Published:Updated:

வலைபாயுதே

வலைபாயுதே
பிரீமியம் ஸ்டோரி
News
வலைபாயுதே

வலைபாயுதே

facebook.com/Latha Arunachalam

ஒரு காதல் செய்துவிடுகிறோம்... மற்றவை எல்லாம், போலச் செய்கிறோம்.

facebook.com/Meenamma Kayal 

வலைபாயுதே

சாக்லேட் பிரிச்சுத் திங்கும்போதெல்லாம் கவனிக்கிறேன். கவருக்கு உள்ளே இன்னொரு வெள்ளைக் கவர் இருக்கு. உள்ளாடையா இருக்கும்போல.

facebook.com/Dinesh Kathirvelan

‘ஜீன்ஸ்’ படத்திற்கு ஏன் ஜீன்ஸ் என்று பெயர் வைத்தார்கள் என்று தெரியாமலே 7 அதிசயத்தைப் பார்க்கப் போன பயலுவதான் நாம.

#90-ஸ்_கிட்ஸ்_பரிதாபங்கள்

twitter.com/shivaas_twitz

இன்னைக்கு ஒரு நாள் அதிசயமா ஆபீஸுக்கு டைமுக்கு வந்துட்டேன். எல்லாரும் கருணாஸைக் கைது பண்ணின தனிப்படையைப் பார்க்கிற மாதிரி ஆச்சர்யமா என்னைப் பார்க்கிறானுங்க..!

facebook.com/பொம்மையா முருகன்

தொண்ணூறுகளில் தி.நகரில் பாலு ஜுவல்லர்ஸ் மட்டுமே பிரமாண்டக் கடை. ‘லேட்டா வந்தா அர்ச்சனா ஸ்வீட்டோடதான் வரணும்’ என்ற விளம்பரத்திற்கு அடுத்து அதிகப்படியாக வந்த விளம்பரம் பாரதிராஜாவின் குரலில் வந்த ‘புன்னகை அதிபரின் பொன் நகைக்கூடம் பாலு ஜுவல்லர்ஸ்’ என்ற விளம்பரம்தான். அது வளர்ப்பு மகன் கல்யாணப் புயலில் சிக்கி சின்னாபின்னமாகி இன்று வெறும் பத்துக்குப் பத்து சதுரடியாகச் சுருங்கி கவரிங் நகைகளை மட்டுமே விற்கிறது.. இந்தக் காட்சியெல்லாம் ‘தி அயர்ன் லேடி’ படத்தில் இடம்பெறுமென நினைக்கிறேன்...

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
வலைபாயுதே

facebook.com/Abdul Hameed Sheik Mohamed

ஜெயலலிதா சசிகலாவை போயஸ் கார்டனை விட்டு அனுப்பி மறுபடி சேர்த்து மறுபடி வெளியேற்றி... தீபா கார் டிரைவர் ராஜாவைக் கட்சியை விட்டு வெளியேற்றி மறுபடி சேர்த்து மறுபடி வெளியேற்றி...வரலாறு இப்படியே போய்க்கிட்டிருந்தா இதற்கெல்லாம் ஒரு முடிவு வேணாமா?

twitter.com/amuduarattai

பிற்காலத்தில் நம் குழந்தைகளின் சொத்துத் தகராறு எப்படி இருக்கும் என்பதை, அவர்கள் இப்போது மொபைலுக்குப் போடும் சண்டைகள் மூலம் அறியலாம்.

வலைபாயுதே

twitter.com/Thaadikkaran

‘அவனுக்கென்ன, ராஜா மாதிரி வாழ்க்கை’ என்ற வார்த்தை எந்த ராஜாவுக்குப் பொருந்தாவிட்டாலும் ஹெச்.ராஜாவுக்கு மட்டும் சரியாகப் பொருந்தும்..!

twitter.com/Kozhiyaar

சில சமயங்களில் கோபத்தில் எடுக்கும் முடிவு  நமக்கு சாதகமாக அமைந்துவிடுகிறது. ‘புரட்டாசியாவது கிரட்டாசியாவது, நான் போய் வெளியவே சாப்பிட்டுக்கிறேன்!’

twitter.com/gips_twitz

இந்திய ராணுவத்திற்குள் நாம் தமிழர் படை இருக்கிறது - சீமான் # வடையா இருந்தாலும் ஒரு அளவு வேண்டாமா...

வலைபாயுதே

twitter.com/vickytalkz

டீக் கடைல ஒருத்தன் சொல்றான், அம்மா இருந்திருந்தா இந்நேரம் மோடிய அரெஸ்ட் பண்ணி உள்ள தள்ளியிருக்கும்னு...

twitter.com/bala_peace_bro

படிச்ச படிப்பை ஞாபகம் வெச்சுக்கிறதா, இல்ல ஆப்ஸ், பேங்க்ஸோட பாஸ்வேர்ட ஞாபகம் வெச்சுக்கிறதா... #எத்தனை

facebook.com/Ilango Krishnan

மனைவி: இந்த இலக்கியவாதிகள் எல்லாம் ஏன் எதைப் பற்றிப் பேசினாலும் உடனே அதைப் பற்றி ஒரு கருத்து சொல்றீங்க?

நான்: அதாவது, சிந்தனையின் செயல்தளம் மொழியில் இருக்கிறதால...

மனைவி: போதும் நிறுத்து... நான் ஒரு கடுப்புல அதை உன்னிடம் சொன்னேன். உடனே அதுக்கும் வாசிக்காதே...

சைபர் ஸ்பைடர்