பிரீமியம் ஸ்டோரி

பொருளாதாரம், பங்குச் சந்தை, வருமான வரி தொடர்பான கேள்விகளையும் அவற்றுக்கு மூன்று பதில்களையும் தந்துள்ளோம். சரியான பதிலுக்கு 10 மார்க் என மொத்தம் 100 மார்க்.  இதில் 60-70 மார்க்கை நீங்கள் எடுத்தால், உங்களை நீங்களே பாராட்டிக் கொள்ளலாம்.

நாணயம் QUIZ

1. ரென்மின்பி (Renminbi) என்பது எந்த நாட்டு நாணயம்?

அ. இந்தோனேஷியா
ஆ. சீனா
இ. தென் கொரியா

2.     நிலையான வருமானம் எதிர்பார்க்கும் முதலீட்டாளர் எந்த வகையான ஃபண்டுகளில் முதலீடு செய்ய வேண்டும்?

அ. பங்குச் சந்தை சார்ந்த ஃபண்டுகள்
ஆ. கலவை ஃபண்டுகள்
இ. கடன் சார்ந்த ஃபண்டுகள்

3.   இதில் எது முதலில் ஆரம்பிக்கப்பட்ட வங்கி

அ. இந்தியன் வங்கி
இ. இந்தியன் ஓவர்சீஸ் வங்கி
இ. தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி

4. முதலீட்டு ஆலோசகராகச் செயல்பட இதன் சான்றிதழ் அவசியம்

அ. பி.எஸ்.இ
ஆ. என்.எஸ்.இ
இ. என்.ஐ.எஸ்.எம்

நாணயம் QUIZ

5. கீழ்க்கண்ட வருமானத்தில் எதற்கு வரிச் சலுகை உண்டு

அ. இந்துக் கூட்டுக் குடும்பத்திலிருந்து கிடைக்கும் பங்கு
ஆ. ரிசர்வ் மார்ட்கேஜ் வீட்டு அடமானக் கடன் மூலம் கிடைக்கும் தொகை
இ.  ஆயுள் காப்பீடு பாலிசி மூலம் கிடைக்கும் முதிர்வுத் தொகை (காப்பீடு தொகையில் 20 சதவிகிதத்துக்குமேல் பிரீமியம்)

6.  இந்தியாவில் தொழிற்சாலைகள் எண்ணிக்கையில் முதலிடம் வகிக்கும் மாநிலம்

அ. தமிழ்நாடு
ஆ. ஆந்திரா
இ. குஜராத்

7.  16 அணாக்கள் என்பது

அ. 1 ரூபாய்
ஆ. 5 ரூபாய்
இ. 100 ரூபாய்

8. இந்தியாவின் முதல் இரும்புத் தொழிற்சாலை இந்த நகரில் தொடங்கப்பட்டது

அ. சேலம் (தமிழ்நாடு)
ஆ. ஜாம்ஷெட்பூர் (பீகார்)
இ. அசனூர் (வங்காளம்)

9. உலக வங்கியின் தலைமையகம் எங்கு இருக்கிறது?

அ.  டோக்கியோ
ஆ. வாஷிங்டன் டி.சி 
இ. லண்டன்

10.  எந்த வரிச் சேமிப்புத் திட்டம் அதிக லாக்-இன் காலம் கொண்டது 

அ. பி.பி.எஃப்
ஆ. வங்கி எஃப்.டி
இ. ஆயுள் காப்பீடு


- சி.சரவணன்

சரியான விடை:

1. ஆ. சீனா

2 இ. கடன் சார்ந்த ஃபண்டுகள்

3. அ. இந்தியன் வங்கி 

4. இ. என்.ஐ.எஸ்.எம்

5. இ. ஆயுள் காப்பீடு பாலிசி மூலம் கிடைக்கும் முதிர்வுத் தொகை (காப்பீடு தொகையில் 20%-க்கு மேல் பிரீமியம்) 

6. அ. தமிழ்நாடு

7. அ. 1 ரூபாய்

8. அ. சேலம் (தமிழ்நாடு)

9. ஆ. வாஷிங்டன் டி.சி

10. அ. பி.பி.எஃப்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு