பிரீமியம் ஸ்டோரி
நாணயம் BITS

ஜீவன் சாந்தி... மூன்று தலைமுறைகளுக்கு பென்ஷன்!

“எல்.ஐ.சி, புதிதாக அறிமுகப்படுத்திய ஜீவன் சாந்தி பாலிசி மூலம் மூன்று தலைமுறைகளுக்கு பென்ஷன்  கிடைக்கும். அப்பா, மகள் இணைந்து கூட்டு பாலிசியாக இதனை எடுக்கலாம்” என எல்.ஐ.சி-யின் தென் மண்டல மேலாளர் தாமோதரன்  தெரிவித்தார்.மேலும் அவர் கூறும்போது, ‘’பங்குச் சந்தையுடன் இணையாத, லாபத்தில் பங்கேற்காத ஒரேயொரு முறை பிரீமியம் செலுத்தும் விதமாக இந்த பாலிசி வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆன்யுட்டி தொகையை உடனடியாகவோ அல்லது 1 முதல் 20 ஆண்டுகள் கழித்தோ பெற்றுக்கொள்ளலாம். ஓராண்டுக்கு என்கிறபட்சத்தில் 7.67% வருமானம் கிடைக்கும். எத்தனை ஆண்டுகள் கழித்து பென்ஷன் பெறும் ஆப்ஷனைத் தேர்வு செய்கிறார்களோ அதற்கு ஏற்ப அதிக பென்ஷன் கிடைக்கும்.  இந்த பாலிசியை ஆன்லைன் மூலம் எடுத்தால் 2% கூடுதல் பென்ஷன் கிடைக்கும். மருத்துவ பரிசோதனை கிடையாது. பாலிசிதாரர் மரணம் அடைந்தால் கட்டிய தொகையில் 110% கிடைக்கும். முதலீட்டுத் தொகைக்கு 80சி பிரிவின் கீழ் வருமான வரிச் சலுகை உண்டு” என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு