ஃபார்முலா -1 கார்கள் மாறிவிட்டன. அதன் தலைவர் பர்னி எக்கோல்ஸ்டன் ஓய்வு பெற்றுவிட்டார்; மைக்கேல் ஷூமேக்கர் இப்போது இல்லை; 2 சீசன்கள் மட்டுமே ரேஸ் ஓட்டியிருக்கும் மேக்ஸ் வெர்ஸ்டாபனுக்கு ரசிகர்கள் வந்து விட்டார்கள்; 1000 ஹார்ஸ்பவர் காரில் பவர் பூஸ்ட் போட்டுப் பறக்கிறார்கள் ரேஸர்கள். ஆனால், 18 ஆண்டுகளாக ஒரு விஷயம் மட்டும் இன்னும் மாறவே இல்லை. ஆமாம்... கிமி ராய்க்கோனன்...தி ஐஸ்மேன் மட்டுமே இன்னமும் ஃபார்முலா-1 ரேஸில் ரசிக்கவைக்கிறார்.

மைக்கேல் ஷூமேக்கர் காலத்தில் ரேஸ் ஓட்ட ஆரம்பித்தவர் லூயிஸ் ஹாமில்ட்டன் காலம் வரை சவால் விட்டுக்கொண்டிருக்கிறார். 38 வயதான கிமிக்கு ஓய்வு பெறும் எண்ணமே இல்லை. கார் ரேஸ் உலகின் உச்சபட்சம் ஃபார்முலா-1. இந்த ஃபார்முலா-1 ரேஸில் கிட்டத்தட்ட 18 ஆண்டுகள் எப்படி ஒருவரால் வெற்றிகரமாக இயங்க முடிகிறது, இவரை வாங்க முன்னணி அணிகள் ஏன் இவ்வளவு போட்டிப்போடுகின்றன, இவரை ஏன் ரசிகர்கள் கொண்டாடுகிறார்கள், உண்மையில் இந்த கிமி ராய்க்கோனன் யார்?

21 வயதில் ஃபார்முலா-1 ரேஸர்!

2000-ம் ஆண்டு சாபரில் டெஸ்ட் ரேஸசாக களமிறங்கினார் ராய்க்கோனன். அதுவரை கார்ட் ரேஸில் கார் ஓட்டியவர் கிமி. ஆனால், அங்கு ஒரு சாம்பியன்ஷிப் போட்டியில்கூட வென்றதில்லை. ``எந்த நம்பிக்கையில் ராய்க்கோனனை தேர்ந்தெடுத்தீர்கள்?’’ என்று டீமின் உரிமையாளர் பீட்டர் சாபரிடம் நிருபர்கள் கேட்டபோது “ராய்க்கோனன் ஒரு விசித்திரமானவன்” என்று மட்டும் சொன்னாராம் பீட்டர். ஆமாம்... அந்த விசித்திரம்தான் இன்றுவரை ஃபார்முலா-1 ரேஸில் தொடர்கிறது.

டெஸ்ட் ரேஸரின் வேகம் மிரட்டலாக இருக்க அடுத்த ஆண்டே ஃபார்முலா-1 ரேஸர் ஆனார் கிமி ராய்க்கோனன். 2001-ம் ஆண்டின் பரபரப்பு நாயகன் ராய்க்கோனன்தான். ஃபார்முலா-1 ரேஸூக்கு புதுமுகம்தான். ஆனால் ஜாம்பவான் மைக்கில் ஷூமேக்கரை யேத் துரத்து துரத்தென துரத்தினார் கிமி. இவரின் வேகம் பிரமிக்கவைக்க அடுத்த ஆண்டே ஃபெராரிக்கு சவால் விடக்கூடிய அணியான மெக்லாரன் கிமி ராய்க்கோனனை தத்தெடுத்துக்கொண்டது.

ராய்க்கோனனின் ரேஸிங் ஸ்டைலே வித்தியாசமாக இருக்கும். பொதுவாக ரேஸ் தொடங்குவதற்கு முன்னர் ரேஸர்கள் காரின் பர்ஃபாமென்ஸைப் பற்றி ட்யூனர்களுடன் பேசிக்கொண்டும், வியூகங்கள் குறித்து அலசிக்கொண்டும் பரபரப்பாக இருப்பார்கள். ஆனால் கிமியிடம் எந்த பரபரப்பும், படபடப்பும் இருக்காது. ரேஸ் தொடங்குவதற்கு முன் கிமி ராய்க்கோனன் ஐஸ் க்ரீம் சாப்பிடுவார், சின்ன தூக்கம் போடுவார். கேஷுவலாக வந்து அலான்சோவையும், ஷூமேக்கரையும் துரத்துவார், போடியம் ஏறுவார். டாப் 10-ல் ரேஸை முடிப்பார். ஆமாம்... பல காலமாகவே இவன் இப்படித்தான்!

ஐஸ்மேன்!

2005-ம் ஆண்டு ஜப்பான் ரேஸ் கிமி ராய்க்கோனனுக்கு ஐஸ்மேன் என்ற பட்டத்தை வாங்கி கொடுத்தது. தகுதிச்சுற்றின்போது மழையால் வேகம் கிடைக்காமல் பின்தங்கியதால், ரேஸில் 17-வது இடத்தில் ஆரம்பித்தார் ராயக்கோனன். மெக்லாரன் அப்போதுதான் புதிய MP4-19B காரை களமிறக்கியிருந்தது. பழக்கம் இல்லாத புது காரில் ரேஸ் ஆரம்பித்தது. முதலில் எந்த ரிஸ்க்கும் எடுக்காமல் நிதானமாக ஓட்டிவந்த கிமி, லேப்புகள் கடக்க கடக்க ஒவ்வொருவருராக முந்த ஆரம்பித்தார். மைக்கேல் ஷூமேக்கர், டேவிட் கோல்ட்ஹார்ட், ஜென்சன் பட்டன், மார்க் வெப்பர், ஃபெர்னான்டோ அலான்சோ, ஜியான்கார்லோ ஃபிஸிகெல்லா என ரேஸின் சூப்பர் ஸ்பெஷலிஸ்ட்டுகள் அத்தனைப் பேரையும் முந்தி முதலிடம் பிடித்தார் கிமி ராய்க்கோனன். அந்த ஆண்டு 112 புள்ளிகளுடன் டிரைவர் சாம்பியன்ஷிப்பில் இரண்டாம் இடம். அதுமட்டுமல்ல, ஃபார்முலா 1-ன் உச்சபட்ச விருதான ‘டிரைவர் ஆஃப் தி இயர்’ விருதும் இவரைத் தேடிவந்தது.

ஃபெராரி அசத்தல்!

2007-ம் ஆண்டு கிமியை ஃபெராரி அழைக்கிறது. மெக்லாரனில் இருந்து ஃபெராரிக்கு ஆர்வத்தோடு ஓடுகிறார். ஃபெராரி காரில் ஏறி ஓட்ட ஆரம்பித்த முதல் ரேஸிலேயே முதலிடம். ஆனால் ஃபெராரிக்கு செம சவால் கொடுத்தது மெக்லாரன் மெர்சிடிஸ். அலான்சோ, ஹாமில்ட்டன் என இரண்டு மெக்லாரன் ரேஸர்களும் போட்டிப்போட்டுக்கொண்டு ஓட்டினார்கள். மெக்லாரனா, ஃபெராரியா... வெல்லப்போவது யார் எனப் பெரிய யுத்தமே நடந்தது. மெக்லாரன் ரேஸர்களைவிடப் புள்ளிகள் பட்டியலில் பின்னால் இருந்தவர் அந்த ஆண்டு கடைசியாக நடந்த சீனா, பிரேசில் ரேஸ்களில் வெற்றிபெற்று வெறும் 1 புள்ளி வித்தியாசத்தில் முதலிடம் பிடித்து சாம்பியன்ஷிப்பை வெல்வார். ராய்க்கோனனுக்கு உலகம் முழுக்க ரசிகர்கள் குவிய ஆரம்பித்தது அப்போதுதான்.

கூல் ரேஸர்!

கூலான டிரைவர் என்றால் உண்மையிலேயே அது கிமி ராய்க்கோனன்தான். எந்த அளவுக்கு கூல் என்றால் கார் தீப்பிடித்து எரிந்துகொண்டி ருக்கும்போதும் தொடர்ந்து ரேஸ் ஓட்டி முடிக்கும் அளவுக்கு கூல். அந்த சம்பவம் 2009-ம் ஆண்டு பிரேசில் சர்க்யூட்டில் நடந்தது. பிட் ஸ்டாப்பில் இருந்து கிளம்பும் போது மெக்லாரனின் கோல்வகெய்ன் காரில் மாட்டியிருந்த எரிபொருள் பைப்பை நீக்கவில்லை. கார் கிளம்பியதும் எரிபொருள் வெளியேறி அது ராய்க்கோனனின் காரை குளிப்பாட்ட நொடிப்பொழுதில் ஃபெராரி தீப்பற்றி எரியும். ஆனால், எந்த பதற்றமும் இல்லாமல் தீயை மறந்துவிட்டு ரேஸை தொடர்ந்து ஓட்டி அன்று 6-ம் இடத்தில் ரேஸை முடித்திருப்பார் கிமி.

ரேஸ் டு ராலி!

2009-ம் ஆண்டு ஃபார்முலா-1 ரேஸில் இருந்து விலகி வேர்ல்டு ராலி சாம்பியன்ஷிப்புக்குப் போனார் கிமி. ஆனால் வெற்றிக்கு பதிலாக மோசமான விபத்துகள் மட்டுமே கிடைத்து. 2012-ம் ஆண்டு மீண்டும் ஃபார்முலா-1 ரேஸூக்குள் நுழைந்தவரை எடுத்துக்கொண்டது லோட்டஸ் அணி.

2012 அபுதாபி ரேஸ் ஃபார்முலா 1 வரலாற்றில் படபடப்பான ரேஸ்களில் ஒன்று. 4-ம் இடத்தில் இருந்து ரேஸை ஆரம்பிப்பார் ராய்க்கோனன். ரேஸ் ஆரம்பித்ததுமே வரிசையாகப் பல விபத்துகள் அரங்கேறும். அத்தனை களேபரங்களுக்கு இடையிலும் ராய்க்கோனன் முன்னிலையில் இருப்பார். பின்னால் அலோன்சோவிடமிருந்து பயங்கர ப்ரெஷர் வரும். அலான்சோவை சமாளிக்க லோட்டஸ் இன்ஜினீயர் மைக்கில் இன்ஸ்ட்ரக்ஷன் கொடுக்க ஆரம்பிக்க “Leave me alone, I know what I am doing” என்று ராய்க்கோனன் பதற்றமே இல்லாமல் சொல்வார். கடைசிவரை செம கூலாக ரேஸ் ஓட்டி, அலான்சோவுக்கு கொஞ்சமும் இடம்கொடுக்காமல் வெற்றிபெறுவார் கிமி ராய்க்கோனன். இன்றுவரை அபுதாபியின் பெஸ்ட் ரேஸ் இதுதான்.

உலகின் வேகமான ரேஸர்!

கடந்த செப்டம்பர் 1-ம் தேதி வரை யுவன் பாப்லோ மோன்டோயாவை விட வேகமான கார் ரேஸர் யாருமே இல்லை. இத்தாலியின் மான்ஸோ ரேஸ் ட்ராக்கில் மணிக்கு 262.24 கிலோ மீட்டர் வேகத்தில் ரேஸ் ஓட்டியதுதான் சாதனை. ஆனால் அந்த சாதனையை இப்போது முறியடித்துவிட்டார் கிமி ராய்க்கோனன். தற்போது இவரின் 263.58 கிலோ மீட்டர் வேகம்தான் அதிகபட்ச வேகம்.

இந்த ஆண்டோடு ஃபெராரியில் கிமியின் ரேஸ் முடியலாம். ஆனால் கிமி ராய்க்கோனன் இன்னும் முடிந்துவிடவில்லை. சாதனைகள் தொடரும்!

- ரஞ்சித் ரூஸோ