Published:Updated:

`எம்.ஆர்.ராதா மனைவி, நளினி, விஷால் அம்மா' - செலிபிரிட்டிசுக்குப் புடவை விற்கும் ப்ரியா

நடிகை நளினி மேடத்தோட அம்மாவுக்கு என் பாட்டி சேலை வியாபாரம் பண்ணினாங்க. நளினி மேடம்க்கு என் அம்மா கொடுத்தாங்க. இப்போ அவங்க பொண்ணுங்களுக்கு நான் கொடுக்கிறேன்.

`எம்.ஆர்.ராதா மனைவி, நளினி, விஷால் அம்மா' -  செலிபிரிட்டிசுக்குப் புடவை விற்கும் ப்ரியா
`எம்.ஆர்.ராதா மனைவி, நளினி, விஷால் அம்மா' - செலிபிரிட்டிசுக்குப் புடவை விற்கும் ப்ரியா

ட்டென்றாலே பெண்களின் முகம் பளிச்சென்று மின்னும். அதிலும் காஞ்சிப்பட்டு, ஆரணிப்பட்டுக்கெல்லாம் மவுசு அதிகம். புகழ்மிக்க காஞ்சிப் பட்டுகூட இப்போதெல்லாம் தரம் குறைவாக வர ஆரம்பித்திருக்கின்றன என்கிற விமர்சனங்களைப் பார்க்க முடிகிறது. ஆனால், சென்னை அசோக் நகரைச் சேர்ந்த ப்ரியா வாடிக்கையாளர்களின் மனம் அறிந்து பட்டுப்புடவைகளை விற்பதில் கை தேர்ந்திருக்கிறார். கைத்தறி மூலம் நெய்யப்படும் பட்டு விற்பனையில் முத்திரை பதிக்கிறார். 

``என்னோட பூர்வீகம் காஞ்சிபுரம்தாங்க. சென்னை அசோக் நகர்ல `ஶ்ரீ ஆர்யா சில்க்ஸ்' வெச்சு நடத்திட்டு இருக்கிறேன். நாங்க வழி வழியா தறி வெச்சு நடத்திட்டு வர்றோம். கிஃப்ட் சாரீஸ்ல இருந்து முகூர்த்த சாரீஸ் வரையிலான புடவைகள் எங்ககிட்ட ஸ்பெஷல். காஞ்சிபுரம்னாலே கைத்தறியில நெய்யுற மூணு இழை முறுக்குப் பட்டுதான் ஃபேமஸ். அப்போதெல்லாம் தறியில இருந்து நெய்யுற பட்டை என்னோட பாட்டி துணிப்பைகள்ல வெச்சு வியாபாரம் பண்ணிட்டு வருவாங்களாம். அவங்களை மாதிரியே என் அம்மாவும். காலம் எவ்வளவுதான் நவீனத்துக்கு மாறினாலும் இப்போதும் எங்க உறவுக்காரங்க எல்லோரும் கைத்தறியிலயேதான் பட்டு நெய்யுறாங்க. அப்போ இருந்து இப்போது வரை சில செலிபிரிட்டிக்களுக்கும் நாங்கதான் தொடர்ந்து பட்டுச் சேலை கொடுத்திட்டு இருக்கோம். நடிகை நளினி மேடத்தோட அம்மாவுக்கு என் பாட்டி சேலை வியாபாரம் பண்ணினாங்க. நளினி மேடம்க்கு என் அம்மா கொடுத்தாங்க. இப்போ அவங்க பொண்ணுங்களுக்கு நான் கொடுக்கிறேன். இப்படித் தலைமுறை தலைமுறையா நாங்க அவங்களுக்கு வாடிக்கையா புடவை வியாபாரம் பண்ணிட்டு இருக்கிறோம். அவங்க மட்டுமல்ல, ராதாரவி சாரோட குடும்பத்துல உள்ளவங்களுக்கும் நாங்கதான் ஃபேவரைட். எம்.ஆர்.ராதா சாரோட மனைவி காலத்துல இருந்தே அவங்க குடும்பத்தினருக்கு நாங்க நெய்யுற பட்டுதான் விருப்பம். எஸ்.வி.சேகர் சார் வீட்டுல உள்ள பெண்களும் எங்ககிட்ட விரும்பி புடவைகள் எடுப்பாங்க. அவங்க வீட்டுல நடக்கிற எல்லா சுப நிகழ்ச்சிக்கும் இங்க இருந்துதான் பட்டுப் புடவைங்க போகும். இது தவிர நடிகர் விஷாலோட அம்மாவும் விரும்பி வாங்குவாங்க.

நான் சின்ன வயசுல இருக்கும்போதே பாட்டி, அம்மாவோட வியாபாரத்தைப் பார்த்து வளர்ந்தவ. அதனால, ஃபேஷன்தான் நம்ம ஃபீல்டுன்னு முடிவு பண்ணி பி.காம் முடிச்சிட்டு ஃபேஷன் டிசைன் படிச்சேன். நாம ஒரு கடையில போய் புடவை பார்க்கிறோம்னா அங்கே இருபது டிசைன்ஸ் காட்டுவாங்க. அதுல நமக்கு ரெண்டுதான் பிடிக்கும். ஆனா, நான் ரெண்டு, மூணு சேலைகள் காட்டினாலே அதுல ஒரு புடவை கண்டிப்பாப் பிடிச்சுடும். சேலை வாங்க வர்றவங்களோட மனநிலையைத் தெரிஞ்சு வெச்சுக்கிறதுல என் பாட்டியோட ஸ்டைல்தான் எனக்கு. இந்த டிசைன்ஸ்க்கு இந்த கலர் கொடுக்கலாம், இந்த கலருக்கு அந்த டிசைன்ஸ் கொடுக்கலாம்னு சேலை நெய்யும்போதே பக்கத்துல இருந்து ஒவ்வொண்ணையும் பாத்துப் பாத்துச் சொல்லுவேன். பாட்டியும் அம்மாவும் வியாபாரம் பண்ணிட்டு இருந்த காலத்துல போட்டி இல்லை. ஆனா, இப்போ போட்டி அதிகமாவே இருக்கு. அதனாலதான் விசைத்தறி அதிக அளவுல வர ஆரம்பிச்சது. அதுல இருந்தே பட்டுல தரமும் குறைய ஆரம்பிச்சிடுச்சு. ஆனாலும், நாம நம்ம பாரம்பர்யத்தை விட்டுடக் கூடாதுன்னு தொடர்ச்சியா நாங்க கைத்தறி மூலமா பட்டு நெய்துக்கிட்டு இருக்கிறோம். கையால புடவையை நெய்யுறதுக்குக் குறைஞ்சது ரெண்டு, மூணு நாள்கள் ஆகிடும். அப்படி நாள்கள் ஆனாலும் சேலையில கிடைக்கிற தரத்தை வாடிக்கையாளர்கள்  சேலையைத் தொட்டு உணரும்போது அவங்க முகத்துல தெரியுற மகிழ்ச்சி கொடுக்கிற சந்தோஷத்துக்கு அளவே இல்லைங்க” பூரிப்போடு முடிக்கிறார் ப்ரியா.