ஒரு நாள் உசேன் போல்ட் இப்படிச் சொன்னார்...

“தங்களுடைய இருக்கைகளில் உட்கார்ந்து டிவியைப் பார்த்துக் கொண்டிருக்கும் மக்கள் ஒரு நிமிடம் அதிர்ச்சியடைய வேண்டும். டிவியை வெறித்து பார்த்தபடி ‘இப்போது இங்கு என்ன நடந்தது?’ என்று அவர்கள் ஆச்சர்யப்பட வேண்டும். அவர்களுக்கு அந்த ஆச்சர்யத்தைக் கொடுக்கத்தான் நான் மிகக் கடுமையாக உழைத்துக் கொண்டிருக்கிறேன். என் உழைப்பில் அறிவியலையும் இணைத்திருக்கிறேன். அது சொல்லும் மாற்றங்களையும் செய்து வருகிறேன். இனி வரும் காலங்களில் இன்னும் நிறைய ஆச்சர்யங்களை நிகழ்த்துவேன்...”

இதைச் சொன்ன போது போல்ட் லண்டன் ஒலிம்பிக்கில் தங்கம் வென்று சில நாள்கள் ஆகியிருந்தன. இந்த இடத்தில் போல்ட் சொன்ன ‘அறிவியல்’ மிகவும் முக்கியமான விஷயம்.

போல்ட் வித்தியாசமானவர். உச்சத்தில் தொடக்க வேகத்தை எடுக்கவும் (Top Acceleration), எடுக்கும் வேகத்தை அதன் உச்சத்திலேயே தொடரவும் (Maintain Top Speed) திறன் கொண்டவர். மற்ற வீரர்களுக்கு 100மீ கடக்க சராசரியாக 44 அடிகள் தேவைப்படும். ஆனால், போல்ட்டின் உயரம் காரணமாக சராசரியாக 41 அடிகளில் கடந்துவிடுவார். உயரம் மட்டுமல்ல போல்ட்டின் உடல் எடையும் அதிகம். அதனால், அவர் பூமி மீது அதிகப்படியான அழுத்தத்தைத் தர வேண்டும். ஒவ்வொரு அடிக்கும் அவர் அதிக தூரத்தைக் கடக்கும் அதே சமயம், அதிகப்படியான ஆற்றலை பூமி மீது வெளிப்படுத்துகிறார். பூமி அந்த ஆற்றலை உள்வாங்கி, போல்ட்டின் கால்களுக்கு திரும்பக் கொடுக்கிறது. அது அவரை முன்னால் உந்தித் தள்ளுகிறது.

அதிக ஆற்றலை வெளிப்படுத்த பெரிய, உறுதியான தசைகள் (Muscles) வேண்டும். அதனால், போல்ட் ஜிம் வொர்க் அவுட் (Gym Workouts) செய்து தன் தசைகளை வலுப்படுத்த வேண்டும். அவர் ஓட்டத்தில் இரண்டு நிலைகள் இருக்கின்றன. ஸ்டேன்ஸ் ஃபேஸ் (Stance Phase) - அது அவரின் ஒரு கால் நிலத்திலும், ஒரு கால் காற்றிலும் இருக்கும் நிலை. மற்றொன்று ஃப்ளைட் ஃபேஸ் (Flight Phase) - அது அவரின் இரண்டு கால்களும் காற்றில் இருக்கும் நிலை. அந்த நிலையில் அவரின் ஆற்றல் அதிகமாக வெளிப்படுகிறது....

இன்னும் நிறைய இருக்கிறது... போல்ட்டின் வெற்றிக்குப் பின்னால் அத்தனை அறிவியல் ஆய்வுகள் இருக்கின்றன. மில்கா சிங் ஓடிய காலம் இல்லை ஹிமாதாஸுக்கு... கால்களின் ஓட்டம் மாறவில்லை. ஆனால், காலத்தின் ஓட்டம் மாறியிருக்கிறது.

வெயில் கொளுத்திக் கொண்டிருந்த ஒரு மதிய நேரம். சென்னைப் போரூர் ரமச்சந்திராவுக்குள் நுழைந்தோம். அங்கிருந்த நூற்றுக்கணக்கான மரங்களின் நிழல் சற்றே ஆசுவாசத்தைக் கொடுத்தது. “சென்டர் ஃபார் ஸ்போர்ட்ஸ் சயின்ஸ்” (Centre For Sports Science) பெயர் பலகைகள் நம்மை அதிக சிரமமில்லாமல் வழிகாட்டி இடத்திற்குக் கொண்டு சென்றது. ட்ராக் பேன்ட், டீ ஷர்ட்களில் நிறைய பேர் அங்குமிங்கும் நடந்துக் கொண்டிருந்தார்கள். சிலர் கையில் கிட் பேக்குகளோடு) இருந்தார்கள். அந்த வராண்டாவில் பல கிரிக்கெட் வீரர்கள் படங்கள் அழகழகாக வரையப்பட்டு தொங்கவிடப்பட்டிருந்தன.

விளையாட்டுத் தொடர்பான அறிவியல் படிப்புகள், ஆராய்ச்சிகள், பயிற்சிகள், விளையாட்டு காயங்களுக்கான பிரத்யேக சிகிச்சை, விளையாட்டு மேம்பாட்டிற்கான அதிநவீன தொழில்நுட்பங்கள், உலகில் மொத்தமே 4 இடங்களில் மட்டுமே இருக்கும் பயோ மெக்கானிக்கல் லேப், ஒவ்வொரு விளையாட்டிற்குமான பிரத்யேக பயிற்சி மையங்கள், உலகின் மிகச் சிறந்த பயிற்சியாளர்கள், பயிற்றுவிப்பாளர்கள், மருத்துவர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள் என மொத்த இந்திய விளையாட்டுத் துறையையும் அடுத்தக் கட்டத்திற்கு நகர்த்திச் செல்லும் திறன்களோடு கம்பீரமாய் எழுந்து நிற்கிறது போரூர் ராமசந்திராவின் சென்டர் ஃபார் ஸ்போர்ட்ஸ் சயின்ஸ்.

அறிமுகத்திற்கு அதிக நேரம் எடுத்துக் கொள்ளவில்லை. சஞ்சய் மிக எளிமையாக பேசத் தொடங்கினார்...

“நம் உடலின் முழு ஆற்றலை வெளிப்படுத்தச் செய்வதுதான் ஸ்போர்ட்ஸ் சயின்ஸின் அடிப்படை. அதைத்தான் நாங்கள் இங்கு செய்கிறோம். முன்பெல்லாம், ஒரு டெக்னிக்கை வாய் மொழியாகக் கடத்துவார்கள். அது நூற்றில் பத்து பேருக்குத் தான் கடத்தப்படும். அதே சமயம், அந்த டெக்னிக்கை அறிவியலாக கொண்டுச் சென்றால் நூற்றில் தொண்ணூறு பேருக்கு அது கடத்தப்படும். வாங்க... உங்களுக்கு இந்த இடத்தை சுற்றிக் காட்டுகிறேன்” என்று சொன்னபடி நம்மை அழைத்துச் சென்றார் சென்டர் ஃபார் ஸ்போர்ட்ஸ் சயின்ஸின் கிரிக்கெட் பிரிவு தலைவர் சஞ்சய்.

தரைத் தளத்திலிருந்த இருந்த பயோ மெக்கானிக் லேப்பிற்குத் தான் முதலில் சென்றோம். மிக உயரமான சீலிங். நீளமான கிரிக்கெட் நெட்ஸ் இருந்தது. சுற்றிலும் பெரிய, பெரிய ஸ்டாண்ட்களில் கேமராக்கள் இருந்தன. “பயோ மெக்கானிக்கல் டெஸ்ட் என்பது ஒரு வீரரின் அத்தனை அசைவுகளையும் மிகத் துல்லியமாக கணக்கிடும் ஒரு தொழில்நுட்பம். உங்களுக்கு ஞாபகம் இருக்கா முத்தையா முரளிதரனின் ‘தூஸ்ரா’ குறித்து சில சர்ச்சைகள் எழுந்தபோது, அவர் உடல் முழுக்க சில ஒயர்களைப் பொறுத்தி அவருக்கு ஒரு டெஸ்ட் எடுத்தார்கள். கிட்டத்தட்ட அதேதான் இந்த பயோ மெக்கானிக் டெஸ்ட்டும். பெரும்பாலும், கிரிக்கெட்டில் வீரர்களுக்கு இப்படியான சர்ச்சைகள் வரும். இதை சஸ்பெக்ட் ஆக்ஷன் என்று சொல்லுவார்கள். அதைப் பரிசோதிக்க இது பெரியளவில் உதவும்.

சஸ்பெக்ட் ஆக்ஷன்களைத் தாண்டி ஒரு வீரரின் அசைவுகளைத் துல்லியமாகக் கணக்கிட்டு அதில் பிரச்னைகள் இருக்கும்பட்சத்தில் அதற்குத் தேவையான மாற்றங்களையும் அறிவுறுத்துவோம். கபடியைப் பொறுத்தவரையில் ‘தமிழ் தலைவாஸ்’ அணி இங்கு தான் அதன் பயிற்சிகளை மேற்கொள்கிறது. அடுத்தது இன்னுமொரு முக்கியமான இடத்திற்கு அழைத்துச் செல்கிறேன் வாருங்கள்...” என்றபடி லிஃப்ட்டில் 2 என்ற எண்ணை அழுத்தினார்.

ஹை பர்ஃபாமென்ஸ் சென்டர்

கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்... ஒரு உசைன் போல்ட்டை ஜெயிக்க அவரோடு ஓடும் வீரர்களுக்குத் தேவை சில மைக்ரோ செகண்ட் முன்னேற்றம்தான். அந்த சில மைக்ரோ செகண்டுகளுக்காகத்தான் அத்தனைப் போராட்டங்களும். அந்த மாதிரியான வீரர்களுக்கான இடம்தான் இது.

பயோ மெக்கானிக்ஸில் அவர்களின் உடல் அசைவுகளை அலசிவிடுவோம். அதன் மூலம் அவர்களின் உடல் அசைவில் என்ன மாற்றங்களை, முன்னேற்றங்களை செய்ய வேண்டும் என்று முடிவு செய்து அதற்கான பயிற்சிகள் இங்கு வழங்கப்படும். ஒவ்வொரு வீரருக்கும் “Muscle Memory” மற்றும் “Cell Memory” என்று இரண்டு விஷயங்கள் இருக்கும். இயற்கையாக நம் தசைகளில் இருக்கும் மெமரி மிகவும் முக்கியமானது. அதை மாற்றுவது மிகவும் சிரமம். ஆனால், அதை மாற்றினால்தான் மிகப் பெரிய மாற்றத்தை பர்ஃபார்மன்ஸில் கொண்டு வர முடியும். குறிப்பாக, 19 வயதிற்குட்பட்ட வர்களுக்கு இது மிகவும் அவசியம், எளிதும் கூட. இங்கு அவ்வளவு எளிதாக யாரும் பயிற்சி எடுத்துவிட முடியாது. இது எலீட் லெவல் வீரர்களுக்கானது. காரணம், பயிற்சி கள் அவ்வளவு கடினமானதாக இருக்கும்.

இன்னும் பல மணி நேரம் பல இடங்களுக்குத் தொடர்ந்து நடந்துக் கொண்டேயிருந்தோம். உள்ளே ஸ்போர்ட்ஸ் மெடிசின் மற்றும் ஸ்போர்ட்ஸ் சைக்காலஜி பிரிவுகள் இருக்கின்றன. விளையாட்டுக் காயங்களுக்கான அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ள தனி ஆந்த்ரோஸ்கோபி பிரிவு இருக்கிறது. அதுமட்டுமில்லாமல் ஸ்போர்ட்ஸ் சயின்ஸ் குறித்த 4 வருட பட்டப்படிப்பும் இங்கிருக்கிறது. பல சர்வதேச பயிற்சியாளர்கள் இருக்கிறார்கள். போட்டி முடித்து வீரர்கள் ஓய்வெடுக்க “Rehabilitation Camps”, போட்டிக்கு முன்னர் வீரர்கள் தயாராக “Preparatory Camps” எனப் பல வசதிகளும் இருக்கின்றன. மாநில அளவில் ஜெயிக்க திறன் உள்ள ஒரு வீரரை, சர்வதேச போட்டிகளுக்குத் தயார்படுத்தும் அறிவியலும், ஆற்றலும் இங்கு கொட்டிக் கிடக்கிறது. 2024 ஒலிம்பிக்கில் இந்தியா பல போட்டிகளிலும், பல பதக்கங்களை வெல்ல CSS முக்கிய பங்கு வகிக்கும். அதை நோக்கியது தான் எங்கள் பயணம்” என்றார் சஞ்சய்.

``எல்லாம் சிறப்பாக இருக்கிறது. ஆனால், இந்த வசதிகளை பயன்படுத்த எளிய பின்னணியிலிருந்து வரும் வீரர்களுக்கு சாத்தியமா?’’

“ம்ம்ம்... கொஞ்சம் சிரமம்தான். இங்கிருக்கும் பொருள்கள் அனைத்துமே வெளிநாடுகளி லிருந்து இறக்குமதி செய்யப்பட்டவை. ஒவ்வொரு கருவியும் பல லட்சம், பல கோடிகள். ஒரு கருவியை ஒரு மணி நேரம் இயக்கவே பல ஆயிரங்கள் செலவாகும். ஆனால், இதையெல்லாம் கடந்து இதை எல்லோருக்குமான இடமாகக் கொண்டு போகும் சில முயற்சிகளை எடுத்துக்கொண்டு தான் இருக்கிறோம். குறிப்பாக, நான்கு வருடங்களுக்கு முன்பாகவே தடகள வீரர்களுக்காக SAI (Sports Authority of India) மற்றும் SDAT (Sports Development Authority of India) ஆகியோருடன் ஒப்பந்தம் போட்டோம். ஆனால், முதல் இரண்டு வருடங்கள் அவர்கள் ஒரு வீரரைக் கூட இங்கு பயிற்சிக்கு அனுப்பவில்லை. நிர்வாக ரீதியில் அவர்களுக்குள் பல சிக்கல்கள். இது போன்ற விஷயங்களை எல்லாம் கலைந்து, அரசாங்கமும் இன்னும் முயற்சிகளை மேற்கொண்டால்...நாங்களும் ஒத்துழைக்கத் தயாராகவே இருக்கிறோம். எல்லாம் சரியாக நடந்தால் 2024 ஒலிம்பிக்கில் இந்தியா மிக முக்கிய சக்தியாக மாறும்...” என்று பெரும் கனவோடு நமக்கு விடை கொடுத்தார் சஞ்சய்.

சர்வதேச தரத்திலான தொழில்நுட்பங் களும், பயிற்சியாளர்களும், கருவிகளும் இருக்கின்றன. சர்வதேச போட்டிகளில் வெல்லும் திறமையோடும், துடிப்போடும் பல வீரர்கள் இங்கிருக்கின்றனர். தேவை இவை இரண்டிற்குமான இணைப்புப் புள்ளி...

- இரா. கலைச் செல்வன்

“என்னால் என் கனவு ஸ்போர்ட்ஸ் காரை வாங்கமுடியவில்லை. அதனால், அதை நானே கட்டமைத்தேன்.” - ஃபெர்டினான்ட் பார்ஷே. (Ferdinand Porsche)