Published:Updated:

‘நீங்க செஞ்சா நாங்களும் செய்யவேண்டியிருக்கும் மாஹி’ - மீண்டும் நிரூபித்த தோனி!

‘நீங்க செஞ்சா நாங்களும் செய்யவேண்டியிருக்கும் மாஹி’ - மீண்டும் நிரூபித்த தோனி!
‘நீங்க செஞ்சா நாங்களும் செய்யவேண்டியிருக்கும் மாஹி’ - மீண்டும் நிரூபித்த தோனி!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி தன் செயல் மூலம் மீண்டும் ரசிகர்களின் மனதைக் கவர்ந்துள்ளார். 

மகேந்திர சிங் தோனி மிகவும் சிறந்த பேட்ஸ் மேன், மின்னல் வேக விக்கெட் கீப்பர், கேப்டன் கூல் எனப் பலருக்கும் தெரியும் இது இல்லாமல் அவர் மிகவும் பணிவானவர், மரியாதையானவர், சிறந்த கணவர் மற்றும் தந்தை என்பதும் தெரியும் அதை அடிக்கடி பொது இடங்களில் நிரூபித்துக்கொண்டே இருப்பார். விளையாட்டைத் தாண்டி தன் ரசிகர்கள் மனதில் இவர் ஏன் நீங்கா இடம் பிடித்துள்ளார் என்பதை மீண்டும் ஒரு முறை நிரூபிக்கும் செயலை தற்போது செய்துள்ளார். 

கேப்டன் கூல் தோனி பொது இடத்தில் தன் மனைவிக்கு ஷூ லேஸ் கட்டிவிடும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. உலகம் முழுவதும் உள்ள ரசிகர்களால் போற்றப்படும் ஒருவர் யார் பார்த்தாலும் பரவாயில்லை என பொது இடத்தில் தன் மனைவிக்கு ஷூ சரிசெய்வது தோனி ரசிகர்களை மிகவும் கவர்ந்துள்ளது. இதை தோனியின் மனைவி சாக்‌ஷி தன் இன்ஸ்டகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதனுடன் நீங்கள்தான் ஷூவுக்கு பணம் செலுத்துகிறீர்கள். அதனால் நீங்களே அதைச் சரி செய்கிறீர்கள்” என்ற கேப்சனுடன் பதிவிட்டுள்ளார். 

தோனியின் இந்த செயல் அவரது ரசிகர்களைப் பெரிதும் கவர்ந்துள்ளது.  ‘அழகான ஜோடி’  ‘அவரிடமிருந்து கற்றுக்கொள்ள நிறையவுள்ளது’  ‘நீங்கள் இப்படி செய்யாதீர்கள் மாஹி பிறகு நாங்களும் செய்ய வேண்டிவரும்’  ‘ உங்களுக்குத் தலை வணங்குகிறேன் மாஹி’ எனப் பலர் பல்வேறு கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.