Published:Updated:

டெஸ்டினேஷன் வெடிங்

டெஸ்டினேஷன் வெடிங்
News
டெஸ்டினேஷன் வெடிங்

நியூ ஐடியாலோக்மணி

திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகிறதோ இல்லையோ, திருமண நிகழ்ச்சிகள் சொர்க்கத்தில் நடப்பதுபோன்ற கோலாகலத்தோடு நடத்தப்படுகின்றன. அதில் லேட்டஸ்ட் விஷயம், டெஸ்டினேஷன் வெடிங். தொடர்ந்து பல நாடுகளுக்குப் பறந்து சென்று டெஸ்டினேஷன் வெடிங் நிகழ்ச்சிகளாக வளைத்து வளைத்துப் படம் பிடித்துவரும் சென்னையைச் சேர்ந்த ஃபோகஸ் ஸ்டுடியோவின் உரிமையாளர் சந்துரு பாரதி, தன் அனுபவங்களைப் பகிர்கிறார்...

டெஸ்டினேஷன் வெடிங்

“சொந்த ஊருல மண்டபங்கள்ல நடக்கும் திருமணத்துக்கும், டெஸ்டினேஷன் வெடிங்குக்கும் நிறைய வித்தியாசம் இருக்கு. இது கிட்டத்தட்ட ஒட்டுமொத்த உறவினர்களோடு ஒரு ஜாலி ட்ரிப் போனா எப்படி இருக்குமோ, அந்த மாதிரியான அனுபவத்தைக் கொடுக்கும். வழக்கமான திருமணங்களில் இருக்கும் படப்படப்பு எதுவும் இல்லாத `டென்ஷன் ஃப்ரீ திருமணம்’னு சொல்லலாம். அதனாலதான் டெஸ்டினேஷன் வெடிங் எனக்கு சம்திங் ஸ்பெஷலா ஆகிடுச்சு” எனும் சந்துரு டெஸ்டினேஷன் வெடிங் பற்றி மேலும் விளக்க ஆரம்பித்தார்...

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
டெஸ்டினேஷன் வெடிங்

“சந்தோஷம், பிரிவு, காதல், ஆட்டம், பாட்டம்னு உணர்வுகளின் சங்கமமாக இருப்பது திருமணம். இதைப் புதிய ஊரில், இயற்்கைச் சூழலில், திறந்தவெளியில் என்று வித்தியாசமாக நடத்தும்போது எவ்வளவு பயணக் களைப்பு இருந்தாலும் புத்துணர்வு பூத்துவிடும். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள், அலங்காரங்கள் என எல்லாமே வழக்கமான திருமணத்திலிருந்து வேறுபட்டிருக்கும். அதை கேமரா கண்களால் க்ளிக் செய்யும்போது இன்னும் ரம்மியமா இருக்கும்.

மேற்கு வங்கம், கேரளா, இலங்கை, சிங்கப்பூர், லண்டன், பாரிஸ்னு நிறைய இடங்களுக்குப் போய் வொர்க் பண்ணியிருக்கேன். ஒவ்வோர் இடத்துலயும் புதுப்புது அனுபவம்!

டெஸ்டினேஷன் வெடிங்கை கவர் செய்றது சந்தோஷமான வேலை என்றாலும், கொஞ்சம் சவால்கள் நிறைந்ததாகத்தான் இருக்கு. ஏன்னா, பெரும்பாலான நிகழ்வுகள் மாலை நேரத்துல, அதுவும் அவுட்டோர்லதான் இருக்கும். அதுக்கேற்ற மாதிரி லைட்டிங் தயார் செய்றதுல தொடங்கி, பல டெக்னிக்குகளை யூஸ் பண்ணி பிரைட்டா காட்டுறதுன்னு ஒவ்வொரு ஃப்ரேமும் சவால்தான்.

டெஸ்டினேஷன் வெடிங்

இன்னொரு பிரச்னை மழையும் வெயிலும்தான். நாம போற இடத்தில் எப்போ மழை பெய்யும், எப்போ வெயில் அடிக்கும்னே தெரியாது. எப்படிப்பட்ட சூழ்நிலையிலும், டென்ஷன் ஆகாம அடுத்து என்ன செய்யணும்னு எப்பவும் அலர்ட்டா இருக்கணும். எல்லா சூழல்லயும் மணமக்களை அழகா காட்டுறதுலதான் நம்ம திறமை இருக்கு.

திருமணம் நடக்க இருக்கிற இடத்துக்கு ரெண்டு நாள் முன்னாடியே போய், லோகேஷனைப் பார்த்துக்குவோம். சின்னத் தவறு நடந்தாகூட மொத்தமும் சொதப்பிடுமே... அதனால மணமக்களின் உடை, அலங்காரம், திருமணம் நடக்க இருக்கும் இடத்தின் அலங்காரம்னு எல்லாத்தையும் பார்த்ததுக்கு அப்புறம்தான் களத்துலயே இறங்குவோம். தேவையோ, தேவையில்லையோ எல்லா எக்யூப்மென்ட்டுகளும் கைவசம் இருக்கிற மாதிரி முன்னேற்பாடா போகணும். அப்பதான் டென்ஷனே இல்லாம ஜாய்ஃபுல்லா வேலை பார்க்கலாம். 

டெஸ்டினேஷன் வெடிங்

இந்த மாதிரி திருமண நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வது பெரும்பாலும் மணமக்களின் நெருக்கமான சொந்தங்கள் மற்றும் நண்பர்களாகத்தான் இருப்பாங்க. அதனால நிகழ்ச்சி சூப்பரா களைகட்டும். போட்டோக்களும் கலர்ஃபுல்லா எடுக்கலாம்” என்கிறவரின் அண்மைக்கால அசைன்மென்டுகள் இரண்டுமே ஃபென்டாஸ்டிக்!

டெஸ்டினேஷன் வெடிங்
டெஸ்டினேஷன் வெடிங்

“இலங்கையைச் சேர்ந்த மயூரி-சுஜிவன் தம்பதி, அவங்க திருமணத்தை லண்டன்ல ப்ளான் பண்ணியிருந்தாங்க. நாலு நாள் முன்னாடியே நாங்க லண்டன் போய் இறங்கிட்டோம். நாலு நாள்களா சரியான தூக்கமே இல்லாம, அங்கேயிருக்கும் முக்கிய இடங்கள்ல போட்டோ ஷூட் செஞ்சோம். படங்கள் செமையா வந்துச்சு!

டெஸ்டினேஷன் வெடிங்
டெஸ்டினேஷன் வெடிங்

இதேமாதிரி ஆஸ்திரேலியாவுல இருந்துவந்த அனுபவ்-சுவாதி தம்பதி, வெஸ்ட் பெங்கால்ல ஒரு மலைக்கு நடுவுல இருக்கும் ரிசார்ட்ல திருமணத்தை ப்ளான் பண்ணியிருந்தாங்க. மாலை நேரத் திருமணம் என்பதால மலையின் பிரமாண்டத்தைக் காண்பிக்க லைட்டிங் இல்லாம சிரமப்பட்டோம். அதுக்கப்புறம்தான் ஏரியல் ஷாட், ஹெலிகாப்டர் ஷாட்னு புதுசுபுதுசா ட்ரை பண்ணினோம். ஆல்பம், வேற லெவல்ல இருந்துச்சு. மணமக்களும் செம ஹேப்பி!

டெஸ்டினேஷன் வெடிங்

வழக்கமான திருமணங்களின் ப்ளஸ் மைனஸைத் தாண்டி, டெஸ்டினேஷன் வெடிங்கில் மைனஸ் எல்லாமே ப்ளஸ்ஸா மாறிடும். ஏன்னா, எப்போதுமே புது இடத்துக்கு போறது மனதுக்கு உற்சாகத்தைத் தரும். மனதுக்கு நெருக்கமான உறவுகளோடு போகும்போது அது ஒரு பிரமாண்டமான கொண்டாட்டம்தானே? அதுதான் டெஸ்டினேஷன் வெடிங்கின் சிறப்பு!” என சிரிக்கிறார் சந்துரு பாரதி.