ஐபிஎல் தொடருக்குப் பிறகு இந்தியாவின் பிரபலமான விளையாட்டுத் தொடராக உருவெடுத்திருக்கும் ப்ரோ கபடி லீக், இந்த முறை 3 மாதங்களுக்கு நடக்க இருக்கிறது. அக்டோபர் 5-ம் தேதி சென்னை யில் தொடங்கும் இந்தத் தொடரின் இறுதிப் போட்டி ஜனவரி 5-ம் தேதி மும்பையில் நடக்கிறது.

எந்தவொரு ஆரவாரமும் இல்லாமல் தொடங்கப்பட்ட ப்ரோ கபடி தொடர், ஒரே வருடத்தில் இந்தியர்களின் ஃபேவரிட் விளையாட்டுப் போட்டியாக மாறியிருக்கிறது. ஹரியானா, உத்திர பிரதேச மாநிலங்களின் குக்கிராமத்திலிருந்த இளைஞர்களுக்கு நம்பிக்கை பாய்ச்சியிருக்கிறது. இந்தியாவில் மட்டுமல்லாமல், ஈரான், தென் கொரியா என ஆசியா முழுதுமே தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கிக்கொண்ட தொடர் இது. சச்சின், கோலிக்கு மட்டுமே பதாகை பிடித்தவர்கள் இப்போது ‘அனூப்’, ‘பர்தீப்’ என்று கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள்.

அதகள ஏலம்!

வழக்கமாக போட்டிகள் நடக்க ஆரம்பித்ததும்தான் கபடி ‘ஃபீவர்’ தொடங்கும். ஆனால், இந்த முறை 5 மாதங்களுக்கு முன்பாகவே சூடுபிடித்துவிட்டது. மே மாதம் நடந்த ஏலம் பல சாதனைகளை உடைத் தெறிந்தது. கடந்த ஆண்டு நடைபெற்ற ஏலத்தில், நிதின் தோமர் அதிகபட்சமாக 93 லட்சம் ரூபாய்க்கு ஏலம் போனார். ஆனால், இந்த ஆண்டு முதல் நாள் வெளிநாட்டு வீரர்கள் ஏலம் போனபோதே, ஈரான் கேப்டன் ஃபசலை, யுமும்பா அணி 1 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுத்து சாதனைப் படைத்தது.

இந்திய வீரர்களுக்கான ஏலம் தொடங்கிய போது 1 கோடி ரூபாய் சாதனைகள் நொறுங்கிக் கொண்டே இருந்தது. தீபக் ஹூடாவை 1.15 கோடி ரூபாய்க்கு ஜெய்ப்பூர் அணி வாங்கி புதிய ப்ரோ கபடி சாதனை படைக்க, நித்தின் தோமரை அதே தொகைக்கு வாங்கி சமன் செய்தது புனேரி பால்டன்ஸ். ராகுல் சௌத்ரியை 1.29 கோடி ரூபாய்க்கு தெலுங்கு டைட்டன் அணியே மீண்டும் ஏலத்தில் எடுத்து மெர்சலாக்கியது. அவர்தான் காஸ்ட்லி வீரர் என்று நினைத்தால், மோனு கோயத்தை 1.51 கோடி ரூபாய்க்கு ஹரியானா ஸ்டீலர்ஸ் அணி ஏலத்தில் எடுத்து கதிகலங்கவைத்தது. நல்லவேளை பர்தீப் நர்வாலை பாட்னா அணி தக்கவைத்துக் கொண்டது. ஒருவேளை அவர் ஏலம் போயிருந்தால்?!!

போட்டிகள் எப்படி?

13 நகரங்களில் நடத்தப்படும் இந்தத் தொடரில், பங்கேற்கும் 12 அணிகளும் 2 பிரிவு களாக (ஜோன்களாக) பிரிக்கப் பட்டுள்ளன. ஒவ்வோர் அணியும் தங்கள் பிரிவில் இருக்கும் மற்றோர் அணியுடன் 3 முறை மோத வேண்டும். அதாவது ஓர் அணிக்கு 15 இன்ட்ரா ஸோன் போட்டிகள். இன்னொரு பிரிவில் இருக்கும் 6 அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். அந்த 6 அணிகளில் ஏதேனும் ஓர் அணியுடன் மட்டும் இன்னொரு போட்டியில் (வைல்ட் கார்ட் போட்டி) மோத வேண்டும். ஆக, 7 இன்டர் ஸோன் போட்டிகள். ஓர் அணி மொத்தம் 22 போட்டிகளில் விளையாடும். ஒவ்வொரு பிரிவிலும் முதல் 3 இடங்களைப் பிடிக்கும் அணிகள் பிளே-ஆஃப் சுற்றுக்கு முன்னேறும். 3 எலிமினேட்டர் கள், 2 குவாலிஃபையர் போட்டிகளைத் தொடர்ந்து இறுதிப் போட்டி நடைபெறும்.

புது தலைவாஸ்!

கடந்த சீசனில் இளமை ததும்பும் அணியாக, முதன்முதலாக ப்ரோ கபடி லீகில் களமிறங்கியது சச்சின் டெண்டுல் கரின் அணியான தமிழ் தலைவாஸ் அணி. கேப்டன் அஜய் தாக்கூர் தவிர மற்ற வீரர்கள் பெரிய அனுபவம் இல்லாதவர்கள் என்பதால் ரொம்பவே திணறியது. விளைவு கடைசி இடம். அதனால் இந்த முறை முற்றிலும் புதிய அணியாகக் களமிறக்க முடிவு செய்துவிட்டது அணி நிர்வாகம். பயிற்சியாளர் கே.பாஸ்கரனுக்குப் பதில் எடச்சேரி பாஸ்கரன் நியமிக்கப் பட்டுள்ளார். அதேபோல் ஏலத்தின் போதும் பயங்கர பிளானிங்கோடு செயல்பட்டது அணி நிர்வாகம். கடந்த ஆண்டைப் போல் முழுவதும் இளைஞர்கள் என்று போகாமல், மற்ற அணிகளைப்போல் கோடிகளையும் கொட்டாமல் பக்குவமாக டீம் எடுத்தது. ஆனால் கொஞ்சம் சென்னை சூப்பர் கிங்ஸ் போலவே சூப்பர் சீனியர்களையும் எடுத்துவிட்டனர். மஞ்சித் சில்லர், ஜஸ்விர் சிங் போன்றவர் களின் அனுபவம் அணிக்கு இந்தமுறை பெரிதாகக் கைகொடுக்கும் என்று நம்புகிறார்கள். அவர்களோடு சுகேஷ் ஹெக்டே, அமித் ஹூடா, அருண் போன்றவர்கள் இணைய, தமிழ் தலைவாஸ் கடந்த ஆண்டைவிட இந்த முறை பலமான அணியாகவே காட்சி தருகிறது.

ஆட்டம் ஆரம்பிக்கட்டும்..!

- மு.பிரதீப் கிருஷ்ணா