Published:Updated:

“பாதாம் அல்வாவும், உப்புருண்டையும்தான் அவருக்கான தட்சணை!” நெகிழும் குன்னக்குடியின் சிஷ்யை

“பாதாம் அல்வாவும், உப்புருண்டையும்தான் அவருக்கான தட்சணை!” நெகிழும் குன்னக்குடியின் சிஷ்யை
“பாதாம் அல்வாவும், உப்புருண்டையும்தான் அவருக்கான தட்சணை!” நெகிழும் குன்னக்குடியின் சிஷ்யை

யலின் வித்வான் பத்மஸ்ரீ குன்னக்குடி வைத்தியநாதன், இசை உலகில் சக்கரவர்த்தியாக வலம் வந்தவர். அவரின் பிரதான சிஷ்யை பாலாம்பாள் தான் தனது குருவுக்கு அளித்த தட்சணை பற்றி நம்மிடம் பகிர்கிறார். 

“நான், பாலாம்பாள். அப்போ எனக்கு பதினொரு வயசு இருக்கும். குன்னக்குடி ஐயா நாரத கான சபாவிலே குன்னக்குடி சங்கீத குருகுலம் வெச்சு நடத்திட்டு இருந்தார். வயலின் வாசிக்கத் தெரிந்த எனக்கு, அட்வான்ஸ்டு கிளாஸ் தேவைனு சொல்லி என் பாட்டிதான் ஐயாகிட்ட அனுப்பிவெச்சாங்க. அவர்கிட்ட மொத்தம் நாற்பதுக்கும் மேற்பட்டவங்க வயலின் கத்துக்கிட்டிருந்தாங்க. அவங்கள்ல பிரதான சீடர்களா நாங்க ஒரு ஆறு பேர் இருந்தோம். ஐயாவைப் பொறுத்தவரை தன்கிட்ட வயலின் கத்துக்க வர்றவங்ககிட்ட குருதட்சணையா பெருசா எதையும் எதிர்பார்க்க மாட்டார். தன்னோட சிஷ்யைகளுக்குக் கிடைக்கிற பாராட்டும் வாழ்த்தும்தான் அவருக்கான தட்சணையாக நினைப்பார். 

என்னோட அப்பா கேட்டரிங்ல இருந்ததால, அவருக்குப் பிடித்தமான உணவுகளைச் சமைத்துக் கொடுப்பார். குன்னக்குடி ஐயாவுக்கு பாதாம் அல்வா, உப்புருண்டை என்றால் ரொம்பப் பிடிக்கும். அதனால், அடிக்கடி அப்பா அதைச் செய்து கொடுப்பார். ஆசையோடு அதைச் சாப்பிட்டுவிட்டு அப்பாவைப் பாராட்டுவார். . அதோடு, அவர் என்னையும் வாழ்த்த மறப்பதில்லை. பாதாம் அல்வாவையும் உப்பு உருண்டையையும் தவிர அவருக்கு காபி என்றால் கொள்ளைப் பிரியம். அடிக்கடி காபி குடித்துக்கொண்டே இருப்பார். எனக்குத் தெரிந்து, அப்பா சமைக்கும் உணவுகளும், நான் மேடைகளில் வாசித்து முடித்ததும் எனக்குக் கிடைக்கிற பாராட்டும்தான் நான் அவருக்கு சிஷ்யையாகக் கொடுத்த தட்சணைனு சொல்லலாம்” முகம் பூரிக்க தன் குருவின் படத்தை வணங்குகிறார் பாலாம்பாள்