உங்களுடைய போட்டியாளர் யார்... இந்தக் கேள்வியை உலகின் எந்த மாரத்தான் ஓட்டக்காரரையும் நிறுத்தி வைத்துக்கேளுங் கள். எல்லோருமே சொல்லிவைத்தது போல ''நானேதான் என்னுடைய போட்டியாளர்'' என்பார்கள். ஒவ்வொருமுறையும் ஒரு மாரத்தான் வீரன் தன்னைத்தானே தோற்கடிக்கிறான். ஒவ்வொரு முறை ஓடும்போதும் தன்னையே முந்துகிறான்.

`எலியூத் கிப்சோகே' மாதிரியான மாரத்தான் வரலாற்றின் மகத்தான சாதனையாளனுக்கும் கூட அதே விதிதான். எலியூத் எப்போதும் தன்னோடுதான் போட்டி போடுகிறார். தன்னுடைய சாதனைகளையேதான் முறியடிக்கிறார். ஆனால் அவரை பின்தொடர்பவர் களுக்குத்தான் அனேகக்கவலைகள்.

எலியூத் செய்யாத சாதனைகளே கிடையாது. ஆனால் அவர் செய்திடாத ஒரு சாதனை அவருக்காக காத்திருந்தது. அவரால் அது முடியாமல் போகுமோ என்று நினைக்கவைத்த சாதனை. அவரிடம் திரும்பத்திரும்ப அதுகுறித்து ஒவ்வொருவரும் கேட்டபோதெல்லாம் அவர் புன்னகையை மட்டுமே பதிலாகத்தந்து கவலையின்றி ஓடிக்கொண்டிருந்தார்.

2013-ல் கென்யாவின் டெனிஸ் கிமாட்டோ மாரத்தானில் செய்த உலக சாதனையை (2:02:57 ) அவரால் முறியடிக்கவே முடியவில்லை. ஐந்தாண்டுகளாக கிப்சோகே ஓடத்தொடங்கும் போதெல்லாம் இந்த முறை நிச்சயம் உலக சாதனையை உடைப்பார் என்றுதான் எல்லோருமே எதிர்பார்த்துக் காத்திருப்பார்கள். ஆனால் அது நடக்கவேயில்லை. ஏதாவது ஒரு காரணம் இருக்கும். தட்பவெப்ப நிலையில் தொடங்கி பந்தயப்பாதை வரை... எலியூத் அதைப்பற்றியெல்லாம் எப்போதும் அலட்டிக் கொள்ளவில்லை. அவர் ஓடிக்கொண்டே யிருந்தார். வென்றுகொண்டேயிருந்தார்.

கடந்த ஐந்தாண்டுகளில் கிப்சாகே கலந்துகொண்ட 10 மாரத்தான்களில் ஒன்பதில் வென்றிருக்கிறார். ஓர் ஒலிம்பிக் தங்கமும் அதில் இருக்கிறது. நைக் நிறுவனம் நடத்திய ஒரு காட்சி ஓட்டத்தில் மாரத்தான் பந்தய தூரத்தை 2:00:22 என்கிற நேரத்தில் முடித்துக் காட்டினார். ஆனால், அது உலகசாதனையில் வராது. ஆனால் அதற்கே கிப்சோகேயை உலகம் கொண்டாடித் தீர்த்தது. அந்த கொண்டாட்டங்களில் மூழ்கிவிட வில்லை கிப்சோகே. அவர் ஓடிக்கொண்டேயிருந்தார்.

இந்த ஆண்டு லண்டனில் நடந்த மாரத்தானிலேயே உலக சாதனையை நிகழ்த்துவார் என உலகமே எதிர்பார்த்திருக்க... சென்னையின் மே மாதம் போல திடீரென்று லண்டனில் அடித்த வெயிலில் சாதனை தவறியது. இதோ இப்போது ஒருவழியாக ஐந்தாண்டுகால போராட்டத்திற்கு பிறகு உலகசாதனை படைத்துவிட்டார் எலியூத். பெர்லின் மாரத்தான் போட்டியில் 2:01:39 என்கிற நேரத்தில் பந்தய தூரத்தை கடந்திருக்கிறார். இது முந்தைய சாதனையை விட 75 விநாடிகள் குறைவு. 100 மீட்டர் ஓட்டத்தை 9:58 ல் உசேன் போல்ட் ஓடியதற்கு இணையான சாதனை இது!

மாரத்தான் ஓட்டக்காரர்களுக்கு பெர்லின் ஒரு சொர்க்க பூமி. நீண்ட தூரம் சோர்வின்றி ஓடுவதற்கு ஏற்ற அபாரமான வானிலையும் ஓடுவதற்கு ஏற்ற சமதளமான பாதைகளும் அதிகமான வளைவுகளும் அற்ற இடம். அதனாலேயே இங்கு தொடர்ந்து பலரும் உலக சாதனைகள் படைத்திருக்கிறார்கள். எத்தியோப்பியாவின் ஹெய்ல் ஜிப்ரேஸ்லேஸி (Haile Gebrselassie) 2008-ல் செய்த உலக சாதனையை, கடந்த பத்தாண்டுகளில் பெர்லினில்தான் 7 முறை உடைத்திருக்கிறார்கள். கடைசியாக கென்யாவின் டெனிஸ் கிமோட்டோ 2014-ல் சாதனை செய்தது கூட பெர்லினில்தான். இப்போது டெனிஸின் சாதனையை நான்காண்டுகளுக்கு பிறகு அதே பெர்லினில்தான் முறியடித்திருக்கிறார் கிப்சோகே.

பெர்லினில் இந்தச் சாதனையை செய்வதற்கு முன்னால் ஒரு பேட்டியில் இப்படி சொல்லியிருந்தார் கிப்சோகே. ``ஒழுக்கமுள்ள ஒருவர்தான் சுதந்திரமானவர். நீங்கள் ஒழுக்கமற்றவராக இருந்தால் உங்களுடைய உணர்ச்சிகளுக்கு அடிமையாகத்தான் இருக்க முடியும்.''

ஒழுக்கம்தான் கிப்சோகேவின் அடையாளம். ஒழுக்கம்தான் அவரை தொடர்ந்து வெற்றியாளராக மாற்றி இருக்கிறது. தன்னுடைய பயிற்சியை வாழ்வை அதை சுற்றியே உருவாக்கிக்கொண்டிருக்கிறார் கிப்சோகே.

எலியூத்துக்கு இப்போது வயது 33. இன்னும் இரண்டு ஆண்டுகளில் அவர் இரண்டு மணிநேரத்திற்குள் ஒரு மாரத்தான் ஓட்டத்தை ஓடிமுடித்து சாதனை செய்யக்கூடும்... நிச்சயம் சாதிப்பார். அதைப்பற்றி நாம்தான் சிந்தித்துக்கொண்டிருக்கிறோம். எலியூத் தன்பாட்டுக்கு ஓடிக்கொண்டிருக்கிறார். தன்னையே முந்திக்கொண்டிருக்கிறார்.

- அதிஷா