Published:Updated:

ஜொலிக்கும் அழகு!

ஜொலிக்கும் அழகு!
பிரீமியம் ஸ்டோரி
News
ஜொலிக்கும் அழகு!

ஜொலிக்கும் அழகு!

ணமேடையில் தேவதை அழகுடன் மணப்பெண்ணை,  ஜொலிக்கவைக்கும்வகையில்  அறிமுகமாகி உள்ளது `ஜுவல் ஃபேஷியல்’. இதுகுறித்து சென்னை கிரீன் ட்ரெண்ட்ஸ் நிறுவனத்தின் சீனியர் அழகுக் கலை நிபுணர் தபசும் கூறியதில்...

ஜொலிக்கும் அழகு!

“அந்தக் காலத்தில் சருமப் பராமரிப்புக்கு நவரத்தினக் கற்களை உபயோகப்படுத்தினர். அதன் மறுவடிவம்தான் இந்த `ஜுவல் ஃபேஷியல்’. ஐந்து வகையான ரத்தின பவுடரைக்கொண்டு செய்யப்படும் இந்த ஃபேஷியலில் அதிக அளவு ஆன்ட்டி-ஆக்ஸிடன்ட் கொலாஜென் (Antioxidant Collagen) இருப்பதால் சருமத்துக்கு நல்ல ஜொலிப்பைத் தரும். படிப்படியான ஐந்து வழிமுறைகளைக்கொண்ட இந்த ஃபேஷியலை, திருமணத்துக்கு இரண்டு நாள்கள் முன்பு செய்தாலே போதும்... மணமேடையில் தங்கத்துக்கு நிகராக ஜொலிக்கலாம்” என்கிறவர், இதன் செய்முறையையும் விளக்குகிறார்...

க்ளீன்சிங்
(Cleansing): க்ளென்சரில் பெரிடாட் (Peridot) ரத்தினக்கல்லின் பவுடர் உள்ளது. இது, சருமத்தில் உள்ள இறந்த செல்களை நீக்குகிறது.

எக்ஸ்ஃபோலியேஷன் (Exfoliation): எக்ஸ்ஃபோலியேட்டரில் டர்காய்ஸ் (Turquoise) பவுடர் உள்ளது. இது, சருமத்தை டீடாக்ஸ் செய்ய உதவும்.

மசாஜ் (Massage): மசாஜிங் க்ரீமில் முத்து(Pearl) பவுடர் கலந்திருப்பதால், சருமப் பிரச்னைகளை நீக்கும்.

 ஃபேஸ் பேக் (Face Pack): ஜுவல் ஃபேஷியலில் பயன்படுத்தப்படும் ஃபேஸ்பேக்கில் ரோஸ்காட்டன் பவுடர் உள்ளது. இது சீரான ரத்த ஓட்டத்தை அளித்து, பொலிவான சருமம் பெற உதவுகிறது.

சீரம் (Serum): சீரத்தில் இருக்கும் டைமண்ட் பவுடர், சருமத்தில் ஏற்படும் சுருக்கங்களை நீக்குகிறது.

இந்த ஜுவல் ஃபேஷியல், அனைத்து வகையான ஸ்கின் டோன்களுக்கும் ஏற்றது.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

- கானப்ரியா