் தேடலில் மனித நேயமும் பேரன்பும் கலந்து பயணம் செய்கிறது.

- வைசாலி, www.vikatan.com

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism