Published:Updated:

தபால் முறையை மீட்டெடுக்கும் முயற்சி! - மன்னர் கால அஞ்சல் பெட்டிக்கு புத்துயிர் கொடுத்த கன்னியாகுமரி கலெக்டர்

தபால் முறையை மீட்டெடுக்கும் முயற்சி! - மன்னர் கால அஞ்சல் பெட்டிக்கு புத்துயிர் கொடுத்த கன்னியாகுமரி கலெக்டர்
தபால் முறையை மீட்டெடுக்கும் முயற்சி! - மன்னர் கால அஞ்சல் பெட்டிக்கு புத்துயிர் கொடுத்த கன்னியாகுமரி கலெக்டர்

திருவிதாங்கூர் சமஸ்தான மன்னர்கள் காலத்தில் பயன்படுத்தப்பட்ட அஞ்சல் பெட்டி கன்னியாகுமரியில் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக நிறுவப்பட்டுள்ளது. விரைவில் திறப்பு விழா நடக்க உள்ளது.

இணையதள வளர்ச்சியால் தகவல் பரிமாற்றம் டிஜிட்டல் மயமாகிவிட்டது. தகவல் தொழில்நுட்ப புரட்சி காரணமாக கடிதம் எழுதும் பழக்கம் கிட்டத்தட்ட முடிவுக்கு வந்துவிட்டது. இருப்பினும் கடிதம் எழுதும் பழக்கத்தைப் பரவலாக்க தபால் துறை பல்வேறு நடவடிக்கை எடுத்துவருகிறது. அதன் ஒரு பகுதியாக கன்னியாகுமரி மாவட்டத்தில் மன்னர்கள் காலத்தில் பயன்படுத்தப்பட்ட போஸ்ட் பாக்ஸ்களை மீண்டும் நிறுவி மக்களைக் கவரும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது அஞ்சல் துறை. திருவிதாங்கூர் சமஸ்தான மன்னர்கள் காலத்தில் கடிதப் போக்குவரத்துக்குப் பயன்படுத்தப்பட்ட போஸ்ட் பாக்ஸ் கன்னியாகுமரி மாவட்டத்தின் பல இடங்களில் இன்னும் நல்ல நிலையில் உள்ளன.

இரணியல் பகுதியில் திருவிதாங்கூர் மன்னர் காலத்தில் பயன்பாட்டுக்கு வந்த போஸ்ட் பாக்ஸ் கன்னியாகுமரி பழைய பஸ் ஸ்டான்ட் ஜங்ஷனில்  பீடம் கட்டி நிறுவப்பட்டுள்ளது. இந்தப் பணியை சப் கலெக்டர் பவன்குமார் கிரியப்பனவர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த போஸ்ட் பாக்ஸ் இன்னும் 10 நாளில் பயன்பாட்டுக்கு வர உள்ளதாகவும். அதற்காக மாவட்ட ஆட்சித்தலைவர் பிரசாந்த் மு.வடநேரே நடவடிக்கை எடுத்துவருவதாகவும் கூறப்படுகிறது. இன்று வழக்கொழிந்து போன கடிதம் எழுதி அனுப்பும் பழக்கத்துக்கு புத்துயிர் கொடுக்க அஞ்சல் துறை எடுத்துவரும் நடவடிக்கைக்கு மக்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்துள்ளது.