Election bannerElection banner
Published:Updated:

''பெண்ணியம்னா என்னான்னே இவங்களுக்குத் தெரியலை'' - நடிகை ரஞ்சனி

''பெண்ணியம்னா என்னான்னே இவங்களுக்குத் தெரியலை'' - நடிகை ரஞ்சனி
''பெண்ணியம்னா என்னான்னே இவங்களுக்குத் தெரியலை'' - நடிகை ரஞ்சனி

''சபரிமலைக்குப் போறதுக்கு முன்னாடி, ஃபேஸ்புக்கில் ஆபாசமா ஒரு படத்தைப் போட்டுட்டு கோயிலுக்கு வர்றாங்கன்னா, பிரச்னையை ஏற்படுத்தணும்னுதானே வந்தாங்க. அது கிரிமினல் இன்டென்ஷன்தானே.''

பரிமலையில் 144 தடை உத்தரவு நீட்டிப்பு; பா.ஜ.க தொண்டர் ஒருவர் தீக்குளிப்பு... இப்படி, சபரிமலை தொடர்பாகத் தினமொரு நெகட்டிவ் செய்திகள் வந்தபடியே இருக்கின்றன. 'பிரச்னை தீர்ந்து, அங்கு அமைதி திரும்பும் வரை கேரளாவை விட்டு வர மாட்டேன்' என்றபடி நடிகையும், 'ரெடி டு வெயிட் ஃபார் சபரிமலை' அமைப்பின் உறுப்பினருமான ரஞ்சனியிடம், தற்போது அங்கு சூழ்நிலை எப்படியிருக்கிறது என்று கேட்டேன்.    

''ஒருவர் நெருப்பு வைத்துக்கொண்டு இறந்ததால், நேற்றிலிருந்து மறுபடியும் இங்கே சூழ்நிலை மோசமாகிடுச்சு. அமைதியா இருக்க வேண்டிய கோயிலில், அநாவசியமா பிரச்னையை ஏற்படுத்துறாங்க. பிளான் பண்ணி அரசியலாக்கிட்டாங்க. இதனால், உண்மையா ஐயப்பனை வழிபடணும்னு வர்றவங்க நிம்மதியா தரிசனம் செய்ய முடியலை. பக்தர்களுடைய உரிமையில் தலையிடுறது தவறு'' என்றவர், தான் சந்திக்கும் எதிர்ப்புகளைப் பற்றியும் பகிர்ந்துகொண்டார். 

''ஒரு பெண்ணா இருந்துக்கிட்டு, பெண்களின் சமத்துவத்தை எதிர்க்கிறேன்னு சொல்லி, சோ கால்டு பெண்ணியவாதிகள் எல்லாம் என்மீது பயங்கரமான கோபத்தில் இருக்கிறார்கள். ரெஹானா ஃபாத்திமாவை கைதுசெய்தது சரின்னு சொன்னேன். அதனால இன்னும் கோபமாகிட்டாங்க. சபரிமலைக்குப் போறதுக்கு முன்னாடி, ஃபேஸ்புக்கில் ஆபாசமா ஒரு படத்தைப் போட்டுட்டு கோயிலுக்கு வர்றாங்கன்னா, பிரச்னையை ஏற்படுத்தணும்னுதானே வந்தாங்க. அது கிரிமினல் இன்டென்ஷன்தானே. அதைச் சொன்னதுக்கு என் மேலே கோபப்படறாங்கன்னா, அதுக்கெல்லாம் நான் பயப்படவே  மாட்டேன்.  

பெண்ணியம்னா என்னான்னே இவங்களுக்குத் தெரியலை. சபரிமலைக்குப் போவேன்னு சொல்ற பெண்களை நான் சப்போர்ட் பண்ணணும்னு சொல்றாங்க. இங்கே பிரச்னை ஏற்படுத்தணும்னு வர்ற ஃபெமினிஸ்ட்களுக்கு நான் ஒருபோதும் சப்போர்ட் பண்ண மாட்டேன்'' என்றார் அழுத்தம் திருத்தமாக . 

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு