Published:Updated:

RTI அம்பலம்: ஆயிரம் கோடி ரூபாயைத் தனியாருக்கு அள்ளிவிடவா காப்பீட்டுத் திட்டம்? - 2

RTI அம்பலம்: ஆயிரம் கோடி ரூபாயைத் தனியாருக்கு அள்ளிவிடவா காப்பீட்டுத் திட்டம்? - 2
பிரீமியம் ஸ்டோரி
RTI அம்பலம்: ஆயிரம் கோடி ரூபாயைத் தனியாருக்கு அள்ளிவிடவா காப்பீட்டுத் திட்டம்? - 2

RTI அம்பலம்: ஆயிரம் கோடி ரூபாயைத் தனியாருக்கு அள்ளிவிடவா காப்பீட்டுத் திட்டம்? - 2

RTI அம்பலம்: ஆயிரம் கோடி ரூபாயைத் தனியாருக்கு அள்ளிவிடவா காப்பீட்டுத் திட்டம்? - 2

RTI அம்பலம்: ஆயிரம் கோடி ரூபாயைத் தனியாருக்கு அள்ளிவிடவா காப்பீட்டுத் திட்டம்? - 2

Published:Updated:
RTI அம்பலம்: ஆயிரம் கோடி ரூபாயைத் தனியாருக்கு அள்ளிவிடவா காப்பீட்டுத் திட்டம்? - 2
பிரீமியம் ஸ்டோரி
RTI அம்பலம்: ஆயிரம் கோடி ரூபாயைத் தனியாருக்கு அள்ளிவிடவா காப்பீட்டுத் திட்டம்? - 2
RTI அம்பலம்: ஆயிரம் கோடி ரூபாயைத் தனியாருக்கு அள்ளிவிடவா காப்பீட்டுத் திட்டம்? - 2

பிரதமர் நரேந்திர மோடி, ‘‘அரசு சார்பில் செயல்படுத்தப்படும் உலகின் மிகப்பெரிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்’’ என்ற பெருமித அறிவிப்புடன் ‘ஆயுஷ்மான் பாரத்’ என்ற தேசிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தைத் தொடங்கி வைத்துள்ளார். தமிழகத்தில் ஏற்கெனவே ‘முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்’, இந்த மத்திய அரசின் திட்டத்துடன் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், தமிழகத்தில் செயல்பட்டுவரும் ‘முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்’ என்னவிதமான பலன்களைத் தந்திருக்கிறது, இதனால் பயன்பெற்றவர்கள் யார் எனத் தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் புள்ளிவிவரங்களைப் பெற்று ஜூனியர் விகடன் குழு ஆராய்ந்தது. அத்துடன் மருத்துவத்துறை செயற்பாட்டாளர்களின் கருத்துகளையும் கேட்டது. இதுதொடர்பாக சென்ற இதழில் வெளியான கட்டுரையின் தொடர்ச்சி இது...

RTI அம்பலம்: ஆயிரம் கோடி ரூபாயைத் தனியாருக்கு அள்ளிவிடவா காப்பீட்டுத் திட்டம்? - 2

‘‘காப்பீட்டுத் திட்டம் வந்த பிறகு அரசு மருத்துவமனைகளின் தன்மையே மாறிவிட்டது’’ என்கிறார் மக்கள் நலவாழ்வுக்கான மருத்துவர்கள் அரங்கத்தின் பொதுச்செயலாளர் காசி சண்முகம். ‘‘மருத்துவர்கள், லேப் டெக்னீஷியன் போன்ற பல அத்தியாவசியமான பணியிடங்களில் பற்றாக்குறை நிலவுகிறது. அதனால் காலதாமதம், அலைக்கழிப்பு, பராமரிப்பின்மை உள்ளிட்ட பிரச்னைகள், அரசு மருத்துவமனையை நோக்கி நோயாளிகள் வருவதைத் தடுக்கின்றன. இவற்றையெல்லாம் சரிசெய்தால்தான் தனியார் மருத்துவமனைக்குச் செல்லும் நிதி, அரசுக்குக் கிடைக்கும். காப்பீட்டுத் திட்டம் மூலம் வருவாய் கிடைப்பதால், அரசு மருத்துவமனைகளில் காப்பீட்டு அட்டை இருந்தால் மட்டுமே உடனடிச் சிகிச்சை பெறமுடியும் என்ற நிலை உருவாகிவிட்டது. காப்பீட்டு அட்டை இல்லாத நோயாளிகளுக்கு மிகவும் தாமதமாக அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது. மருத்துவர்களுக்கு ஊக்கத்தொகை தருவதானது, சேவை மனப்பான்மையில் செயல்படவேண்டிய மருத்துவர்களையும் லாப நோக்கில் செயல்படச்செய்கிறது” என ஆதங்கப்படுகிறார்.

‘‘தமிழகத்தில் அதிக அளவில் இருப்பவை சிறிய தனியார் மருத்துவமனைகள் தான். ஆனால், இவற்றில் சிகிச்சை பெறுவோருக்குப் பலனே இல்லை’’ என அதிருப்தி தெரிவிக்கிறார், பசுமை எழுத்தாளரும் மூத்த மருத்துவருமான ஜீவானந்தம். ‘‘காப்பீட்டுத் திட்டத்தில் மூன்று விதமான பிரச்னைகள் இருக்கின்றன. ஒன்று, இந்தத் திட்டத்துக்காக, ஆண்டுக்கு ஆயிரம் கோடி ரூபாய்க்குமேல் செலவிடப்படுகிறது. இரண்டாவது, இந்தத் திட்டத்தில் பெரும்பாலும் பயனடைவோர் நகர்ப்புறத்திலுள்ள 50 படுக்கைகளுக்கு மேல் கொண்ட பெரிய கார்ப்பரேட் மருத்துவமனைகளே! மருத்துவத்துக்கு எந்தவிதத்திலும் தொடர்பு இல்லாத கார்ப்பரேட் நிறுவனங்கள் மருத்துவமனைகளைக் கட்டிவருகின்றன. மூன்றாவதாக, மருத்துவத் துறையில் முக்கிய அங்கமான செவிலியர்கள், மருத்துவம்சார் பணியாளர்களுக்கு இத்திட்டத்தில் இடமில்லை. கிராமப்புற மருத்துவமனைகளில் பணியாற்றும் இளம் மருத்துவர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்களுக்கு இதனால் பலன் கிடைப்பதில்லை. உண்மையில், முதலமைச்சர் மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் எளிய மக்களுக்குப் பயன்பட வேண்டும் என்றால், கூட்டுறவு மருத்துவமனைகளை உருவாக்குவதே வழி” என்கிறார், ஜீவானந்தம்.

RTI அம்பலம்: ஆயிரம் கோடி ரூபாயைத் தனியாருக்கு அள்ளிவிடவா காப்பீட்டுத் திட்டம்? - 2

காப்பீட்டுத் திட்டத்தில் உள்ள குறைகள், தவறுகளைப் பற்றி ஏராளமான புகார்கள் கூறப்படுகின்றன. ஆனால், அரசுத் தரப்பில் கேட்டால், ‘அப்படியா?’ என்கிறபடி அதிர்ச்சி காட்டுகிறார்கள். உயிராபத்தான அல்லது தீவிரமான பிரச்னைகளுக்குத் தனியார் மருத்துவமனைகளில் சேரும் பெரும்பாலானவர்கள், விரைவாக நலமாகி வீடு திரும்பவேண்டும் எனும் பதற்றத்தில், கடன் வாங்கியாவது கூடுதல் தொகையைக்

RTI அம்பலம்: ஆயிரம் கோடி ரூபாயைத் தனியாருக்கு அள்ளிவிடவா காப்பீட்டுத் திட்டம்? - 2

கட்டிவிடுகிறார்கள். அவர்கள் தாங்கள் சிகிச்சையில் எதிர்கொண்ட பிரச்னைகள் பற்றிப் புகார் செய்வதில்லை. மிகவும் குறைவானவர்கள் மட்டுமே தங்களுக்கு ஏற்பட்ட பாதிப்பு குறித்துப் புகார் அளிக்க முன்வருகின்றனர். இந்தத் திட்டம் ஆரம்பிக்கப்பட்டது முதல் கடந்த ஆண்டுவரை, மொத்தம் 349 புகார்களே வந்துள்ளன. காலாவதியான ஸ்டென்ட்களை நோயாளிகளுக்குப் பொருத்தியது போன்றவை முக்கியமாகக் குறிப்பிடப்பட வேண்டியவை. இதிலும், 117 புகார்கள் தொடர்பாக மட்டுமே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதாவது, 200-க்கும் மேற்பட்ட புகார்கள் மீது நடவடிக்கை இல்லை. இதன் பின்னணியில், பணப் பரிமாற்றம் முக்கிய காரணமாக இருக்கிறது என்பது பரவலான குற்றச்சாட்டு!

‘‘காப்பீட்டுத் திட்டம் தொடர்பாகவே, 1800 425 3993 எனும் கட்டணமில்லாத் தொலைபேசி உள்ளது. சந்தேகங்கள், அவசரத் தகவல்கள் என நாள்தோறும் 400 முதல் 500 அழைப்புகள் வருகின்றன. புகார்கள் மிகக் குறைவாகத்தான் வருகின்றன. புகார்கள் மீது உடனடி நடவடிக்கை எடுப்பதற்காக, செல்போன் ஆப் அறிமுகப்படுத்தி உள்ளோம். பயனாளிகளிடமிருந்து மருத்துவமனைகள் கூடுதலாகப் பணம் வசூலிப்பது தெரியவந்தால், அத்தொகையின் மீது பல மடங்கு வரை அம்மருத்துவமனைக்கு அபராதம் விதிக்கப்படும். மேலும், பயனாளியிடமிருந்து வசூலிக்கப்பட்ட தொகையைத் திரும்பக்கொடுத்து, அதற்கான சான்றைச் சமர்ப்பிக்க வேண்டும். புகார்கள் மீதும் விரைந்து நடவடிக்கைகளை எடுத்துவருகிறோம்” என்கிறார் மருத்துவம் மற்றும் நலப்பணிகள் துறை கூடுதல் இயக்குநர் மருத்துவர் செல்வவிநாயகம்.

RTI அம்பலம்: ஆயிரம் கோடி ரூபாயைத் தனியாருக்கு அள்ளிவிடவா காப்பீட்டுத் திட்டம்? - 2

சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரிடம் மொத்த விவகாரத்தையும் முன்வைத்தபோது, ‘‘மருத்துவமனைகளைத் தேர்வுசெய்வதில் வெளிப்படைத்தன்மையுடனே செயல்படுகிறோம். காப்பீட்டுத் திட்டத்தில் ஒவ்வொரு சிகிச்சைக்கும் உரிய கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளதால், தனியார் மருத்துவமனைகள் தன்னிச்சையாகக் கட்டணம் வசூலிக்க முடியாது. தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளைவிட தனியார் மருத்துவமனைகளின் எண்ணிக்கை அதிகம். தனியார் மருத்துவமனைகளின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும்போது, அவற்றுக்குச் செல்லும் நிதியும் அதிகமாகத்தான் இருக்கும். இத்திட்டத்தில் அரசு மருத்துவமனைகளின் பங்கு படிப்படியாக அதிகரிக்கப்படும். பல தனியார் மருத்துவமனைகளில் காப்பீட்டுத் திட்டத்தில் சிறப்பாகச் செயல்பட்டுவருவதால்தான், ஆண்டுதோறும் அங்கு செல்லும் நோயாளிகளின் எண்ணிக்கையும் அதிகரித்துவருகிறது” என்றார் அமைச்சர் விஜயபாஸ்கர். 

கடந்த ஆண்டின் புதிய ஒப்பந்தத்தின்படி, ஒவ்வோர் ஆண்டும் ரூ.1,069 கோடி வீதம் நான்கு ஆண்டுகளுக்கு ரூ.4,276 கோடிகள் காப்பீட்டுத் திட்டத்துக்காக வழங்கப்படவுள்ளது. இதில் குறைந்தது, ரூ.3000 கோடிக்கு மேல் தனியார் மருத்துவமனைகளுக்குப் போகும் வாய்ப்பு உள்ளது.

இதைக் குறிப்பிடும் பொதுச் சுகாதார வல்லுநர்கள், ‘‘அரசுக்கு இருக்கும் கடுமையான நிதி நெருக்கடியில், இதுவரை தனியாருக்குத் தந்த பணத்தை வைத்து, டெல்லி ’எய்ம்ஸ்’ தரத்தில் தமிழக அரசே இரண்டு பெரிய மருத்துவமனைகளை இங்கு கட்டியிருக்கமுடியும். இனி ஒதுக்கவுள்ள மூவாயிரம் கோடி ரூபாயைத் தனியாருக்குத் தருவதற்குப் பதிலாக, 30 மாவட்டங்களில் தலா 100 கோடி ரூபாய் செலவில் அதிநவீன பன்னோக்கு சிறப்பு மருத்துவமனைகளை உருவாக்க முடியும். இவை அரசின் நிரந்தரச் சொத்தாகவும் இருக்கும். ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு வேலையும் கிடைத்திருக்கும்” என்று சாத்தியக்கூறுக் கணக்குகளையும் முன்வைக்கிறார்கள்.

இதைப் பற்றியெல்லாம் யோசிக்க தமிழக அரசுக்கு நேரம் இருக்கிறதா?

- ஜி.லட்சுமணன், ஆனந்த்

திடீரென அதிகரித்த நோய்!

வி
மர்சனங்களுக்கு இடையில் சில சுவாரஸ்யங்களும் இந்தத் திட்டத்தில் உண்டு. ‘‘தென் மாவட்டத்தில் உள்ள ஓர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கண் ரத்த அழுத்தத்துக்கான சிகிச்சை செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை திடீரென 300 மடங்கு அதிகரித்திருந்தது. சென்னையிலிருந்து அதிகாரிகள் அங்கு படையெடுத்தனர். நேரடி விசாரணையில் கண்டறிந்த உண்மையைக் கேட்டு, நடவடிக்கை எடுப்பதா வேண்டாமா எனச் சங்கடத்துக்கு உள்ளாகினர். காரணம், காப்பீட்டு நிறுவன இலக்குகளுக்காக, மருத்துவர்கள் விதிமுறைகளைக் கொஞ்சம் மாற்றியிருந்தனர். தொடக்கத்தில், கண்புரை அறுவை சிகிச்சைக்குக் காப்பீடு இல்லை; ஆனால் கண்ணுக்குள் ஏற்படும் ரத்த அழுத்தத்துக்குக் காப்பீட்டுச் சிகிச்சை இருந்தது. இதனால், கண்புரை மட்டும் உள்ளவர்களுக்கும் கண் ரத்த அழுத்தம் இருப்பதாகக் குறிப்பிட்டு, கண்புரை அறுவைச்சிகிச்சை செய்யப்பட்டது. அதாவது, செய்யப்பட்டது கண்புரை சிகிச்சைதான்; ஆவணத்திலோ கண் ரத்த அழுத்தப் பாதிப்பு எனப் பதிவாகியிருந்தது. முடிவாக, மேற்கொண்டு இப்படி நடக்காமல் பார்த்துக்கொள்வது என்று தீர்மானிக்கப்பட்டு, விவகாரம் தீர்க்கப்பட்டது. அதன்பிறகு, கண்புரைக்கும் காப்பீட்டுத் திட்டத்தில் இடம் அளிக்கப்பட்டது’’ என்கிறார், ஓய்வுபெற்ற மருத்துவக் கல்லூரிப் பேராசிரியர் ஒருவர்.