Published:Updated:

Cosmetics - ‘உங்க மேக்கப் கிட்ல என்னவெல்லாம் இருக்கும்?’

Cosmetics - ‘உங்க மேக்கப் கிட்ல என்னவெல்லாம் இருக்கும்?’
பிரீமியம் ஸ்டோரி
News
Cosmetics - ‘உங்க மேக்கப் கிட்ல என்னவெல்லாம் இருக்கும்?’

- சின்னத்திரை ஸ்டார்கள் சிலரிடம் கேட்டோம்...காஸ்ட்யூம் & அக்சஸரீஸ்

Cosmetics - ‘உங்க மேக்கப் கிட்ல என்னவெல்லாம் இருக்கும்?’

சமீரா ஷெரீஃப்

‘`ஐபுரோ வரைய மாட்டேன்!”

ஜீ தமிழ் சேனலின் ‘றெக்கை கட்டிப் பறக்குது மனசு’ சீரியலில் ‘மலர் டீச்ச’ராக லைக்ஸ் அள்ளும் சமீரா ஷெரீஃபுக்கு முகநூலில் இருக்கும் ஃபேன் பேஜ் பக்கங்களை விரல்விட்டு எண்ண முடியாது. பூர்வீகம் ஹைதராபாத் என்றாலும் சரளமாகத் தமிழ் பேசுகிறார். சரி, மேக்கப் கிட்?

சன் ஸ்க்ரீன்

சென்னை வெயிலைச் சமாளிக்க ரொம்ப கஷ்டப்படறேன். அதனால,  வீட்டுக்குள் இருந்தாகூட என் டாக்டர் பரிந்துரைத்த ‘Murtela’ சன் ஸ்க்ரீன் இல்லாம இருக்க மாட்டேன்!

ஐபுரோ பேலட்

இயற்கையாக நம் புருவத்தில் சின்னச் சின்ன இடைவெளிகள் இருக்கும். அதை ஃபில் பண்றது ரொம்ப முக்கியம்னு நினைப்பேன். அதுக்கு ஐபுரோ பேலட் எனக்குக் கைகொடுக்கும். ‘The Body Shop’ புராடக்ட்ஸ்தான் என் தேர்வு. என் நேச்சுரல் ஐபுரோவைதான் ஷேட் பண்ணுவேனே தவிர, நீளமாக வரைய மாட்டேன்.

லிப்ஸ்டிக்

நிறைய பிராண்டு லிப்ஸ்டிக் வாங்கி வெச்சிருக்கேன். என் மூட் பொறுத்துதான் செலக்ட் பண்ணுவேன். பெரும்பாலும் ‘matte’ லிப்ஸ்டிக்தான் பயன்படுத்துவேன். அதிகமாகப் பயன்படுத்துறது ‘Mac’ பிராண்டு. சன் ஸ்க்ரீன், ஐ ஷேடோ, லிப்ஸ்டிக் இல்லாம நான் வீட்டைவிட்டு வெளியே வரமாட்டேன்.

பிளஷ்

என் பர்சனல் யூஸுக்கு ‘The Body Shop’ புராடக்ட்ஸ்தான் பயன்படுத்துவேன். குறிப்பா Body Shop Honey Bronze ரொம்ப நல்லா இருக்கும். எப்போதாவதுதான் பிளஷ் பயன்படுத்துவேன்.

பெர்ஃப்யூம்

பெர்ஃப்யூமில் எனக்கு ரெண்டு பிராண்டுகள் ஃபேவரைட் - ‘Armani’, ‘Gucci’...’’

Cosmetics - ‘உங்க மேக்கப் கிட்ல என்னவெல்லாம் இருக்கும்?’

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

ரேஷ்மா

‘`மூணு ஃபவுண்டேஷன் மிக்ஸ் பண்ணி அப்ளை பண்ணுவேன்!”

ஜீ தமிழ் ‘பூவே பூச்சூடவா’ சீரியலில் கலக்கும் ரேஷ்மாவுக்கு, இன்ஸ்டாகிராமில் ஏகப்பட்ட ஃபாலோயர்ஸ். தன் நடனத் திறமை மூலம் மீடியாவுக்குள் நுழைந்தவர், நடிப்பு மூலம் மக்கள் மனதிலும்  நிலைத்துவிட்டார்.

‘`எனக்குக் கொஞ்சம் டஸ்கி ஸ்கின். அதனால, மேக்கப் புராடக்ட்களை அதற்குத் தகுந்தாற்போல தேர்ந் தெடுப்பேன். 

லிப்ஸ்டிக்

Color Bar Haute Latte - இதுதான் நான் பயன்படுத்துற  லிப்ஸ்டிக் பிராண்டு. இது ‘ஃபீல் லைட்’ உணர்வைக் கொடுக்கும், அதேநேரம் பிரைட் லுக்கும் கொடுக்கும்.

மஸ்காரா

நான் காஜல் பயன்படுத்த மாட்டேன். ‘Maybelline’ மஸ்காரா பயன்படுத்துறேன். காஜல் போடாமல் நேரடியாக மஸ்காரா போட்டாலும், கண் பிரைட்டாகத் தெரியும். என் குட்டிக் கண்களை அழகா காட்ட எனக்கு மஸ்காரா மட்டுமே போதுமானதாக இருக்கு.

ரெகுலரா யூஸ் பண்றது லிப்ஸ்டிக் மற்றும் மஸ்காரா மட்டும்தான். இவை தவிர்த்து, ஷூட்டிங் மேக்கப்புக்குப் பயன்படுத்துற புராடக்ட்ஸ் பற்றி சொல்றேன்.

காம்பேக்ட்

ஸ்கிரீனில் பார்க்கும்போது முகம் பிரைட்டா தெரியணும் என்பதால காம்பேக்ட்டுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பேன். அதில் ‘Colorbar’, ‘Mac’ புராடக்ட்ஸ் பயன்படுத்துறேன். ‘Mac’ நீண்ட நேரம் நீடிக்கும், பர்ஃபெக்ட் லுக் கொடுக்கும், ஸ்க்ரீனில் முகம் பிரைட்டா தெரியும்.

லிப் பாம்

‘Body Shop’, ‘Himalaya’... ரெண்டு லிப் பாம்கள் பயன்படுத்துறேன். தினமும் ஷூட்டுக்கு லிப்ஸ்டிக் பயன்படுத்துறதால இதழ்கள் ரஃப் ஆகிடும். இரவு அதை ரிமூவ் பண்ணிட்டு, லிப் பாம் அப்ளை பண்ணிக்குவேன். உதடுகளை ஹைட்ரேட் பண்றது அவசியம்.

ஃபவுண்டேஷன்

என் டஸ்க்கி ஸ்கின் காம்ப்ளெக்‌ஷனை கரெக்ட் செய்ய, ரெண்டு, மூணு ஃபவுண்டேஷன் மிக்ஸ் செய்து பயன்படுத்துறேன். லிக்விட் ஃபவுண்டேஷன்ல ‘Mac’, ‘Maybelline’, ஸ்டிக் ஃபவுண்டேஷன்ல ‘Kryolan stick’, ‘Derma stick’னு பயன்படுத்துறேன்.

Cosmetics - ‘உங்க மேக்கப் கிட்ல என்னவெல்லாம் இருக்கும்?’

மெளனிகா

‘`தீபிகா படுகோன் ஐபுரோஸ் எனக்கு ரொம்பப் பிடிக்கும்!”

விஜய் டி.வி ‘அவளும் நானும்’ சீரியலின் கதாநாயகி மெளனிகா, இரட்டை வேடத்தில் நடித்து ஸ்கோர் செய்துகொண்டிருக்கிறார்.

‘`நான் மாடலிங் பண்ணிட்டு சீரியலுக்குள்ளே நுழைஞ்சிருக்கேன். மேக்கப் இல்லாமல் என்னால் இருக்கவே முடியாது. என் மேக்கப் கிட்டில் நிறைய அயிட்டங்கள் இருந்தாலும், இந்த அஞ்சும்தான் என்  ஆல்டைம் தேவை.

ப்ரைமர்

நான் பயன்படுத்துறது ‘டெர்மா கலர்  D4 பேஸ் ப்ரைமர். என் முகத்தில் சில மார்க்ஸ் இருக்கும். இந்த ப்ரைமர், என் ஸ்கின் மாஸ்க்ஸை மறைச்சுடும். இது ரெகுலர் யூஸுக்கும் ஏற்றது. நான்கு மணி நேரம்வரை அழியாமல் இருக்கும்.

ஐ புரோ பேலட் 

‘மிஸ் க்ளேர் ஐபுரோ கேக்’ என்கிற ஐபுரோ பேலட்டை பயன்படுத்துறேன். எனக்கு பிராட் ஐபுரோஸ் பிடிக்கும். ஆரம்பத்தில் யூடியூப் பார்த்துப் புருவத்தை அடர்த்தியாக வரைய கத்துக்கிட்டேன். தீபிகா படுகோனுடைய ஐபுரோஸ் எனக்கு ரொம்பப் பிடிக்கும்.

காம்பேக்ட்

நேச்சுரல் லுக் கொடுக்கும் என்பதால், ‘Lakme Absolute Compact’ பவுடர் என் சாய்ஸ். இது சருமத்துடன் நல்லா செட்டாகி பர்ஃபெக்ட் லுக் கொடுக்கும்.

லிப்ஸ்டிக்

லிப்ஸ்டிக் சில நேரம் ரொம்ப ஹார்டா தெரியும். அதனால், பெரும்பாலும் நான் லிப் க்ளாஸ்தான் பயன்படுத்துவேன். ‘Lakme Absolute Plump and Shine’ லிப் க்ளாஸில், ரெட் அல்லது பிங்க் ஷேடு தேர்ந்தெடுப்பேன். இது நேச்சுரல் லுக் கொடுக்கும்.

மஸ்காரா

கண்கள் எடுப்பாகத் தெரிய செயற்கை ஐ லேஷஸ் கட்டாயமில்லை, மஸ்காரா பயன்படுத்தினால் போதும். ‘Revlon’ மஸ்காரா என் ஃபேவரைட். இது வாட்டர் புரூஃப். ஷூட்டிங் நாள்களில் காலை முதல் மாலை வரை அப்படியே இருக்கும்.

Cosmetics - ‘உங்க மேக்கப் கிட்ல என்னவெல்லாம் இருக்கும்?’

சரண்யா

‘`நான் ஒரு மஸ்காரா பைத்தியம்!”

விஜய் டி.வி ‘நெஞ்சம் மறப்பதில்லை’ சீரியலில் சரண்யா உடுத்திவரும் புடவைகளுக்கு ரசிகைகள் பலர். காஸ்ட்யூம் மட்டுமல்ல, காஸ்மெட்டிக் விஷயத்திலும் அவர் ஸ்மார்ட். அவர் பயன்படுத்தும் பெரும்பாலான காஸ்மெட்டிக்ஸ் லண்டனில்தான் கிடைக்குமாம்!

‘`பார்க்கிற காஸ்மெட்டிக்ஸை எல்லாம் வாங்கிக் குவிக்காமல், தேவையான ஒரு சில காஸ்மெட்டிக்ஸை மட்டும் காஸ்ட்லியாக வாங்கும் டைப் நான். சன் ஸ்க்ரீன், பாடி லோஷன், ஃபேஸ் வாஷ், பாடி வாஷ்னு எல்லாமே என் டாக்டர் பரிந்துரைப்பதைத்தான் வாங்குவேன். அவற்றில் ஃப்ராக்ரன்ஸ் அதிகம் இருக்காது. ஆனா, அதுதான் என் ஸ்கின்னுக்கு ஏற்றதாக இருக்கும். மேக்கப் போடுறதைவிட முக்கியமானது... அதை ரிமூவ் பண்ணுறது. தினமும் CTM (Cleansing Toning Moisturizing) பண்ணாம தூங்கப் போகக் கூடாது.

லிப் பாம்

லிப் பாம் இல்லாம என்னால இருக்கவே முடியாது. ‘Carmex’ லிப் பாம் பயன்படுத்துறேன். இது லண்டனிலிருந்து வாங்கிட்டு வர்ற பிராண்டு. ஷூட் இல்லாத நாள்களில், பசு நெய்யையும் நாட்டுச் சர்க்கரையையும் கலந்து உதட்டில் பூசுவேன்.

சன் ஸ்க்ரீன்

இண்டோர் ஷூட்டுக்கும் நான் சன் ஸ்க்ரீன் பயன்படுத்துவேன். ஏன்னா, ஷூட்டில் பயன்படுத்துற லைட்டுகளில் UV கதிர்கள் இருக்கும். அது நேரடியா சருமத்தைப் பாதிக்கும். எனக்கு ஆய்லி ஸ்கின் என்பதால், ஜெல் டைப் சன் ஸ்க்ரீன் பயன்படுத்துறேன். என் டாக்டர் பரிந்துரைத்த ‘Sebamed Sun Care’ சன் ஸ்க்ரீன், ரியலி குட்.

ஐ புரோ பேலட்

த்ரெடிங் பண்ணாமலேயே என் ஐபுரோவை என்னால் ஷேப்பாக வரைந்துகொள்ள முடியும். பொட்டு வைக்கிற இடத்திலிருந்து கண் முடியும் இடம்வரை அதை வரையணும். அப்போ கண்ணும் புருவமும் நேர்த்தியான அழகுடன் இருக்கும். நான் பயன்படுத்துறது ‘Sivanna Colors’ பிராண்டு.

பெர்ஃப்யூம்

பெர்ஃப்யூம் என்னை நல்ல மூட்ல வெச்சிருக்கும். எந்த நாட்டுக்குப் போனாலும் பெர்ஃப்யூம் வாங்கிடுவேன். அதை டிரஸ்ஸில் ஸ்பிரே பண்ண மாட்டேன், மணிக்கட்டிலும் கழுத்துப் பகுதியிலும் மட்டும் ஸ்பிரே பண்ணிப்பேன். ‘Versace’, ‘Lady Million’... இப்போ என் வார்ட்ரோபில் இருக்கும் பெர்ஃப்யூம்கள் இவைதான்.

மஸ்காரா

நான் ஒரு மஸ்காரா பைத்தியம். ஐ மேக்கப்கூட தேவையில்லை; மஸ்காரா மட்டும் போதும் எனக்கு. என் கையில் எப்போதும் இருக்கும் மேக்கப் கிட்டில் இது நிச்சயம் இருக்கும். ‘The Body Shop’ பிராண்டு மஸ்காராதான் இப்போ பயன்படுத்துறேன்.

- வெ. வித்யா காயத்ரி

படம் :   ப.சரவணகுமார்