Published:Updated:

இயல்பே அழகு!

இயல்பே அழகு!
பிரீமியம் ஸ்டோரி
News
இயல்பே அழகு!

எக்ஸ்பர்ட் ஏரியா

இயல்பே அழகு!

திருமணம் போன்ற வாழ்வின் மிக முக்கியமான தருணங்கள், நமக்கு ஒருமுறை மட்டுமே கிடைப்பவை. அந்தத் தருணங்களை நாம் மீண்டும் மீட்டெடுக்கும் வகையில் பத்திரப்படுத்துபவை புகைப்படங்களே. உறவினர்கள், நண்பர்கள் என நமக்குப் பிரியமானவர்கள் அனைவரும் சூழ நடக்கும் திருமண விழாக்கள், வாழ்வின் உன்னதத் தருணம். அந்த மகிழ்வு மணித்துளிகளை பொக்கிஷமாக்கித் தரும் `வெடிங் போட்டோகிராபி’, இப்போது புதிய உயரங்களை எட்டியிருக்கிறது.

விதவிதமான போட்டோஷூட், வெடிங் வீடியோக்கள் என இந்தத் துறையைச் சேர்ந்தோர் வெரைட்டியாக அசத்திக்கொண்டிருக்கிறார்கள். வித்தியாசமான அணுகுமுறைகள் மூலம் வௌிமாநிலங்களிலும் வெளிநாடுகளிலும் வாடிக்கையாளர்களைக் கொண்டிருக்கும் போட்டோகிராபி நிறுவனம் `பிக்சர் மேக்கர்ஸ்’. அதன் நிறுவனர்களில் ஒருவரான பிரவீனிடம் ஓர் அதிகாலையில் பேசினேன். புகைப்படங்களோடு அதிகம் உரையாடுபவர், தங்கள் `க்ளிக்’களைப் பற்றியும் பேசத் தொடங்குகிறார்.

இயல்பே அழகு!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

`வெடிங் போட்டோகிராபி’ இன்னிக்கு நிறைய பேர் பண்றாங்க. `பிக்சர் மேக்கர்ஸ்’ நிறுவனத்தில் என்ன ஸ்பெஷல்?

இயல்பே அழகு!

மாப்பிள்ளை பொண்ணை வெச்சு, சினிமா ஷூட்டிங் மாதிரி போட்டோ ஷூட் பண்ண மாட்டோம். அவர்களின் இயல்பான அழகை, உணர்வுகளைப் பதியறதுதான் எங்க சிறப்பம்சம். நாங்க எடுத்துக்கொடுக்கிற வெடிங் வீடியோவுலகூட சினிமா பாட்டெல்லாம் போடாம, லைட் மியூசிக்காவே ஃபில் பண்ணுவோம். எங்க வாடிக்கையாளர்கள் எல்லாருமே ஹீரோ ஹீரோயின்ஸ்தான். அவர்களின் ஸ்கின் டோனுக்கு ஏற்ற மாதிரி லொகேஷன் தேர்ந்தெடுப்போம். செயற்கை இல்லாத அவர்களின் இயல்பான அழகை எங்க படங்களில் பார்க்க முடியும்.  

`பிக்சர் மேக்கர்ஸ்’ எப்ப ஆரம்பிச்சீங்க? அதோட பயணம் பற்றிச் சொல்லுங்க?

அஞ்சு வருஷத்துக்கு முன்னாடி நாலு பேர் சேர்ந்து போட்டோகிராபி பண்ண ஆரம்பிச்சோம். இப்போ எங்க குழுவில் மொத்தம் 13 பேர் இருக்கோம். எங்க குழுவைப் பொறுத்தவரை யாருமே லீடர் கிடையாது. எல்லோருமே ஒண்ணுதான். நாங்க எல்லோருமே விஸ்காம் படிச்சவங்க.

இன்னிக்கு நிறைய பேர் வெடிங் போட்டோகிராபி பண்றாங்க. ஆனா, அவங்கள்ல நிறைய பேர் சினிமாவுல அசிஸ்டென்ட் டைரக்டர்ஸா, சினிமாட்டோகிராபர்ஸா இருக்கிறவங்க. அவங்களுக்கு ஒரு சைடு பிசினஸ் மாதிரித்தான் வெடிங் போட்டோகிராபி. ஆனா, எங்களுக்கு வெடிங் போட்டோகிராபிதான் எல்லாமே. நாங்க இந்தக் கலையை ரொம்ப ஆத்மார்த்தமா நினைக்கிறோம்.

இயல்பே அழகு!

தமிழ்நாட்டுல பல்வேறு கலாசார திருமணங்கள் நடக்குது. ஒவ்வொண்ணும் வித்தியாசமா இருக்குமே... அந்த அனுபவங்கள் பற்றிச் சொல்லுங்க?

காரைக்குடி செட்டிநாட்டு திருமணம், சென்னை பிராமண திருமணம், கிறிஸ்டியன் வெடிங், மார்வாடி வெடிங் என வெவ்வேறு திருமணங்களுக்கும் புகைப்படங்கள்எடுத்திருக்கோம். ஒவ்வொண்ணும் ஒவ்வொரு ஸ்டைல், ஒவ்வொரு கலர்ல இருக்கும். நிறைய சடங்குகள் நடக்கும். எல்லாமே அவ்வளவு அழகாவும் எமோஷனலாவும் இருக்கும். கலாசாரம் வேற வேறயா இருந்தாலும்,  எல்லா திருமணங்களிலுமே எமோஷன்ஸ் ஒண்ணுதான். அப்பா, அம்மா, ரிலேஷன்ஸ், ஃப்ரெண்ட்ஸ்னு எல்லோரையும் ஒண்ணா ஒரே நேரத்தில பார்க்கிறது கஷ்டம். அப்படியொரு அரிய தருணம் திருமணம்தான். மாப்பிள்ளை பொண்ணுக்கு ஆசீர்வாதம் பண்றப்ப அப்பா அம்மாவின் கண்ணீர்த் துளி, நண்பர்களின் புன்னகைனு `லைஃப் டைம் மொமன்ட்’ஸை எங்க கேமராவால அழகா பதிவு பண்ணிருவோம்.

தமிழ்நாடு தாண்டி வேற என்ன மாதிரியான வெடிங்ஸ் பண்ணி யிருக்கீங்க?

மற்ற ஸ்டேட்லயும் நிறைய வெடிங் பண்ணிருக்கோம். கொல்கத்தாவுல நாங்க பண்ண வெடிங் ரொம்பவே ஸ்பெஷல். அங்கே உள்ள வித்தியாசமான இடங்கள்ல நிறைய ஷூட் பண்ணினோம். அதுமட்டுமில்லாம, தாய்லாந்து, சிங்கப்பூர், ஷார்ஜானு வெளிநாடுகள்லயும் வெடிங் ஷூட் பண்ணிருக்கோம். தாய்லாந்து புக்கெட்ல வெடிங் ஷூட் பண்ணினோம்.

நம்ம திருமணங்கள்லயும் ஃபாரின் திருமணங்கள்லயும் ஒரே ஒரு வித்தியாசம்தான். நம்ம ஊர் வெடிங்ல எமோஷன்ஸ் நிறைய இருக்கும். ஃபாரின் வெடிங்ல செலிப்ரேஷன் அதிகமா இருக்கும். அந்தக் கொண்டாட்டங்களைப் பதிவு பண்றது ரொம்பவே வித்தியாசமான அனுபவம். விழாவுக்கு வர்ற எல்லோருமே மாப்பிள்ளை மாதிரி பிரமாதமா டிரஸ் பண்ணியிருப்பாங்க. ரொம்பவே கலர்ஃபுல்லா இருக்கும்.

இயல்பே அழகு!

இபோதைய ட்ரெண்டான ப்ரி வெடிங் ஷூட் மற்றும் போஸ்ட் வெடிங் ஷூட்டில் உங்க ஸ்டைல் என்ன?

இருக்கிறதுல இன்ட்ரஸ்டிங்கான வேலை இந்த ப்ரீ மற்றும் போஸ்ட் வெடிங் ஷூட்தான். வேற யாரும் இல்லாம, மாப்பிள்ளை பொண்ணு மட்டுமே இருக்கிறதால கொஞ்சம்கூடப் பதற்றமே இல்லாம பண்ணலாம். மொதல்ல லொக்கேஷன்ஸை ரெடி பண்ணிடுவோம். அதுக்கப்புறம் நாங்களே ஒரு கான்செப்ட் ரெடி பண்ணி மாப்பிள்ளை பொண்ணுகிட்ட கொடுத்துப் பேசச் சொல்வோம். அது ரொம்ப கஷ்டம்னு நினைச்சுக்காதீங்க. அவங்க இயல்பா பேசிக்கிற மாதிரி சிம்பிளாத்தான் இருக்கும். அப்படி மாப்பிள்ளை பொண்ணு பேசுறப்போ, இயல்பா அவங்களுக்குள்ளிருந்து வெளிப்படுற ரியாக்‌ஷன்ஸை கேப்சர் பண்ணிப்போம்.

மேரேஜ்ங்கிறது அவங்க லைஃப்ல எப்படி முக்கியமான ஒரு நிகழ்வோ, அதுபோல எங்களுக்கும் ஷூட் பண்ற ஒவ்வொரு மேரேஜும் ரொம்ப  ரொம்ப  முக்கியமானதுதான்!

அழகாகச் சிரிக்கிறார் பிரவீன்.

- சக்தி தமிழ்ச்செல்வன்