Published:Updated:

பியூட்டி கார்னர் - Q&A

பியூட்டி கார்னர் - Q&A
News
பியூட்டி கார்னர் - Q&A

பியூட்டி

பியூட்டி கார்னர் - Q&A

பாதங்கள் பளபளக்க!

பாதங்களில் கருமை, சொரசொரப்பு நீங்கி அழகு பெற சரும சிறப்பு மருத்துவர் யூ.ஆர் தனலட்சுமி தரும் ஆலோசனைகள்...

வீட்டில் செய்யக்கூடிய சில பராமரிப்பு முறைகளின் மூலம், பாதங்களைப் பட்டுப்போன்று மென்மையாக வைத்துக்கொள்ள முடியும்.

* தினமும் குளிக்கும்போது பேபி பிரஷ்ஷால் பாதம் மற்றும் விரல்களில் இடுக்குகளில் உள்ள அழுக்குகளைச் சுத்தம் செய்யவும். இதன் மூலம் இறந்த செல்கள் நீங்கி, கால்கள் பளிச்சென்று இருக்கும்.

* தினமும் குளித்த பின் மாய்ஸ்ச்சரைஸர்  பயன்படுத்தவும்.

பியூட்டி கார்னர் - Q&A

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

* டேனிங் ஏற்படுவதைத் தவிர்க்க, வெயிலில் செல்லும்போது சன்ஸ்க்ரீன் பயன்படுத்தலாம் அல்லது சாக்ஸ் அணிந்துகொள்ளலாம்.

* பாதிப்புகள் அதிகம் இருப்பின் மருத்துவரின் ஆலோசனை பெற்று ஸ்டீராய்டு இல்லாத லைட்டனிங் க்ரீம்களைப் பயன்படுத்தலாம்.

* உடனடி தீர்வு வேண்டுபவர்கள் நிபுணரின் ஆலோசனையுடன் பீலிங் ட்ரீட்மென்ட் செய்துகொள்ளலாம்.

பருக்கள் நீங்க... சில சிகிச்சைகள்!

முகத்தில் இருக்கும் பருக்களை நீக்க  காஸ்மெட்டாலஜிஸ்ட் சசிக்குமார் முத்து தரும் மருத்துவ ஆலோசனைகள்...

முகத்தில் இருக்கும் பருக்களை நீக்க, எக்ஸ்ஃபோலியேஷன்,  பீல், லேசர் போன்ற சிகிச்சைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

* எக்ஸ்ஃபோலியேஷன் சிகிச்சை

முகத்தில் படியும் மாசுகள் மற்றும் சருமத் துவாரங்களில் சேரும் அழுக்குகள் மூலம் பருக்கள் ஏற்படலாம். இதைத் தவிர்க்க, சருமத்தில் உள்ள இறந்த செல்களை நீக்க வேண்டும்.

இதற்காகச் செய்யப்படும் சிகிச்சை முறை, எக்ஸ்ஃபோலியேஷன் (Exfoliation). க்ரீம்கள் அல்லது மருந்துகள்கொண்டு இது சரும பரப்பில் செய்யப்படும் சிகிச்சை என்பதால், ஃபேஷியல்போல இதை அடிக்கடி செய்துகொள்ளும்போதுதான் பலன் கிடைக்கும்.

* பீல் சிகிச்சை

சருமத்தை ஊடுருவி வினைபுரியும் கெமிக்கல் பீல் சிகிச்சை மூலம், சருமப் பிரச்னைகளைச் சரிசெய்ய முடியும். குறிப்பாக, சருமத்தில் எண்ணெய்த்தன்மையைக் கட்டுப்படுத்தி பருக்கள் வராமல் தடுக்க முடியும். சருமத்தின் தன்மை, சருமத்தில் உள்ள பிரச்னையை நிபுணர் ஆராய்ந்த பின்னரே இதைப் பரிந்துரைப்பார். மேலும், பீல் என்பது ஒரு சிட்டிங்கில் முடிந்துவிடும் சிகிச்சை அல்ல. குறைந்தபட்சம் நான்கு சிட்டிங்குகள் தேவைப்படும். ஒவ்வொரு சிட்டிங்குக்கும் குறைந்தது இரண்டு மாத இடைவெளி இருக்க வேண்டும்; மருத்துவர்கள் பரிந்துரைக்கும் டயட், ஃபேஸ் வாஷ், க்ரீம்கள், லோஷன்கள் போன்றவற்றை ஃபாலோ செய்ய வேண்டும். பல்வேறு வகையான பீல் சிகிச்சை முறைகளைப் பார்ப்போம்.

* பருக்களைத்  தவிர்க்க..!

சருமத்தில் அதிகளவு  எண்ணெய்ச் சுரப்பு உடையவர்களுக்கு, முகத்தில் அதிகளவு பருக்கள் வரலாம். எனவே, சருமத்தில் உள்ள எண்ணெய்ப் பசையைக் கட்டுப்படுத்த சிகிச்சை எடுப்பதன் மூலம், பருக்களைத் தவிர்க்க முடியும். இதற்கு ‘சாலிசிலிக்’ (Salycylic) என்ற பீல் முறை ஏற்றது. இது சருமத்தின் எண்ணெய்த் தன்மையைக் குறைத்து பருக்களைத்  தவிர்க்கும்.

* பருக்களை நீக்க..!

பருக்களைக் கிள்ளக் கிள்ள, தொற்று ஏற்பட்டு அவை அதிகரிக்கும். எனவே அதைத் தவிர்க்க வேண்டும். சருமத்தில் உள்ள பருவை ‘மாண்டலிக்’ (Mandelic) பீல் சிகிச்சை மூலம் அகற்றிவிடலாம். சென்சிட்டிவ் ஸ்கின் உடையவர்கள் இந்த முறையைத் தவிர்க்கவும்.

* பருக்களால் ஏற்படும் கரும்புள்ளிகளை அகற்ற..!

 சிலருக்குப் பருக்கள் தானாகவே சரியாகிவிடும் எனினும், அவை இருந்த இடத்தில் தழும்புகள், கரும்புள்ளிகள் போன்றவை ஏற்பட்டு முகத்தின் அழகைக் கெடுக்கும். இதைச் சரிசெய்ய ‘லாக்டிக்’ (Lactic) பீல்  முறை பயன்படுகிறது.

* லேசர் சிகிச்சை

மேற்சொன்ன இரண்டு முறைகளின் மூலமும் பருக்களைக் கட்டுப்படுத்த முடியாதவர்களுக்கு, சருமத்தின் ஆழம் வரை ஊடுருவிச் செல்லக்கூடிய லேசர் சிகிச்சை முறை மேற்கொள்ளப்படும்.

பிரைடல் மெஹெந்தி.... பிரைட்டாக காட்சியளிக்க!

முன்பெல்லாம் திருமணம் என்றால் உள்ளங்கையில் மட்டும் மெஹந்தி போட்டுக்கொள்வர். ஆனால், இப்போது முழங்கை, மேல்கை வரை மெஹந்தி போட்டுக்கொள்வது பெண்களின் விருப்பமாக உள்ளது. அது பளிச்சென்று தெரிய, கை முழுவதற்கும் சருமப் பராமரிப்பு அவசியம். திருமணத்துக்கு மூன்று மாதங்களுக்கு முன்னரே கை கால்களில் படர்ந்துள்ள கருமையை (டேனிங்) நீக்க வேண்டும். வீட்டிலேயே சில எளிதான பேக்குகள் போட்டுக்கொள்வதன் மூலம் டேனிங் நீங்கி கைகள் பளிச் என்றிருக்கும். திருமணத்துக்கு இரண்டு நாள்களுக்கு முன்னர் வேக்ஸிங் செய்து, மாய்ஸ்ச்சரைஸர் அப்ளை செய்து கொள்ளவும்.

சன் டேனிங் நீக்குவதற்கான பேக்!

முல்தானி மட்டி - 2 டீஸ்பூன், எலுமிச்சைச் சாறு - அரை டீஸ்பூன், வெள்ளரிக்காய் சாறு - அரை டீஸ்பூன், காய்ச்சாத பால் - 4 டீஸ்பூன்... இவை அனைத்தையும் நன்றாக மிக்ஸ் செய்து கை, கால்களில் பேக் போட்டு, அரை மணி நேரத்துக்குப் பின் கழுவவும். இதை ரெகுலராக செய்து வந்தால் சருமத்தில் உள்ள டேனிங் மறைந்து மெஹந்தி பளிச்சென்று தெரியும்.

டிப்ஸ்!

* யூக்கலிப்டஸ் ஆயிலைக் கைகளில் தடவிக்கொண்டு பின்னர் மெஹந்தி போட்டுக்கொள்ளும்போது, மெஹந்தி பிரைட்டாக தெரியும்.

* மெஹந்தி டிசைன் முழுவதும் வரைந்து முடித்த பின்னர், ஒரு டீஸ்பூன் எலுமிச்சைச் சாற்றில் அரை டீஸ்பூன் சர்க்கரை கலந்து, அந்த ஜூஸை மெஹந்தி மீது தடவிக்கொள்ள, மெஹந்தி நல்ல அடர் நிறத்தில் சிவந்து கைகளுக்குக் கூடுதல் அழகைக் கொடுக்கும்.