Published:Updated:

கடிதங்கள்: மனதுக்கு நெருக்கம்!

கடிதங்கள்: மனதுக்கு நெருக்கம்!
பிரீமியம் ஸ்டோரி
News
கடிதங்கள்: மனதுக்கு நெருக்கம்!

கடிதங்கள்: மனதுக்கு நெருக்கம்!

விஷால் தேர்தலுக்குக் காத்திருப்பதெல்லாம் சரி. ஓட்டு போட அவர் ரசிகர்களும் காத்திருக்க வேண்டுமே!

- ஷண்முகம், சேவாக்கவுண்டனூர்

கா
ந்தி 150 சிறப்புக் கட்டுரை அருமை. காந்தியைப் போல் ஒருவர் பல நூற்றாண்டுகளில் ஒரு முறைதான் பிறப்பார். அவரிடத்தில் குறைகள் உண்டென்றாலும் நம் எல்லோரைவிடவும் மிக மிக உயர்ந்தவர். எளிதில் எல்லோரிடமும் அளவு கடந்த அன்பும் நம்பிக்கையும் கொண்டு விடுபவர் - அது நம்மை அடிமைப் படுத்திய ஆங்கிலேயர் என்றாலும் கூட. அவர் கூறியவாறு ஒன்றிரண்டு கருத்துகளையாவது நாம் அனைவரும் பின்பற்ற முயல வேண்டும்.

- விஸ்வநாதன், vikatan.com

கடிதங்கள்: மனதுக்கு நெருக்கம்!

பொற்சுவையின் கூரிய அறிவுத் திறன் பின்னணியில் இருந்தும் பாரி எப்படி வஞ்சிக்கப்பட்டான் என்பதை அறிய இன்னும் ஏழு நாள்கள் நெஞ்சு படபடக்கக் காத்திருக்கிறேன். சரியான மொழி பெயர்ப்புத் திறமை உடையவர் களால் இந்த நவீனமானது மொழிபெயர்க்கப்பட்டால் ஆங்கில நவீனங்களுக்கு சமானமாகப் புகழ் பெறுவது திண்ணம்.

- லாவண்யா, vikatan.com

தே
வதேவன் கவிதை தாங்கிவந்த இந்தவார நான்காம் சுவர் நெகிழ்ச்சியாக இருந்தது.

- வி.ஆர்.நடராஜன், திருமுல்லைவாயில்


கே
ம் சேஞ்சர்ஸ் பெரிய மனிதர்களின் வெற்றிப்பாதையை எளிய வரிகளில் சொல்கிறது. நான் அன்றாடம் பயன்படுத்தும் அப்ளிகேஷன்களின் பின்னணியில் இவ்வளவு நடந்திருக்கிறதா என்ற மலைப்பும் ஏற்படுகிறது.

- சிவமைந்தன், சென்னை.  

யிர் பறிக்கும் சாதி ஒழியட்டும் கட்டுரை நல்ல அலசல். தென் மாநிலங்கள் ஓரளவு பரவாயில்லை. இவற்றைப் பொதுவில் பேசித் தீர்வுகாண முயல்கிறோம். வட மாநிலங்கள் இவ்விஷயத்தில் இன்னுமே பழைமையாகத்தான் இருக்கின்றனவோ என்று எண்ணுகிறேன்.

- கரு.மோகன்ராஜ், காரைக்குடி

ன்னஞ்சல் எழுதிய பெண் மிகவும் பாதிக்கப்பட்டிருப்பார் போல. நீங்கள் பார்த்த ஆண்களை வைத்து அனைவரையும் எடை போடுவது தவறு என்பதே எனது தாழ்மையான கருத்து.

-அருண்குமார், vikatan.com
 
கோ
வாவில் நடைபெற்ற தேசிய டேக்வாண்டோ போட்டியில் தங்கம் வென்ற தங்கங்களைக் குறித்த வாழ்க்கையின் நாயகர்கள் கட்டுரை மனதுக்கு நெருக்கமான மொழியில் எழுதப்பட்டிருந்தது.

-ஆர்.ஆர்.உமா, திசையன்விளை

ரசுப்பள்ளிகள் ஏன் குறைந்தன என்ற அலசல் கட்டுரை இப்போதைக்குத் தேவையான ஒன்று. இப்படியான உரையாடல்கள் எல்லாத் தளங்களிலும் நடைபெற வேண்டியது அவசியம்.

-பாரதி முருகன், மணலூர்ப்பேட்டை

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz