Published:Updated:

"செருப்பொன்று போட்டால் சிலையொன்று முளைத்த கடலூர்!"

"செருப்பொன்று போட்டால் சிலையொன்று முளைத்த கடலூர்!"

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, தன் ஊரான கடலூர் முதுநகர் பற்றிய நினைவுகளைப் பகிர்ந்துகொள்கிறார்.

"செருப்பொன்று போட்டால் சிலையொன்று முளைத்த கடலூர்!"
##~##

''என்னுடைய ஊர் கடலூர் முதுநகர். அதாவது கடலூர் ஓ.டி. நான் கடலூரில் 1933-ல் பிறந்தேன். எங்கள் தெரு வுக்கு மோகன்சிங் வீதி என்று பெயர். எங்கள் ஊரில் ஒரு அக்ர ஹாரம் உண்டு. இப்போது எல்லா சாதியினரும் குடியிருக்கும் அந்த அக்ரஹாரத்தில், அப்போது பார்ப்பனர்கள் மட்டுமே குடி யிருந்தார்கள். அந்த அக்ரஹாரத்தில் உள்ள ஒரு வீட்டில் ஸ்வர்ணத்தக்கா என்கிற ஒருவரிடம்தான் நான் இரண்டாம் வகுப்பு வரை பயின்றேன். அவர்கள் வீட்டின் திண்ணையிலேயே பள்ளிக்கூடம் நடக்கும். நான் படித்த அந்தத் திண்ணைப் பள்ளிக் கூடத்தை நடத்திய சொர்ணத்தக்கா, என் அருமை நண்பரும் எழுத்தாளருமான ஜெயகாந்தனின் அத்தைதான். அப்போது ஜெயகாந்தனின் பெயர் முருகேசன். நாங்கள் இருவரும் அதன்பின் இப்போது செயின்ட் டேவிட் பள்ளி என்று அழைக்கப்படுகிற எஸ்.பி.ஜி. பள்ளியில் சேர்ந்தோம்.  

"செருப்பொன்று போட்டால் சிலையொன்று முளைத்த கடலூர்!"

எங்கள் ஊர் துறைமுக நகரம் என்பதால் வாணிபம் அதிகமாக நடக்கும் பகுதியாக இருந்தது. கடலுக்குச் சென்று கப்பலில் பணி யாற்றுபவர்கள் அதிகம். எங்கள் ஊரின் ஒரு பகுதி மாலுமியார் பேட்டை என்றே அழைக்கப்பட்டது. ஊரில் மீன்பிடித் தொழில் பிரதானம். கராச்சி போன்ற  நகரங்களில் இருந்து எல்லாம் கிளை நிறுவனங்கள் எங்கள் ஊரில் அமைக்கப்பட்டு இருக்கும். வேறு எங்கும் இல்லாத அளவுக்கு வரலாற்று உணர்வுகொண்டவர்கள் கடலூர்க்காரர்கள். இதற்கு எடுத்துக்காட்டு எங்கள் ஊரில் உள்ள ஒரு தெருவின் பெயர் 'இஸ்லாமானவர்கள்’ தெரு. இஸ்லாமியர் தெரு அல்ல... இது இஸ்லாமானவர் தெரு. அப்படி என்றால் இவர்களின் மூதாதையர் இஸ்லாமியர்களாக மதம் மாறி இருக் கிறார்கள் என்பதைப் பெயரைவைத்தே விளங்கிக்கொள்ளலாம். மதங்கள் பலவாகவும், பல்வேறு சாதியினரும் வாழ்ந்து வந்தாலும், கடலூரில் பெரிய அளவில் சாதிய பேதங்கள் இருக்காது.  

எங்கள் வீட்டுக்கு அருகிலேயே உப்பங்கழி இருக்கும். கடலையும், நகரத்தையும் உப்பனாறுதான் பிரிக்கிறது. 8-ம் வகுப்பு வரை எஸ்.பி.ஜி. பள்ளியில் படித்த போது, திராவிட மணி என்கிற ஆசிரியரின் வழிகாட்டுதலில் நான் பெரியாரைப் பின்பற்றத் தொடங்கினேன். எங்கள் பள்ளியின் உள்ளேயே எங்கள் தலைமை ஆசிரியரான டேனியல் தாமஸின் விடுதி இருந்தது. அந்த ஹெச்.எம். குவார்ட்டர்ஸ்தான், ராபர்ட் கிளைவ் தங்கியிருந்த இடம்.

கடலூர் புதுநகருக்குத்தான் திரைப்படம் பார்க்கச் செல்வோம். முதுநகரில் திரையரங்கங்களே கிடையாது. அப்போது கோவா, மர்மகோவா போன்ற இடங்களில் இருந்தெல்லாம் வாணிபம் செய்ய வியாபாரிகள் வருவார்கள். எங்கள் ஊர் மாவட்ட ஆட்சி யர் அலுவலகம் சிவப்புக் கற்களால் கட்டப்பட்ட மிக அழகானதொரு கட்டடம். கிறிஸ் துவ போதகர் டி.ஜி.எஸ்.தினகரன் என்னுடைய வகுப்புத் தோழர். மதப் பிரசாரம் செய்த அவரும், மதமே கூடாது என்று நாத்திகப் பிரசாரம் செய்யும் நானும் அரசியல் தாண்டிய நண்பர்கள். பண்ருட்டி ராமச்சந்திரனும் என் வகுப்புத் தோழர்தான்.

பெரியார் மேல் ஒரு செருப்பை எறிந்து, அவர் மறுசெருப்பைக் கேட்டு வாங்கியது கடலூரில்தான். அதன் நினைவாக அங்கே பெரி யாருக்குச் சிலை உண்டு. அதை வைத்துத்தான் கவிஞர் கருணானந்தம் 'செருப்பொன்று போட்டால் சிலையன்று முளைக்கும்’ என்று கவிதை எழுதினார். இப்போது நான் ஊருக்குப் போனால் எனக்கு நிறைய இடங்கள் அடையா ளமே தெரியாமல் உருமாறிப்போய் இருக்கின் றன. முன்பு எல்லாம் கடலூர் புதுநகருக்கும் முதுநகருக்கும் இடையே 2 கி.மீ-க்கு இடைவெளி இருக்கும். இப்போது அந்த இடைவெளி முழு வதும் கட்டடங்கள், தொழிற்சாலைகள் என்று ஆகிவிட்டன.

"செருப்பொன்று போட்டால் சிலையொன்று முளைத்த கடலூர்!"

எல்லா ஊரிலும் உள்ளது போலவே எங்கள் ஊரிலும் குறிப்பிட்ட சாதியினர் பெரும்பான் மையாகக் குடியிருக்கிறார்கள். ஆனால், ஒரு போதும் அந்தச் சாதியைச் சேர்ந்தவர்கள் அங்கே தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்டது இல்லை. சாதிரீதியாகப் பார்க்காமல் கொள்கைரீதியாகப் பார்த்து வாக்களிக்கும் மக்கள் உள்ள ஊர் என்பதால், மாற்றுச் சாதியினர்தான் தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கிறார்கள் என்பதில்தான் என் ஊரின் பெருமை அடங்கி இருப்பதாக நான் நினைக்கிறேன்!''

"செருப்பொன்று போட்டால் சிலையொன்று முளைத்த கடலூர்!"
"செருப்பொன்று போட்டால் சிலையொன்று முளைத்த கடலூர்!"

- கவின்மலர்
படங்கள்: சொ.பாலசுப்ரமணியன், எஸ்.தேவராஜன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு