Published:Updated:

சீர்வரிசை

சீர்வரிசை
பிரீமியம் ஸ்டோரி
News
சீர்வரிசை

நியூ ஐடியா

ரு திருமணத்தில் இரண்டு குடும்பங்கள் இணைகின்றன. அவர்கள் தங்களின் அன்பையும் மகிழ்ச்சியையும் ஒருவருக்கொருவர் பகிர்ந்துகொள்ளும் விதமாகச் சீர்வரிசைத் தட்டுகளில் இனிப்புகளையும் பழங்களையும் நிரப்பிப் பரிமாறிக்கொள்கிறார்கள். இவற்றை விதவிதமாக அலங்கரித்து வைத்துத் தட்டுகளை அழகாக்குவதுதான் இப்போதைய ட்ரெண்ட். அதில் வித்தியாசமாக யோசித்து அசத்துகிறார்கள் கோவையைச் சேர்ந்த தோழிகள் ரம்யா, ராஜஸ்ரீ, உமா மற்றும் பிருந்தா.

சீர்வரிசை

‘`எங்களுடைய பாரம்பர்யத்துல கல்யாணத்துக்கு ஒரு வாரம் முன்பே மாலை மாற்றும் சடங்கு நடைபெறும். மணப்பெண், மாப்பிள்ளை வீட்டிலிருந்து பச்சரிசி மாவும் வெல்லமும் வெள்ளிக் கிண்ணத்தில் கலந்து, மாவின் மேலே மணமக்களின் பெயரை எழுதி, அதன் மேலே சீரக மிட்டாய் வெச்சு அழகுபடுத்தி, தட்டு மாத்திக்குவாங்க. காலம் காலமாகத் தொடரும் இந்த வழக்கத்தைக் காலத்துக்குத் தகுந்த மாதிரி ஏன் வித்தியாசமா பண்ணக்கூடாதுனு யோசித்ததில் ஆரம்பிச்சதுதான் இந்த அலங்காரச் சீர்வரிசை தட்டுகள் பிசினஸ்’’ என்று ஆரம்பித்தனர் தோழிகள்.

‘`நாங்க நாலு பேருமே குடும்ப நிர்வாகிகள். எங்களுடைய தினசரி கடமைகளை முடிச்சுட்டு ஓய்வா இருக்கிற நேரத்தை வீணடிக்க வேண்டாம்னு முடிவெடுத்தோம். எங்க எல்லோருக்குமே கைவேலைப்பாடுகள் நல்லா வரும். இதுக்காக எந்த கோர்ஸும் படிக்கலை. சீர்வரிசை டெகரேஷனை ஆரம்பத்தில் எங்க சொந்தக்காரங்க வீடுகளுக்கு மட்டும் பண்ணிக்கொடுத்துட்டிருந்தோம். நிறைய போட்டியிருந்ததால, எப்படி இதில் வித்தியாசம் காட்டலாம்னு யோசிச்சோம். யாருமே முயற்சி செய்யாத, யோசிக்காத க்ரியேட்டிவ் டிசைன்களை உருவாக்கி, எங்களின் தனித்தன்மையை காட்டணும்னு முடிவு செய்தோம். செயற்கைப் பொருள்கள் இல்லாத, சாப்பிடக்கூடிய உணவுப் பொருள்களை வைத்துத் தட்டுகளைத் தயாரிக்கிறதுனு முடிவு செய்தோம்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
சீர்வரிசை

முதன்முதலா ‘ஃபான்டன்ட்’ (fondant) பயன்படுத்தி பென்குவினை தீமாக வைத்து சீர்வரிசைத் தட்டுகள் செய்தோம். இதைச் செய்ய இரண்டு, மூன்று நாள்கள் தேவைப்படும். கல்யாணத்துக்கு இரண்டு நாள்களுக்கு முன்னாடியே செய்து ஃப்ரிட்ஜில் வெச்சிடுவோம். சிலர், திருமணம் முடிந்த பின்னரும் வைத்துப் பார்த்து நினைவுகூரும் வகையில் செய்து கொடுக்கச் சொல்லிக் கேட்பாங்க. அதற்கு, ‘ஷில்ப்கர் க்ளே’ (shilpkar clay) பயன்படுத்திச்  செய்துகொடுப்போம்; அதை ஷோகேஸில் வெச்சுக்குவாங்க.

சில வீடுகளில், கஸ்டமர்களே கல்யாண தீம் பற்றிச் சொல்லி, அதற்குப் பொருத்தமா சீர்வரிசைத் தட்டுகளைச் செய்துதரச் சொல்லிக் கேட்பாங்க. சிலர், ‘நீங்களே ஒரு நல்ல தீம்ல செய்துகொடுங்க’னு சொல்லிடுவாங்க. அதுபோன்ற ஆர்டர்களில், பெண்ணுக்கு என்ன பிடிக்கும்னு கேட்டு அதை மாப்பிள்ளை வீட்டினருக்கான சீர்வரிசைத் தட்டிலும், பையனுக்கு என்ன பிடிக்கும்னு கேட்டு அதை மணமகள் வீட்டினரின் சீர்வரிசைத் தட்டிலும் செய்துவைப்போம்.

சீர்வரிசை

கல்யாண வயசு வந்துட்டாலும்கூட பெண்ணுங்களுக்கு சாக்லேட் ஆசை தீராது. அதனால ஒரு திருமண வீட்டினருக்கு, ஃபெரிரோ ரோச்செர் சாக்லேட் மற்றும் டிஷ்யூ பேப்பரினாலான பார்பி டால் செய்து கொடுத்தோம். நிறைய பாராட்டுகள் கிடைச்சதுடன், பல இளம்பெண்களும், ‘எங்க கல்யாணத்துக்கும் ப்ளீஸ்...’னு புக் பண்ணினாங்க. அதேபோல, மணமக்களுக்கான திருமண உடை போன்ற மாடலை, அல்வா மற்றும் அத்திப்பழத்தைப் பயன்படுத்தி செய்து கொடுத்திருக்கிறோம்.
எங்களுடைய வேலைப்பாட்டைப் பார்த்துட்டு நிறைய ஆர்டர்கள் வருது. எங்களுக்கு நேரம் போதாத பட்சத்தில், ஐடியாக்களை மட்டும் வழங்குவோம். க்ரியேட்டிவிட்டியை மட்டுமே மூலதனமா வைத்துச் செய்துவரும் இந்த வேலை, எங்க மனசை எப்போதும் ஒரு துள்ளலுடன் வெச்சிருக்கு!”

கைகள் கோத்துச் சிரிக்கிறார்கள் தோழிகள்!

வெ.அன்பரசி