சின்னப்பாண்டியும் எமிலியும் இஷிமுராவும் பிரிந்தவர்கள் மீண்டும் சந்தித்துக்கொண்டதைப் போல இழைந்து போயினர்.

மேற்கிலிருந்து ஒரு பறவையும் கிழக்கிலிருந்து ஒரு பறவையும் தென்னாட்டுச் சரணாலயம் ஒன்றில் உள்ளூர்ப் பறவையோடு உறவாடிக்கொள்வது போலிருந்தது அந்த முக்கூட்டுச் சந்திப்பு.

பறவைகளின் பாஷைகள் வேறு வேறு; பேசுபொருள் ஒன்று.

திசைகள் வேறு வேறு; இலக்கு ஒன்று.

விவாதங்களில் கரைந்தன சில நாட்கள்; அவரவர் துறையறிவைப் பகிர்ந்துகொண்டதில் வடிந்தன சில நாட்கள்; கலாசார வித்தியாசங்கள் பேசிக் களித்ததில் கழிந்தன சில நாட்கள்.

உலகம் முழுக்க ஒரே கலாசாரம் இல்லை. அப்படி இருந்திருந்தால், அதுபோல் ஒரு கொடுமை இல்லை. வித்தியாசங்களே அடையாளங்கள். ஒரே நிறத்தில் இருந்தால், வானவில்லுக்கு ஏது வசீகரம்? வேற்றுமை என்பது உலகியல்; அதில் ஒற்றுமை காண்பது வாழ்வியல். ஒரே தளத்தில் இயங்கியது மூவரின் புரிதலும்.

''வருகைப் பேராசிரியர் என்பது உங்கள் கல்விக்குக் கிடைத்த கௌரவம் அல்லவா? நீங்கள் இருவருமே நிராகரித்தது ஏன்?''

சின்னப்பாண்டியின் கேள்விக்குப் பதில் சொல்லும் உரிமையை ஒரு கனிந்த பார்வையால் இஷிமுராவுக்கு விட்டுக்கொடுத்தாள் எமிலி.

''இந்தியாவிற்கு வந்தது கற்பிப்பதற்கு அல்ல; கற்றுக்கொள்வதற்கு. இந்தியாவின் அறிவுச் செல்வங்களை - இன்னும் அழிந்துபோகாத கலைமரபுகளை - அறுந்துபோகாத கலாசாரத் தொடர்ச்சிகளை - நிமிர்ந்துகொண்டிருக்கும் நகரங்களை - புதைந்துகொண்டிருக்கும் கிராமங்களை - விவசாயிகளைச் சாகவிடும் அலட்சியத்தை - விவசாயம் இன்னும் பிழைத்திருக்கும் ஆச்சரியத்தைக் கற்றுச் செல்லவே இந்தியா வந்தேன்'' - இஷிமுரா அளந்து அளந்து பேசிய வார்த்தைகளை இமை கொட்டாமல் கவனித்தனர் இருவரும்.

''உங்கள் ஆசை என்ன எமிலி?''

முதலில் கூந்தல் கோதிப் புன்னகைத் தவள், புன்னகை முடிந்த இடத்தில் இருந்து வார்த்தைகளை ஆரம்பித்தாள்.

''நீச்சல் பழகுகிறவன் தண்ணீரில் உடனே குதித்துவிட மாட்டான்; கரையில் இருந்துதான் தொடங்குவான். நான் இந்தியாவை அறிந்துகொள்ள ஆசைப்படுகிறேன். ஆனால், கிராமங்களில் இருந்து தொடங்க விரும்புகிறேன். இந்தியாவின் ஆன்மாவை அங்கிருந்தே புரிந்துகொள்ள விரும்புகிறேன்.'' அவள் வார்த்தைகளால் சொன்னதைப் பார்வையால் வழிமொழிந் தான் இஷிமுரா.

''நாட்டை ஆள்கிறவர்களே இன்னும் ஆன்மாவைப் புரிந்துகொள்ள முடியவில்லை. நீங்கள் கண்ணால் பார்த்தே கண்டடைய முடியுமா?'' - சின்னப்பாண்டி சிரித்தான்.

''தீ சுடும் என்று தெரியத் தீயில் குடி யிருக்க வேண்டியது இல்லை. தொட்டுப் பார்த்தாலே போதும். கற்றுக்கொள்ளலாம்.''

''இவள் தீ; எட்டியே நிற்க வேண்டும்'' எண்ணிக்கொண்டான் சின்னப்பாண்டி.

அவர்களின் கிராம யாத்திரைக்கு வாழ்த்துச் சொன்னார் துணைவேந்தர்.

''வருகைப் பேராசிரியர் பொறுப்பு உங்கள் சம்மதத்துக்காக எப்போதும் காத்திருக்கிறது'' என்றார். ''விருந்தினர் விடுதியில் நீங்கள் விரும்பும்போதெல்லாம் தங்கிக்கொள்ளலாம்'' என்று சிறப்பு அனுமதி தந்தார். ''களப் பணியில் காணும் உங்கள் கருத்துகளுக்காகக் காத்திருக்கிறேன்; சின்னப்பாண்டியை ஒரு வாகனத்தோடு உங்களிடம் ஒப்படைக்கிறேன்'' என்றார்.

''நன்றி அய்யா. என் திண்டுக்கல் நண்பரின் வண்டி ஒன்று வருகிறது'' என்றான் சின்னப்பாண்டி.

''வாழ்த்துக்கள்'' என்றார் துணைவேந்தர்.

எமிலியும் இஷிமுராவும் ''வண்க்கம்'' என்றார்கள் உடைந்த தமிழில்.

திறந்த வானம்; விரிந்த பூமி.

கண்ணுக்கெட்டிய மட்டும் நீண்டு வளர்ந்து வானத்தில் முட்டி முடியும் சம வெளிகள். பூமியில் புடைத்த புதிய கிரகங் களாய்ச் சிறுசிறு மலைகள் - சின்னஞ்சிறிய குன்றுகள். ஒரு சிறு குன்றில் ஏறி நின்று 360 டிகிரியில் சுற்றிச் சுற்றிச் சுழன்று பார்த்துப் பரவசப் பறவையானாள் எமிலி.

பறந்து பறந்து படமெடுத்தாள்; தூரத்து மலைகளில் தொலைந்தாள்.

''இஷி! மலையின் அழகு எதில் உள்ளது?'' என்றாள் எமிலி.

''அதன் பிரம்மாண்டத்தில்!''

''இல்லை.''

''அதன் நீலம் பூத்த மௌனத்தில்!''

இஷியின் பதில்களில் நிறைவுறாதவள் சின்னப்பாண்டியைச் சீண்டினாள் பார்வை யால்.

''மலையின் அழகு அதன் ஒழுங்கற்ற ஒழுங்கில்'' என்றான் சின்னப்பாண்டி.

''வாவ்...'' என்று வாய் பிளந்தவள், அவன் தலையைக் குழந்தைபோல் கோதிக் காற்றைப் போல் கலைத்துவிட்டாள்.

பெண்ணைத் தொட்டறியாதவனுக்கு ஒரு பெண்ணே தொட்ட முதல் அனுபவம். சில்லென்று அதிர்ந்தவன் பேச்சற்றுப்போனான். அவன் மூளை என்னவோ முணுமுணுத்தது முதுகுத் தண்டுக்கு மட்டும் கேட்டது.

கூட்டத்தில் தப்பிய ஓர் ஒற்றை நாரை ''என்ன விட்டுட்டுப் போயிட்டீகளே...'' என்று கரகரத்த குரலில் கதறிக்கொண்டே தறிகெட்டுப் பறந்துகொண்டிருந்தது தலைக்கு மேலே.

வானத்தின் விதானத்துக்கு வெள்ளைஅடித்துக்கொண்டே அது தன் வெள்ளைச் சிறகை விசிறியடித்துப் பறப்பதையே பார்த்துக்கொண்டிருந்த இஷி, சின்னப்பாண்டி மீது தன் கேள்வி எறிந்தான்.

''ஒரு பறவையின் வெற்றி எதில் இருக் கிறது?''

''அது பறத்தலின் உயரத்தில்..!''

''இல்லை.''

''இலக்கடையும் வேகத்தில்..!''

''இல்லை.''

தன்னைத் தோற்கடித்தவளைத் தோற்கடிக்கும் நோக்கில் கேள்வியை எமிலிக்கு இடம் மாற்றினான் இஷி.

''நீங்கள் சொல்லுங்கள் எமிலி. ஒரு பறவை யின் வெற்றி எதில் இருக்கிறது?''

பறந்த நாரை நீல வானத்தில் கடைசி வெண் புள்ளியாய்க் கரைவதையே கவனித்துக்கொண்டிருந்த எமிலி சொன்னாள்:

''வானத்தின் மொத்தப் பரப்பையும் மறக்கடித்துவிட்டுத் தன்னை மட்டுமே கவனிக்கச் செய்யும் தந்திரத்தில் இருக்கிறது ஒரு பறவையின் வெற்றி.''

''அழகு! மிக அழகு!'' என்று எமிலியைப் பாராட்டி ஜப்பான் வணக்கம் செய்தான் இஷிமுரா.

மலை கோதிப்போன தென்றலாய் - தலை கோதிப் பாராட்டிய இந்தத் தங்கப் புறாவை நான் எவ்விதம் பாராட்டுவது? அவளைத் தலைக்கு மேல் தூக்கிவைத்துக் கொண்டாடத் தாவுது கரம்.

அவள் என்னைத் தீண்டியது அவள் பண்பாடு.

என் பண்பாடு இல்லை அவளை நான் தீண்டுவது.

அவள் குளிர் நாட்டுக்காரி; நனைந்த தீக்குச்சி.

ஸ்பரிசத்தால் அவள் பற்றுவதில்லை.

நான் சிவகாசித் தீக்குச்சி; சின்னதோர் உரசலும் பட்டென்று பற்றவைக்கும்.

பெண் ஸ்பரிசமே படாமல் பார்த்துக்கொள்ளும் தமிழ்நாட்டுப் பண்பாட்டுச் சூழல் என்னைச் செயற்கையான யோக்கி யனாய்ச் சிருஷ்டித்துவிட்டது. அந்தக் கட்டாயக் கற்பு அப்படியே இருக்கட்டும். கிழிந்துவிட வேண்டாம் என் யோக்கியத்தின் முகமூடி.

''அற்புதம்... அற்புதம்'' என்று கை தட்டித் தட்டித் தன் பாராட்டை எமிலிக்குப் பரிமாறிக்கொண்டான் சின்னப்பாண்டி.

''எங்கே போகிறோம்?'' - என்றான் இஷி.

''எங்கள் கிராமத்திற்கு'' என்றான் சின்னப்பாண்டி.

''அப்படியா!'' - ஆச்சரியம் காட்டினாள் எமிலி.

''நிறுத்துங்கள்! தயவுசெய்து காரை நிறுத்துங்கள்!'' என்று பதறிய எமிலியின் குரல் கேட்டு திண்டுக்கல் குமுளி நெடுஞ்சாலையில் பறந்துகொண்டிருந்த கார், சாலையின் இடப்பக்கம் இறங்கி நின்றது ஒரு புளிய மரத்தை ஒட்டியும் உரசாமலும்.

'புளிய மரம் எங்கள் பூர்வீகம்’ என்பது மாதிரி கிளைகளில் விளையாடிக்கொண்டு இருந்தன ஏழெட்டுக் கிளிகள்.

பச்சைச் சிறகுகள் கிளையோடு கரைந்துபோக, அலகாலும் ஒலியாலும் அடையாளம் காணப்பட்ட தமிழ்நாட்டுக் கிளிகளோடு ஆங்கிலத்தில் உரையாடிப் படமெடுத்தாள் எமிலி.

''பறவைகளின் தாய் வீடே... நீ வாழ்க!'' - மரத்துக்கு ஒரு வணக்கமிட்டாள்.

''எமிலி... இனி இந்த மரங்களை உன் புகைப்படத்தில் மட்டுமே பார்க்க முடியும்'' - கவலையோடு சொன்ன சின்னப்பாண்டியின் குரல் கறுப்படித்தது.

''ஏன்?'' - பதறினாள் எமிலி.

''நான்குவழிச் சாலைக்காக இந்த மரங்களெல்லாம் வெட்டப்பட இருக்கின்றன.''

''என்ன இது? முகத்தைச் சமன்செய்வதற்காக மூக்கை அறுப்பதா?''- என்றான் இஷி.

''ஒரு மரம் வெட்டப்படுவதற்கு முன்னால் மூன்று மரங்கள் நாட்டப்பட வேண்டும் என்பதை உலக அரசுகள் சட்ட மாக இயற்ற ஒப்புக்கொள்ள வேண்டும்'' என்றாள் எமிலி.

''இந்தச் சாலைகளால் லாபம் முதலாளிகளுக்கும் மூலதனக்காரர்களுக்கும். நஷ்டம் - ஏழைகளுக்கும் மரங்களுக்கும்'' - வருந்தி னான் இஷி.

அடிமரத்தின் முண்டுமுடிச்சுகளைத் தொட்டுத் தொட்டுப் பார்த்தாள் எமிலி. தன் மரணத் தேதி குறிக்கப்பட்டது தெரியாமல் பச்சைக் குழந்தையாய்ச் சிரித்துக்கொண்டிருக்கும் மரத்தின் அந்திமப் புன்னகையைப் படமெடுத்தாள்.

பெட்டிக் கடைகளும் தேநீர் நிலையங்களும் சிற்றுண்டிச் சாலைகளும் இளநீர்க் கடைகளும் சாலை ஓரத்து ஆலமர நிழலில் மொத்தமாய் முளைத்திருந்தன.

கடைகள் நோக்கி நகர்ந்தார்கள் மூவரும்.

''தென்னிந்தியத் தேநீர் குடிக்கிறீர்களா?'' என்றான் சின்னப்பாண்டி.

''இல்லை. நீங்கள் இங்கு பருகுவது தேநீர் இல்லை. தேயிலையின் நறுஞ்சாரம் மட்டும் தான் தேநீர். நீங்கள் சர்க்கரையும் பாலும் ஊற்றித் தேநீரைக் கொன்று குடிக்கிறீர் கள்.''

வாகன இரைச்சல்களுக்கு மேலாய் வாய் விட்டுச் சிரித்தான் சின்னப்பாண்டி.

''என்ன சொல்லிவிட்டேன்? ஏன் இப்படிச் சிரிக்கிறீர்கள்?'' என்றான் இஷி.

''பாலூற்றித் தேநீரைக் கொல்கிறோம் என்றீர்களே... சாகப்போகிறவன் வாயில் கடைசியாய்ப் பாலூற்றுகிற இந்துக்களின் கலாசாரம் உங்களுக்கு எப்படித் தெரியும் என்றுதான் சிரித்தேன். சரி... தேநீர் வேண்டாம். இளநீர் சாப்பிடுங்கள்.''

இளநீர்க்காரர் அரிவாள்மூக்கு முனையில் ஒரு கொத்துக் கொத்தி அலட்சியமாய் எடுப்பதையும் 'சொன்னபடி கேள்’ என்று சொன்னபடி அதை இடக்கையில் ஓர் உருட்டு உருட்டி அதன் தலைப்பக்கம் சீவுவதையும், வெள்ளிக் காசுகளை வீசியெறிவதுபோல் சீவப்பட்ட மட்டைகள் செதில் செதிலாய்ச் சிதறி விழுவதையும், கூர்மையாய்ச் சீவிச் சீவிப் பருப்பின் பதம் கண்டு அரிவாள் நுனியில் கண் திறந்து, இளநீரில் ஒரு சொட்டும் சிதறாமல் இடக்கையில் இருந்து அதை வலக்கைக்குத் தூக்கியெறிந்து, ''இந்தா சாப்பிடு'' என்று எடுத்து நீட்டுவதையும் ஒரு கலைக்காட்சிபோல் எமிலியும் இஷிமுராவும் கண்டுகளித்துக்கொண்டிருந்தபோது, அவர்களின் காதுகளை நிரப்பிக் கவனத்தை ஈர்த்தது ஒரு பரதேசியின் பாட்டு.

பெட்டிக் கடைக்கும் தேநீர்க் கடைக்கும் இடையில் இருந்த ஒரு மண்மேட்டில், நரைத்தும் நரைக்காத பரட்டைத் தலையும் தாடியுமாய் இடுப்பில் ஒட்டிய ஒட்டுக் காவித் துணியோடு பிசுக்கடிக்கும் திறந்த மேனியோடு பிசிறடிக்காத பெருங் குரலில் இந்த உலகத்தையே தன் காலடியில் போட்டு மிதித்துத் துவைத்தபடி அவனுக்கே பேர் தெரியாத சாருகேசியில் சஞ்சாரம் செய்துகொண்டிருந்தான் பரதேசி.

சில வினாடிகள் செய்தொழில் நிறுத்தி மொத்தக் கூட்டமும் காது கொடுத்தது பரதேசிப் பாட்டுக்கு.

பைசா இல்லாத பரதேசி - நான்
பன்னண்டு மாசமும் சுகவாசி.
எல்லார்க்கும் ஆசையெல்லாம்
தென்னாட்டு மலையளவு
எனக்குள்ள ஆசையெல்லாம்
திருவோட்டுக் குழியளவு
தூக்கத்தை வித்துவித்து
சொத்து பத்து வாங்குறியே
சொத்து பத்து செலவழிச்சுத்
தூக்கத்த வாங்குவியா?
சொத்து பத்து வித்துப்புட்டேன்
சொந்த பந்தம் விட்டுப்புட்டேன்
எச்சித் திருவோட்ட
எறிய மனம் கூடலையே
கருவோடு பிறக்கையிலே
கையோடு பொருளுமில்ல
திருவோடு துறக்காம
நானொண்ணும் துறவியில்ல.

காற்றில் ஆடும் கிளை, இலை தவிர, மனித அசைவுகளையே கட்டிப்போட்ட அந்தப் பாட்டின் பொருள் என்ன என்றார்கள் எமிலியும் இஷிமுராவும்.

சொல்லுக்குச் சொல் என்றில்லாமல் அதன் உள்ளீட்டை மட்டும் மொழிபெயர்த் துச் சொன்னான் சின்னப்பாண்டி.

ஒரு பரதேசியின் பாட்டில் இத்துணை தத்துவ விலாசமா? ஒரு பண்டாரப் பாட்டில் இத்துணை அறிவின் விசாலமா? திருவோடுகூட உடைக்கப்பட வேண்டிய உடைமையா? அந்தத் தத்துவ அதிர்ச்சியில் இருந்து விடுபட வெகு நேரமாயிற்று எமிலிக்கும் இஷிமுராவுக்கும்.

''ஆங்கிலக் கவி ஆர்.எல்.ஸ்டீபன்ஸனைத்தான் நாங்கள் கொண்டாடித் திரிகிறோம்.

நட்சத்திரங்கள் பார்த்த வண்ணம்
ஒரு புதர்ப் படுக்கை
உண்டு களிக்க
நதியில் நனைந்த ஒரு ரொட்டித் துண்டு
என்னைப்போல் ஒருவனுக்கு
எப்போதும் போதும் இந்த வாழ்க்கை

இப்படி எழுதிய எங்கள் ஆங்கிலக் கவியைத் தன் திருவோட்டுக் குழியில் அடக்கம் செய்துவிட்டார் உங்கள் பரதேசி!'' நெற்றியில் விழுந்தாடிய முடியை ஒதுக்கவும் மறந்தவளாய்த் தன்னை மறந்து தன் நாமம் கெட்டாள் எமிலி.

கண்ணிரண்டும் கவிழ்ந்தான் இஷிமுரா.

''புத்தர் பிறந்த பூமி தத்துவ பூமிதான்.''

உதட்டுக்குள் முணுமுணுத்து நீண்டதாய் நெட்டுயிர்த்தான்.

அவன் அடிக்கடி மேற்கோள் காட்டும் ஜப்பானியக் கவிஞர் 'டா மோ கோடா’-வின் கவிதை ஒன்று அவன் நெற்றியில் மின்னி மின்னிப் போயிற்று. சொன்னான் வாய்விட்டு.

''ஏழையாகவே பிறந்தேன்
ஏழ்மையின் செல்வந்தன் நான்
அதில் -
எனக்கு இணையாக முடியாது
எந்த அரசனும்.
ஒரு பக்கம் வெண்ணெய் தடவிய
ரொட்டிக்கு மேலே
வேறெதைத்தான்
விழுங்க முடியும் என்னால்?''

இந்தப் பிச்சைக்காரனிடம் வந்துபிச்சை வாங்க வேண்டும் எங்கள் ஜப்பானியக் கவிஞன்.

எமிலியின் ஐந்து டாலர் வந்து விழுந்தது பரதேசியின் திருவோட்டில்.

அவளையும் தாளையும் மாறி மாறிப் பார்த்தான் பரதேசி.

''எங்க டீக்கடையில் இது செல்லாது தாயி'' - திருப்பிக் கொடுத்துவிட்டான்.

பரதேசியை 30 டிகிரி முதுகு வளைத்து வணங்கி, நூறு ரூபாய் இட்டான் இஷி.

''தானம் தருவதற்கும் வணங்குவீர்களா?'' - கேலியோடு வியந்து கேட்டான் சின்னப் பாண்டி.

'' 'தொழுநோயாளிக்குச் சேவகம் செய்வது என்று முடிவான பின், அவனுக்குச் சவரம் செய்யத் தயங்கக் கூடாது’ என்று எங்கள் நாட்டில் 'யட்டோரி மொகா ஷா’ எழுதிய கவிதை ஒன்று இருக்கிறது. பெற்றுக்கொள்கிறவர் என்னைப் பெருமைப்படுத்துகிறார். நான் வணங்கித்தானே ஆக வேண்டும்'' என்றான் இஷி.

''இம்புட்டுக் காசை வச்சிருந்தா, எனக்கு ஒறக்கம் வராது ராசா. இன்னைக்குத் தேவை அம்பது. அத மட்டும் கொடு.''

இஷிக்கு அவன் சொன்னதைச் சொன்னான் சின்னப்பாண்டி.

'முப்பது டாலரில் இவன் ஒரு மாதம் வாழ் கிறான்’ என்றதும் 'ஆவ்’ என்று ஆச்சரியமா னாள் எமிலி.

''மிச்சத்தை நாளையத் தேவைக்கு வைத்துக் கொள்ளலாமே!''

தான் சொன்னதைப் பரதேசிக்குச் சொல்லச் சொன்னான் இஷி.

பரதேசி சொன்னான்:

''நான் நாளைக்குச் சாப்புடற சாப்பாட்ட, இன்னைக்கே சமைக்கிறதில்ல. நாளைக்குச் சமைக்கிற பொருளுக்கு, நான் இன்னைக்கே சேமிக்கிறதில்ல.''

இஷியும் எமிலியும் தங்களை அறியாமல் ஓர் அடி பின்னுக்கு நகர்ந்தார்கள்.

மாணிக்கம் மிதக்கும் பரதேசியின் கண் களைக் கண்டுகொண்டே நிலைகுத்தி நின்றார் கள்.

எமிலி சொன்னாள்.

''இந்தியாவில் ஞானம் தெருவில் கொட்டிக் கிடக்கிறது!''

அவர்களின் வியப்பின் விரிவாக்கத்தை எல்லாம் மில்லி மீட்டர் மில்லி மீட்டராய் கவனித்த பின்பு மென்மையாய்ச் சொன்னான் சின்னப்பாண்டி: ''இங்கே நீங்கள் பார்ப்பது இந்தியாவின் இன்னொரு முகம். உண்மையான இந்தியா பிரதானச் சாலையைவிட்டுப் பிரிந்து கிடக்கிறது!''

அவன் சொன்னது எத்துணை சத்தியம் என்பதை எமிலியும் இஷியும் உணர்ந்துகொண்டார்கள் அட்டணம்பட்டிக்குள் நுழையும்பொழுதே!

- மூளும்