
மழலைகளை அதட்டி வளர்க்காமல் அன்புகாட்டி வளர்த்தலே நல்லது என்பதை ‘நமக்குள்ளே’ பகுதியில் ஆணித்தரமாகச் சொல்லிவிட்டீர்கள்!
- கவிதா சரவணன், ஸ்ரீரங்கம்;
ஜி. லட்சுமி வாசுதேவன், சென்னை-41;
இல.வள்ளிமயில், மதுரை-6;
ரேவதி சம்பத்குமார், ஈரோடு;
கலைச்செல்வி, தோட்டக்குறிச்சி
`தலைமுறைகளின் அருமை பெருமைகளைப் பதிவு செய்யுங்கள்’ - மஞ்சு ஜெயினின் உணர்வுகள், தலைமுறைகள் தாண்டியும் தொடர வேண்டியவையே!
- மயிலை கோபி, சென்னை 83;
உமாதேவி பலராமன், திருவண்ணாமலை
தீபா ராம் தொகுத்தளித்து வரும் `வார்த்தை வசீகரா',
இன்ட்ரஸ்டிங், இன்ஃபர்மேட்டிவ், எக்ஸலென்ட்!
- வி.மோனிஷா பிரியங்கா, திருச்சி-18;
சி. கார்த்திகேயன், சாத்தூர்
போராட்டம், தெளிவு, அறிவுசார்ந்த ஆய்வு எனப் பல தளங்களில் பயணப்பட்டு, கறைபடிந்த முந்தைய வரலாற்றுக்குப் புதிய வடிவம் கொடுத்த ரொமிலா தாப்பரின் உழைப்பு வணங்கத்தக்கது.
- ஆர்.கே.லிங்கேசன், மேலகிருஷ்ணன்புதூர்;
ராஜி குருசுவாமி சென்னை-88
தனிமைத் துயரில் மனம் வெதும்பிக்கொண்டிருக் கும் முதியோர்களுக்காக ஓர் இணையதளம் அமைத்து புதிய உலகத்துக்கு அழைத்துச் செல்லும் நிதி சாவ்லாவின் முயற்சி பாராட்டத்தக்கது.
- பகவதி பிரவின், சென்னை-91;
எஸ்.வி.எஸ்.மணியன், கோவை-12
இன்றைய அவசர உலகில் பலவிதமான உணவுகளைச் சாப்பிட்டு நோயால் அவதிப்படுகிறோம். முதியோர் மட்டுமல்லர்; முக்கியமாக இளைஞர்களும் பாதிக்கப்படும் நிலையில் 32 பக்க இணைப்பில், `இதயம் காக்கும் இதமான உணவுகள்’ அளித்த அவள் விகடனுக்கு இதயம் கனிந்த நன்றியும் பாராட்டுகளும்.
- எஸ்.உஷா சுதர்சன், திருச்செங்கோடு;
சுகந்தி நாராயணன், வியாசர் நகர்