Published:Updated:

``இந்தியாவின் இரண்டாவது பெரிய தொழில் கைத்தறி... இன்று?" - டிசைனர் சைலேஷ் வேதனை

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
``இந்தியாவின் இரண்டாவது பெரிய தொழில் கைத்தறி... இன்று?" - டிசைனர் சைலேஷ் வேதனை
``இந்தியாவின் இரண்டாவது பெரிய தொழில் கைத்தறி... இன்று?" - டிசைனர் சைலேஷ் வேதனை

"சினிமா பற்றியெல்லாம் நான் நினைத்ததில்லை. சரியான வாய்ப்பு கிடைத்தால் நிச்சயம் செய்வேன். ஆனால், கைத்தறியை என்றைக்கும் விட்டுக்கொடுக்க மாட்டேன். எங்கள் வாழ்க்கையே இதுதானே!"

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

ந்தியாவில் சுமார் 65 லட்சம் மக்களை இணைத்திருக்கும் `நெசவுத் தொழிலுக்கு' என்றைக்குமே தனிப்பட்ட இடம் உண்டு. உலகின் பழைமையான தொழில்களில் ஒன்றான இது, விவசாயத்துக்கு அடுத்து அதிக வேலை வாய்ப்புகளை வழங்கி, இந்தியாவின் இரண்டாவது பெரிய தொழிலாக இருந்தது. தொழில்துறை உற்பத்தியில் 14 சதவிகிதம் `கைத்தறி' நெசவாளர்களின் பங்கு இருந்தது. ஆனால், இன்று மாடர்ன் ஜவுளித் தொழிற்சாலை, தனியார் மின்தறிகள், கைத்தறிகள் மற்றும் ஆடை நிறுவனங்கள் என்று நான்கு பாகங்களாகப் பிரிந்து தனித்தனியே செயல்பட்டு வருகின்றன.

ஹைதராபாத்தில் சிறிய கிராமத்தில் மூன்று தலைமுறையாக கைத்தறி ஆடைகளை மட்டுமே நெய்து, பல புதுமைகளை படைத்தது மட்டுமல்லாமல், அழிந்துவரும் கைத்தறி நெசவு முறையை மற்றவர்களுக்கும் கற்றுக்கொடுத்து, அனைவரையும் ஊக்கப்படுத்தும் குடும்பத்தின் இன்றைய ஹீரோ, பிரபல ஆடை வடிவமைப்பாளர் சைலேஷ் சிங்கானியா. 126 ஆண்டுகளாக கைத்தறி தொழில் செய்துகொண்டிருக்கும் சைலேஷ், முதல்முறையாகச் சென்ற ஆண்டு மும்பையில் நடைபெற்ற `ஃபேஷன் வீக்கில்' தான் வடிவமைத்த ஆடைகளை வெளியிட்டார். அவரின் ஆடை அணிவகுப்பு மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுத்தந்தது. அழிந்துவரும் கைத்தறியை இழுத்துப் பிடித்திருக்கும் சைலேஷிடம் பேசினேன்.

``சின்ன வயசுல இருந்தே கைத்தறிகளைத் தொட்டு, அதோடுதான் விளையாடி இருக்கிறேன். என்னுடைய கல்லூரி படிப்பும் ஜவுளி சம்பந்தமாகத்தான் படித்தேன். தாத்தா, தந்தையின் அனுபவ அறிவும், என் படிப்பு எனக்குக் கற்றுக்கொடுத்த பாடமும் என்னை அடுத்தகட்ட வளர்ச்சிக்குக் கொண்டு சேர்த்தது. பழைமைவாய்ந்த நெய்தல் முறையில் புதுமையான டிசைன்களை புகுத்தி, கைத்தறியை விரிவுபடுத்தும் முயற்சியில் இறங்கினேன். அதில் ஓரளவு வெற்றியும் கிடைத்திருக்கிறது. இதற்கு உதவிய அரசாங்கத்துக்கும் மற்ற ஆடை வடிவமைப்பாளர்களுக்கும் நன்றி. என்னுடைய படைப்பில், செயற்கைத்தன்மை இருக்காது. ஆடையின் மேற்பரப்பு அலங்காரம்கூட தறியோடு பிணைந்த ஒன்றாகத்தான் இருக்கும். மக்களுக்குப் பிடிக்கும் வகையில் வெவ்வேறு நிற நூல்களைக்கொண்டு வித்தியாசப் படைப்புகளை கொடுப்பதே என் நோக்கம். 

காதி, ஜம்தானி, கட்வால், போச்சம்பள்ளி எனக் கைத்தறியில் ஏராளமான நெய்தல் முறைகள் உள்ளன. அதில், எனக்கு 22 முறைகள் தெரியும். சரியான மரியாதையை, தறிகளும் நெசவாளர்களும் பெறவேண்டும் என்பதற்காகவே நான் கைத்தறியைத் தேர்ந்தெடுக்க முக்கியக் காரணம். மற்ற நாடுகளில், அவரவர்களின் பாரம்பர்ய ஆடை நெய்தல் முறைகளைக் காப்பாற்ற மெனக்கிடுகிறார்கள். ஆனால், இங்குப் பெரும்பாலானோர் அதிக வேலைவாய்ப்பைப் பெற்றுத்தரும் விவசாயத்தையும் அதற்கு அடுத்து இருக்கும் கைத்தறியையும் புறக்கணிக்கிறார்கள். `கைத்தறி' என்பது நம் கலாசாரத்தின் ஒருங்கிணைந்த மையப்புள்ளி. காதி துணிவகைகள் புத்தா காலத்திலிருந்து இருந்துள்ளது. முழுமையான ஒவ்வொரு துணிவகையும் நாங்கள் ஈன்றெடுக்கும் குழந்தை. ஆயிரத்துக்கும் மேற்பட்ட நெசவாளர்களுடன் நான் பயணம் செய்துகொண்டு இருக்கிறேன். ஒவ்வொரு புடவையும் ஆயிரம் கதைகள் சொல்லும்" என்று நெகிழ்ந்தார் சைலேஷ்.

``திரைப்பட வாய்ப்பு கிடைத்தால் ஏற்பீர்களா? அதில், மற்ற துணிவகைகளை பயன்படுத்துவீர்களா?" 

``சினிமா பற்றியெல்லாம் நான் நினைத்ததில்லை. சரியான வாய்ப்பு கிடைத்தால் நிச்சயம் செய்வேன். ஆனால், கைத்தறியை என்றைக்கும் விட்டுக்கொடுக்க மாட்டேன். எங்கள் வாழ்க்கையே இதுதானே!" என்றார்.

என்னதான் வெல்வெட், சிஃபான், ஜார்ஜெட் என்று விதவிதமான சிந்தட்டிக் துணிவகைகள் மார்க்கெட்டை ஆக்கிரமித்திருந்தாலும், நம் பாரம்பர்ய கைத்தறி துணிகளைப் பார்க்கும்போது பேராசை வரத்தான் செய்கிறது!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு