''சென்னையில் பிடித்த இடம் எது?''

''தியசாபிகல் சொஸைட்டியை ஒட்டி அடையாறில் இருந்து பெசன்ட் நகருக்குப் போகும் அந்த மரங்கள் அடர்ந்த அமைதி யான சாலை ரொம்பப் பிடிக்கும்!''

''பிடித்த கலர் எது?''

''வெள்ளை (இதை கலர்னு சொல்லக் கூடாது இல்லையா?!) ரொம்பப் பிடிக்கும். அதிகமா வெள்ளை உடைகளைத்தான் நான் உடுத்துவேன். அப்புறம் இலைப் பச்சை கலர் பிடிக்கும்!''

''மறக்க முடியாத பள்ளிக்கூட ஆசிரியர்பற்றி?''

''நான் கேரளாவில் செயின்ட் செபாஸ் டியன் ஸ்கூல்ல படிச்சுக்கிட்டு இருந்தப்போ, அந்த ஸ்கூல் அசிஸ்டென்ட் ஃபாதர் மாத்யூ கோதகத்தான் என்னை மேடைகள்ல பாடச் சொன்னவர்! என் அம்மாகிட்ட வந்து 'உங்க பையனை நிறையப் பாட வைங்க’னு சொல்லுவார்! ஃபாதர் மாத்யூ இப்ப உயிரோடு இல்லே. ஆனாலும் என்னால அவரை மறக்க முடியாது!''

''நெருங்கிய நண்பர்பற்றி...''

''ஒரு நண்பன் பால்(Paul). இவன் இப்போதும் என்னோடவே இருக்கான். சின்ன வயசுல ஸ்கூல்ல ஒண்ணா படிச்சதுல இருந்து சிநேகம். அதே மாதிரி இன்னொரு ஸ்கூல் நண்பன் 'தங்ஙள்’. முஸ்லிம் பையன். எனக்கு ரொம்ப நெருக்கமா இருந்தவன்! கொச்சின்ல இருந்து மெட்ராஸ் வரணும்! ஆனா, கொச்சின்ல இருந்து மெட்ராஸ் வர்றதுக்கான 16 ரூபா டிக்கெட் கட்டணம் எங்கிட்ட இல்லே... 'தங்ஙள்’ளும் பெரிய பணக்காரப் பையன் கிடையாது. ஆனா, அவன்தான் என்னைத் தைரியப் படுத்தி எங்க ஊர் டாக்சி டிரைவர் ஒருத்தர்கிட்ட எனக்குப் பணம் வாங்கிக் கொடுத்தது! நான் நல்லா வந்ததும் அந்த டாக்சி டிரைவருக்கு என்னாலான உதவி யைப் பண்ணினேன். ஆனா, அந்த டாக்சி டிரைவரை எனக்கு உதவவைத்த 'தங்ஙள்’ இன்னிக்கு உயிரோடு இல்லை!''

''பிடித்த டிபன் எது?''

''எங்க ஊர் 'தேங்காய்ப்புட்டு’. அது 'இட்லி’ மாதிரி வேக வைக்கிற டிபன்கிறதால உடம்புக்கு ரொம்ப நல்லது. ஆனா, அதில் தேங்காய் இருக்கிறதால தொண்டைக்குக் கொஞ்சம் கெடுதல். அதனால ரிக்கார்டிங் இருக்கிற அன்னிக்குத் தேங்காய்ப்புட்டைத் தவிர்த்துடுவேன்!''

''ஒவ்வொரு மனிதனும் தெரிந்துகொள்ள வேண்டிய முக்கிய விஷயம் எது?''

''மத்தவங்களுக்கு அறிவுரை சொல்லக்கூடிய அளவுக்கு நானே அந்த விஷயத்தில் முழுக்கத் தேறியிருக்கேனானு தெரியல. இருந்தாலும் சொல்றேன்... மதம், கலாசாரம் இதுக்கெல்லாம் அப்பாற்பட்டு இருக்கறது அன்பு. இதை யார் மேலயும் எது மேலயும் செலுத்தற மனோபாவம் வந்துச்சுன்னா, உலகத்துல சண்டைகள் குறையும்! அந்த அன்புங்கிற பக்குவம்தான் எல்லா மனுஷனுக்கும் இருக்கணும்னு நினைக்கிறேன்!''

''ரொம்பப் பிடித்த ஹோட்டல் எது?''

''எத்தனையோ ஊர்கள்ல, எத்தனையோ ஹோட்டல்கள்ல நான் தங்கியிருக்கேன். ஆனா, எல்லா இடத் துலயும் அது ஹோட்டல்ங்கிற உணர்வு இருந்துட்டே இருக்கும். ஆனா, எர்ணாகுளம் 'பாரத் டூரிஸ்ட் ஹோம்’ல ரூம் நம்பர் 214-ல் தங்கினா மட்டும் அது ஹோட்டல்ங்கிற உணர்வே எனக்கு இருக்காது! என் வீடு மாதிரியே உணர்வேன். அதே ஹோட்டல்ல ரூம் மாறினாக்கூட வீட்டு உணர்வு போயிடுது!''

''மனைவி, குழந்தைகள்பற்றி...''

''என் மனைவி பிரபா லிஷீஸ்ணீதீறீமீ கீஷீனீணீஸீ. எனக்காக எதை வேணாலும் தியாகம் பண்ணுவா. அப்புறம் எனக்கு மூணு பசங்க! வினோத், விஜய், விஷால்னு. மூணு பேருமே சங்கீதம் கத்துக்கறாங்க! இதுல ரெண்டாவது பையன் விஜய்க்கு சங்கீதத்துல ஆழ்ந்த விருப்பம் இருக்கு!''

''தங்களுக்கும் தங்கள் மனைவிக்கும் கருத்து வேறுபாடுகள் வருவது உண்டா? எந்தெந்த சந்தர்ப்பங்களில்?''

''கருத்து வேறுபாடு, சண்டைச் சச்சரவு இல்லாம எந்தக் குடும்பமாவது நடக்குமா? அப்படி இருக்குனு சொன்னா நான் நம்ப மாட்டேன்! (சிரிக்கிறார்) எங்க சண்டைகள் எங்களைப் பத்தியே இருக்காது! பெரும்பாலும் எங்க குடும்பத்தார் பிரச்னைகள், அவ குடும்பத்துப் பிரச்சனைகள் பத்திதான் ரெண்டு பேருக்குள்ளே விவாதமே வரும்! வந்த சுருக்குல காணாமப் போயிடும்! அப்படி அதைக் காணாம அடிக்கிறதுக்கான லகான் பெண்களிடம்தான் இருக்குனு சொல்வேன். புருஷன் ரொம்ப கோவத்துல கத்தும்போது மனைவியும் கூட கத்தக் கூடாது. புருஷன் கத்தி ஓய்ஞ்சதும் மெள்ள அறிவுரை பண்ணலாம்!''

''சமையல் தெரியுமா?''

''தாராளமா தெரியும். சென்னைக்கு வந்த புதுசுல நானேதான் எனக்கு குக்! அப்போ அடிக்கடி உப்புமா தான் பண்ணிச் சாப்பிடுவேன். அவசரத்துக்கு அது தானே ஆகும்! ஆனா, இப்ப எல்லாமே சமைக்கத் தெரியும்.''

''நீங்கள் ஏன் தேர்தலில் நின்று எம்.எல்.ஏ. ஆகக் கூடாது?''

''இப்பவா? ஸாரி! நான் சொன்ன மாதிரி முழுக்க முழுக்க அன்பே ஆள்கிற மாதிரி உலகம் உருவாகட்டும்! அப்ப எம்.எல்.ஏ. என்ன? உங்க ஆசைக்கு அப்ப அமைச்சரா ஆகவும்கூடத் தயார்!''