Published:Updated:

புன்னகைக்கும் பூக்கள்!

புன்னகைக்கும் பூக்கள்!
பிரீமியம் ஸ்டோரி
News
புன்னகைக்கும் பூக்கள்!

எக்ஸ்பர்ட்

கோயிலில் அல்லது மண்டபத்தில் திருமணம் செய்ய முடிவுசெய்து, வண்ணக்கோலங்களும் தோரணங்களும் மாலைகளும் மட்டுமே நிறைந்து காணப்படும் விழாக்கள் குறைந்துகொண்டு வருகின்றன. அழைப்பிதழ் தொடங்கி அட்சதை வரை அழகான திட்டங்களோடு, புடவை தொடங்கி ரிட்டர்ன் கிஃப்ட் வரை திட்டம் தீட்டி தீர்மானிக்கத் தொடங்கிவிட்டார்கள். நகரங்களிலோ மணப்பெண்ணுக்கும் மணமகனுக்கும் ஒரு `fairy tale’ போன்ற கல்யாணக் கனவு இருக்கிறது. இப்படி, ஒவ்வொருவரின் திருமணக் கனவையும் பொருளாதார நிலைக்கு ஏற்ப நனவாக்குவதில் வெடிங் டெக்கரேட்டர்ஸ்களின் பங்கு அதிகம்.

புன்னகைக்கும் பூக்கள்!

சென்னையில் உள்ள ‘பூ’ டெகரேட்டர்ஸ்சின் உரிமையாளர் பாலாஜிமோகனிடம் பேசியதில்....

`` எல்லா தொழிலிலும் ஆரோக்கியமான போட்டி இருக்கும். குறிப்பா திருமணம் சார்ந்த தொழில்களில் போட்டி அதிகமா இருக்கு. அதை சமாளிக்க நான் செய்யுற வேலையில ஒரு தனித்துவத்தை பிரதிபலிக்கறதும், வேலையை சரியான நேரத்துல செய்யறதும்தான் என்னோட முதல் பாலிசியா கடைபிடிச்சிட்டு வரேன். திருமண நுழைவு வாயிலில் ஆரம்பிச்சு, மண்டபம், மேடை அலங்காரம் என அனைத்துக்கும் தனித்துவமான பூ அலங்காரத்தை செய்தால்தான் இந்த துறையில நிலைத்து நிற்க முடியும் மண்டபம். விதவிதமான பூக்கள், வித்யசமான அலங்கார யுக்தி போன்றவைதான் இப்போதைய டிரெண்டு.

சமீபத்தில் நடந்த ஒரு திருமண விழாவில், எங்களோட டீம், மேடை முழுக்க புது வகையான பூக்களை வைத்து அலங்கரித்ததோடு, செல்ஃபி எடுத்துக்கொள்வதற்கான இன்ஸ்டாகிராம் டெம்ப்ளேட்டையும் அமைத்திருந்தோம். இதை எதிர்பாக்காத வாடிக்கயாளரின் முகத்தில் அவ்வளவு மகிழ்ச்சி. இது மாதிரி சிறுசிறு விஷயங்களில் கவனம் செலுத்தினாலே போது, வாடிக்கையாளரை திருப்தியடையச் செய்யலாம்.” தொழிலின் வெற்றிப் பாதைக்காக தான் கடைபிடிக்கும் சூட்டுமத்தை நம்மிடம் பகிர்ந்த பாலாஜி மோகனிடம் சில கேள்விகளை வைத்தோம்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

``திருமண அலங்காரம், மேடை அலங்காரம் தொடர்பான பிசினஸ் ஐடியா எப்படி வந்தது?’’

``என்னுடைய ஜீன்ல இருந்துன்னு நினைக்கிறேன்” எனச் சிரிக்கிறார். ``அப்பா, தாத்தா எல்லாரும் திருமணங்கள்ல கேட்டரிங் வேலைகளைப் பிரதானமா பண்ணிட்டிருந்தாங்க. ஒவ்வொரு கல்யாணத்துலயும், அந்தக் குடும்பத்தின் பழக்கவழக்கங்கள், பிடிச்ச விஷயங்களைத் தெரிஞ்சுக்கிட்டு சிறப்பான உணவை ஏற்பாடு பண்றது, பொருள்களின் தரத்தை உறுதிப்படுத்தி சமைக்க வைக்குறதுன்னு, கேட்டரிங் துறையில நல்ல பெயர் எடுத்தவங்க. எனக்கு நிறைய படிக்க வாய்ப்பு கிடைச்சிருந்தாலும், இந்தத் துறையிலும் விருப்பம் இருந்தது. ஆனா, இந்தகால டிரெண்டுக்கு ஏத்த மாதிரி, நான் என்னுடைய பிசினஸை டிசைன் பண்ணிக்கிட்டேன்.

புன்னகைக்கும் பூக்கள்!

எந்தவிதமான பட்ஜெட்டோடு திருமண வீட்டார் எங்களை அணுகினாலும், அதுக்கேத்த மாதிரி எங்க டீம் ரெடியாவோம். தீம்ஸ், மண்டப நுழைவு, ஸ்டேஜ் டெக்கர், செல்ஃபி டெம்ப்ளேட்ஸ்னு எப்பவும் இதுக்கான ஐடியாக்கள், தேடல்கள் என் மனசுல ஓடிக்கிட்டே இருக்கும். எங்களை அணுகும் கஸ்டமரின் கனவைத் தாண்டி புதுமையான விஷயங்களைச் செஞ்சுகொடுப்போம் ”

``இன்றைக்கு லக்ஸூரி டைப் திருமணங்களில் எதிர்பார்க்கப்படும் வெரைட்டி அதிகம். இதை எப்படி ஹேண்டில் பண்றீங்க?’’

``வெடிங் டெக்கர் பொறுத்தவரைக்கும் மேடைகள் மட்டும் போதாது. மேடையலங்காரம், மேடைக்கு முன்னாடி கொஞ்சம் பகுதிக்கு மட்டும் டெக்கர் செய்வது பொதுவான விஷயம். இதுதவிர, நிறைய சுவாரஸ்யமான விஷயங்களும் இருக்கு. வி.ஐ.பி நாற்காலிகள், முக்கிய உறவினர்களுக்கான நாற்காலிகளுக்கான பிரத்யேகமான டெக்கரேஷன், ரிசப்ஷனுக்கான பிரத்யேகமான சுவர் அலங்காரம், வரவேற்பறையில் பாரம்பர்ய முறை மற்றும் டிரெண்டையும் கலந்து வித்தியாசமான ஸ்டைல்ல அலங்காரம் பண்றது அவசியம்.

செல்ஃபிக்கான ஃப்ரேம்வொர்க் பண்றதுல இருந்து, மண்டபமோ, பார்ட்டி ஹாலோ, வீடோ மணமக்களின் எண்ணத்துக்கு ஏத்த மாதிரி அவங்களுடைய விசேஷ நாளில், அந்த இடத்தைக் கனவு அரண்மனையா மாத்திடணும்கிற ஒரே ஒரு சிந்தனைதான் ஓடும். எனக்கு மட்டுமில்ல, என் ஒட்டுமொத்த டீமுக்கும் அப்படித்தான்!’’

புன்னகைக்கும் பூக்கள்!

``ஈவென்ட் மேனேஜ்மென்ட், டெக்கர் மாதிரியான பிசினஸுக்கு எது ரொம்ப முக்கியம்?’’

``நேர மேலாண்மை, அர்ப்பணிப்பு ரெண்டும்தான். சின்னச் சின்ன வேலைகளைக்கூட அதிக சிரத்தை எடுத்துச் செய்யணும். டெக்கர்ஸ் பிசினஸைப் பொறுத்தவரைக்கும் ஒரு மந்திரம் இருக்கு. நம்முடைய வீட்டுல ஒருத்தருக்குக் கல்யாணம்னா நம்ம எப்படி மெனக்கெட்டு சில வேலைகளைச் செய்வோமோ, அதைப் போலத்தான் எல்லா நிகழ்ச்சிகளுக்கும் செய்யணும்’’ என்கிறார் பாலாஜி.

-  குணவதி

புன்னகைக்கும் பூக்கள்!