பொம்மையா முருகன்
முன்னாடியெல்லாம் ‘கவர்மென்ட் நமக்கு ரேஷன்ல சக்கரைய போடுமா... மழைல காணாமப்போன ரோட போடுமா’ன்னு எதிர்பாத்திட்டிருந்தோம். ஆனா இப்ப, ‘அவன புடிச்சி உள்ள போடுமா... இவன புடிச்சி உள்ள போடுமா’ன்னு எதிர்பார்த்திட்டிருக்கோம்...

# டிஜிட்டல் இந்தியா!

Yuva Krishna
நிலாவில் சாய்பாபாவைப் பார்த்ததாக பலரும் சொல்கிறார்கள். அது அவரவரின் தனிப்பட்ட கருத்து. சாய்பாபா சார்பாக புகார் அளிக்கப்பட்டால் அம்மாவின் அரசு தகுந்த நடவடிக்கை எடுக்கும். தேவைப்பட்டால் தனிப்படை அமைத்து நிலாவுக்கே சென்று நேரடி விசாரணை நடத்தவும் நாங்கள் தயார். - ஜெயக்குமார்

Muthu
‘‘இனி தேசிய அரசியலில் ஈடுபடப் போகிறேன். எட்டாவது தேசியக் கட்சியாக லட்சிய தி.மு.க இருக்கும்’’ - டி.ராஜேந்தர்
# இதை எல்லாம் கேட்டுக்கிட்டு நாம இருக்குறது தான் எட்டாவது உலக அதிசயம்.

Saba Sabastin Sabas
சின்ன வயசுல நான் மெடலோட வந்து ‘கராத்தே போட்டில ஜெயிச்சுட்டேன்’னு சொன்னத எங்கம்மா நம்பவே இல்ல - சீமான்

# நீ சொன்னதுலே இதுதாம்ணே நம்புற மாதிரி இருக்கு!

Sankar Ganesh
பகுதிநேர ஆசிரியர்களுக்கு மாத ஊதியம், அதிகபட்சம் ரூபாய் 7,700 மட்டுமே. மூன்று நாட்களுக்கும் மேலாக குடும்பம், குழந்தைகளுடன் பணி நிரந்தரம், ஊதிய உயர்வு வேண்டி போராடி வருகின்றனர். அதுகுறித்தெல்லாம் இங்குள்ளவர்கள் ‘சிலர்’ பேசுவார்களா என எதிர்பார்த்தேன். ம்ஹும். இந்த ஊதியத்தில் ஆயிரக்கணக்கான ஊழியர்கள் எப்படிக் குடும்பம் நடத்துவர்? அவர்களுடைய உடை, நடைக்குக்கூட இது போதாது.

போராட்டக்களத்தில் ஓர் ஊழியர் அழுதுகொண்டே கூறுகிறார். ‘‘பகுதிநேர ஆசிரியர்களை நியமித்தது அ.தி.மு.க. இருந்தாலும் தி.மு.க தனது தேர்தல் அறிக்கையில் பகுதிநேர அரசு ஊழியர்களை பணி நிரந்தரம் செய்வதாக வாக்குறுதி தந்தது. ஆனால், எங்களை நியமித்த அ.தி.மு.க ஆட்சியில் பணி நிரந்தரத்திற்கு வாய்ப்பேயில்லை என அமைச்சர் கூறுகிறார். நாங்கள் சாவதைத் தவிர வேறுவழியில்லை!’’

Abdul Hameed Sheik Mohamed
நாங்க சின்ன வயசில ‘மாட்டுக் கண்ணுல எம்.ஜி.ஆர் தெரியறார்’ என்று பரபரப்பா பேசிப்போம். இப்ப நிலாவுல சாய்பாபா தெரியறார். நம் ஊர் வளருதுடா...

விஷ்வா விஸ்வநாத்
மனைவி கணவனின் அடிமை இல்லை: உச்ச நீதிமன்றம்

# யுவர் ஆனர், எப்பவுமே கணவன்கள்தானே மனைவிகளுக்கு அடிமைகள். ஒலக வழக்கம் அதுதானே!

அகிலன் கார்த்திகேயன்
கணவனுக்கோ மனைவிக்கோ உடன்பாடு இல்லையெனில், அவரவர் பாதையில் விலகிச்சென்று புதிய உறவையோ, வாழ்வோ அமைத்துக்கொள்ளலாம். இப்படித்தான் உச்ச நீதிமன்றத் தீர்ப்பைப் புரிந்துகொள்ளலாமே ஒழிய, இனி எல்லாப் பெண்களும், எல்லா ஆண்களும் உறவுக்கு வெளியே ஓடிக் கொண்டிருப்பார்கள் என்று தட்டையாக புரிந்துகொள்ளக்கூடாது!

Gnanendran
18 வருடம் கட்சி நடத்துற டி.ஆருக்கு தொண்டர் இல்லை; ஆனால், 3 வருடம் படம் இல்லாத S.T.R-க்கு ரசிகர்கள் உண்டு
# அடடே... ஆச்சர்யக்குறி!

@/6Vp7cSXoQPzsMDg
அமைச்சர்கள் தூங்கினால் கனவில் நான்தான் வருகிறேன் - டி.டி.வி.தினகரன்
# கனவுல வர்றது இருக்கட்டும். முதல்ல ஜெயிச்ச தொகுதி பக்கம் வாங்க!

@banu_twitz
தேர்தல் களத்தில் ரஜினி விஸ்வரூபம் எடுப்பார்
- ஏ.சி.சண்முகம்
# அப்ப கமல்ஹாசன் என்ன கபாலி எடுப்பாரா?

@madurai_jinna
மத்தியில் ஆள நினைப்பவர்கள் முதல்வர் பழனிசாமி வீட்டின் கதவைத் தட்டவேண்டிய நிலை ஏற்படும் - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி
# அவரே டெல்லிய தட்டிக்கிட்டு இருக்காரு... நீங்க வேற!

@sultan_Twitz
மிரட்டும் வகையில் அமைச்சர் துரைக்கண்ணு பேசவில்லை - அமைச்சர் கடம்பூர் ராஜு
# அவர் பேசறதுக்காக வாயைக் குவிக்கும்போது, பின்னாடி இருந்து யாரோ டப்பிங் பண்ணிட்டாங்க... அதானே!

@19SIVA25
அ.தி.மு.க அரசை விமர்சித்த என்னுடைய நாக்கையும் அறுப்பார்களா? - பொன்.ராதாகிருஷ்ணன்
# எங்களுக்கு பி.ஜே.பி-ன்னா மட்டும்தாங்க பயம்... கருணாஸா இருந்தா தூக்கிடுவோம்!

@Andhuvaanjoseph
கல்யாணத்துல பொண்ணைவிட பொண்ணோட தங்கச்சி அதிகமா மேக்கப் போட்டுக்கிட்டு சுத்தற மாதிரி, இந்த ஆட்சியில அ.தி.மு.க-காரங்களைவிட பி.ஜே.பி-காரங்கதான் ஆக்டிவா சுத்துறாங்க!

@arun_dhanaraj
கலைஞருக்கு சிகிச்சையளித்த மருத்துவர்கள் எல்லாம் அவருக்கு புகழ் வணக்கம் செலுத்துகிறார்கள்; ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் விசாரணை கமிஷன் முன் ஆஜராகிறார்கள்.

@mekalapugazh
அநேகமாக அ.தி.மு.க-வின் அடுத்த போராட்டம்... தி.மு.க-விலிருந்து எம்.ஜி.ஆரை நீக்கியதற்காக கலைஞரை எதிர்த்து அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் நடத்தப்படுமோ!

@gks9559
பி.ஜே.பி-காரங்க எதுக்கெடுத்தாலும் ‘குஜராத்தைப் பாருங்க, குஜராத்தைப் பாருங்க’ன்னுதானே சொல்லுவாங்க. நிரவ் மோடி, ஜதின் மேத்தா, மெகுல் சோக்சி, இப்ப நிதின் சந்தேசரா. அதிகமில்லை ரூ.5,000 கோடிதான் சுருட்டிக்கிட்டு ஓடியிருக்கான். இதைத்தான் குஜராத்தைப் பார்த்துக் கத்துக்கணும் போல.

@krishnaskyblue
என்னைக் கைது செய்ய 1,500 துணை ராணுவப்படையினர் வந்தார்கள்: சீமான்

‘‘அப்புறம் என்னாச்சு?’’

‘‘வீட்டுக்கு முன்னாடி நின்ன 60,000 யானைகள், AK 74... இதையெல்லாம் பார்த்துட்டு திரும்பிப் போயிட்டாங்க...’’

@gokula15sai
இந்த ஆட்சி போய்விட்டால், நாய்கூட நம்மை மதிக்காது! - அமைச்சர் பாஸ்கரன் சிவகங்கையில் பேச்சு
# ‘மைண்ட் வாய்ஸ்’னு நினைச்சு சத்தமா பேசிட்டீங்க!

@Thaadikkaran
ஒரு நிர்வாகி கோர்ட்டை அவமதிப்பார், ஓர் எம்.எல்.ஏ போலீஸுக்கு சவால் விடுவார், அமைச்சர் நாக்கை அறுப்பேன் என்று சொல்வார். நம்புங்கள்... தமிழகம் அமைதிப் பூங்காதான்!

ஓவியம்: கார்த்திகேயன் மேடி