“எங்கள் ஊரில் கூட்டத்தை நடத்துங்கள்” என நெய்வேலியைச் சார்ந்த பல வாசகர்கள் கோரிக்கை வைத்து வந்தனர். அவர்களின் விருப் பத்துக்கேற்ப நாணயம் விகடன் - ஐ.சி.ஐ.சி.ஐ புரூடென்ஷியல் மியூச்சுவல் ஃபண்ட் இணைந்து, ‘வளமான வாழ்க்கைக்கு மியூச்சுவல் ஃபண்ட்’ என்னும் முதலீட்டாளர் விழிப்பு உணர்வு நிகழ்ச்சியை நெய்வேலியில் நடத்தின.

இந்தக் கூட்டத்தில் முதலில் பேசிய ஐ.சி.ஐ.சி.ஐ புரூடென்ஷியல் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தின் தமிழ்நாடு மண்டல மேலாண்மை பொறுப்பாளர் (ரீடெயில் சேல்ஸ்) ஜீவன் கோஷி தரியன், மற்ற முதலீடு களுக்கும், மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டுக்கும் உள்ள வித்தியாசத்தை எடுத்துச் சொன்னதுடன், குறுகிய கால, நீண்டகால இலக்குகளுக்கான முதலீட்டு உத்திகளையும் குறிப்பிட்டார்.

அடுத்து பேசிய மியூச்சுவல் ஃபண்ட் நிபுணர் சொக்கலிங்கம் பழனியப்பன், சில ஃபண்டுகளின் கடந்த கால வரலாற்றை உதாரணமாகச் சொல்லி விளக்கினார். யாருக்கு எந்த வகை ஃபண்டுகள் ஏற்றதாக இருக்கும், அவரவர் இலக்குகளுக்கு ஏற்ற ஃபண்டுகளைத் தேர்வுசெய்வது எப்படி என்பது உள்பட மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டின் பல சூட்சுமங்களை விளக்கமாக எடுத்துச்சொன்னார்.

இறுதியாக வாசகர்களின் பல்வேறு சந்தேகங்களுக்கு நிபுணர்கள் இருவரும் பதிலளித்தார்கள். “பணவீக்கத்தைத் தாண்டிய வருமானத்தைக் கொடுக்கும் பாதுகாப்பான முதலீடு மியூச்சுவல் ஃபண்ட் என்பதைப் புரிந்துகொண்டோம்” எனப் பல புதிய முதலீட்டாளர்கள் மகிழ்ச்சியுடன் சொன்னார்கள்.

- கா.முத்துசூரியா,

படங்கள்: எஸ்.தேவராஜன்