Published:Updated:

DJ - இசை ஜோடிகள்

DJ - இசை ஜோடிகள்
பிரீமியம் ஸ்டோரி
News
DJ - இசை ஜோடிகள்

நியூ ஐடியா

 `பியார்... பிரேமா...காதல்...’ என உலக மொழிகளில் இருக்கும் அத்தனை லவ்வோடு கொஞ்சம் மியூசிக் சேர்த்த ‘டி.ஜெ’-க்களாக கலக்குகிறார்கள் தீபிகா - நவீன் ஜோடி. இருவரும் இணைந்து பார்ட்டி, வெடிங் என பிரமாண்ட குடும்ப விழாக்களை ஹார்ட்டும் பீட்டுமாகத் தெறிக்க விடுகிறார்கள்.  இன்றைய தேதியில் `இந்தியாவின் ஒரே ‘டி.ஜெ’ தம்பதி’ என்ற பெருமைக்குச் சொந்தக்காரர்கள் இவர்கள். இந்த ஜோடி ஒருங்கிணைத்த ‘டி.ஜெ நைட்’ நிகழ்ச்சிக்கு அண்மையில் சென்றிருந்தேன். உற்சாக பானம் இல்லாத 100% உற்சாகம் மட்டுமே நிறைந்து வழியும் ‘டி.ஜெ’ நைட் அது. ஆறிலிருந்து அறுபது வயதுவரை ஒரு கூட்டமே இவர்களின் விரல் தேய்ப்புக்கு மகுடிக்கு ஆடும் பாம்பென நடனமாடுவதைக் கண்டேன்.

DJ - இசை ஜோடிகள்

நிகழ்ச்சி முடிந்ததும் அவர்களைச் சந்தித்து மனதில் எழுந்த கேள்விகளை முன்வைத்தேன்... மடைதிறந்த வெள்ளமாக முதலில் பதில்களைக் கொட்டியது தீபிகாதான்!

கங்கிராட்ஸ்! இப்படி வெளுத்துவாங்குறீங்களே... உங்க  இன்ஸ்பிரேஷன் யாரு? எத்தனை வருஷமா இந்தத் துறையில இருக்கீங்க?

என் மிகப்பெரிய இன்ஸ்பிரேஷன் என் கணவர்தான். ஒன்பது வருஷமா இந்தத் துறையில பட்டையக் கிளப்பிட்டிருக்காரு. அவர்தான் என் குரு. அவருகிட்ட கத்துக்கிட்டு, நான் ரெண்டு வருஷமா இந்தத் துறையில இருக்கேன். சமீபத்துல நடந்த `மியூசிக் அவார்ட்ஸ் 2018’ல, `பெஸ்ட் கப்புள் டி.ஜெ’ விருது வாங்கியதில் ரொம்பப் பெருமை!

கணவன் மனைவி ரெண்டு பேருமே ஒரே துறையில் இருக்கீங்க. குடும்பம், வேலை ரெண்டையும் எப்படிச் சமாளிக்கிறீங்க?

வெளியிலேயிருந்து பார்க்கிறதுக்கு, `ஜாலியா இருக்காங்க, ஒண்ணா ஊர் சுத்துறாங்க’னு தோணும். ஆனா, வேலை காரணமாக ஒரு ரிலேஷன்ஷிப் உடையுறதுக்கும் நிறைய வாய்ப்பு இருக்கு. அதனால, வேலையிலயும் சரி, வீட்லயும் சரி... நாங்க முதல்ல எங்க பங்கு என்னன்னு முடிவெடுத்திடுவோம். எங்களுக்குள்ள இருக்கிற காதல், புரிதல், மரியாதை... அப்புறம் எங்க குடும்பத்தினரின் ஆதரவு... இதெல்லாம்தான் இந்த அமைதியான வாழ்க்கைக்குக் காரணம். நாம விரும்பிய பொண்ணு நம்ம கூடவே இருக்கிறப்போ எல்லாமே பாசிட்டிவ்தானே? உண்மையைச் சொல்லணும்னா நாங்க கப்புள் DJ ஆனதுக்குக் காரணம், தீபிகாதான். `நானும் DJ-ing பண்றதுபோல இருந்தா, சேர்ந்தே பண்ணலாம்’னு சொன்னது அவங்கதான். எனக்கு தீபிகா கிடைச்சதுக்கு நான் ரொம்பவே கொடுத்து வெச்சிருக்கணும்.

இந்தத் துறைல பெண்கள் அதிகம் இல்லாததுக்குக் காரணம் என்ன?

பாதுகாப்புதான். DJ-ங்கிறது பார்ட்டி, க்ளப்னு பொதுவா மது பயன்படுத்துற இடத்துலதான் அதிகமா இருக்கும். இதுக்கு பெண்கள் பயப்படாம இருப்பாங்களா சொல்லுங்க. ஆனா, இப்போ திருமணம் போன்ற குடும்ப விழாக்களுக்கும் எங்களை இன்வைட் பண்றாங்க.  

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
DJ - இசை ஜோடிகள்

இது நிச்சயம் வித்தியாசமான உணர்வு களைக் கொடுக்குது. ஏன்னா, பப்ல மதுபாட்டில் செட்டிங்ஸ்ல, டீனேஜ் பொண்ணுங்க, பசங்க சந்தோஷமா மியூசிக்கு ஏற்றதுபோல ஆடுறதைப் பார்த்துட்டிருந்த எங்களுக்கு, பன்னீர்வாசம் வீச, ஒரு குடும்பமா சின்னப் பசங்கள்ல இருந்து வயசானவங்க வரைக்கும் சந்தோஷமா ஆடுறதைப் பார்க்கிறதே தனி ஃபீல்தான்.

DJ - இசை ஜோடிகள்இதுமூலமா, எங்களோட துறை கலர்ஃபுல் லைட்ஸ்ல மட்டும்தான் வேலைசெய்யும்கிற `ஸ்டீரியோ டைப்’ப உடைச்சிருக்கு. இனி, பெண்களை இந்தத் துறையிலயும் அதிகம் பார்க்கலாம்!

உங்கள் குடும்பத்தின் ஆதரவு?

என் கணவர்கூடவே இருக்கேன். இதைவிட வேற என்ன வேணும்? என் மாமியார் எனக்கு இன்னொரு அம்மா. குடும்பத்துல எல்லோருமே ரொம்ப சப்போர்ட் பண்றாங்க. இவங்க ஒத்துழைப்பு இல்லைன்னா, என்னால எதுவுமே பண்ணிருக்க முடியாது.

வருங்காலத் திட்டம் என்ன?


உலகம் முழுக்க DJ-ing பண்ணணும். நாங்க தனித்து நிக்கணும். மது இருக்கிற இடத்துலதான் DJs இருப்பாங்கன்னு சொல்றதை, முழுசா உடைக்கணும். இதுதான் என் ஆசை.

அமைதியாக இருந்த நவீனிடம் கேள்விகளைக் கேட்டேன்...

DJ ஆகணும்னு உங்களுக்கு ஏன் தோணுச்சு?

என் அம்மா ஏர் இந்தியாவுல விமானப் பணிப்பெண்ணா வேலை செஞ்சாங்க. அதனால, சின்ன வயசுல நிறைய பார்ட்டிக்கு என்னையும் கூட்டிட்டுப் போவாங்க. அங்கே என்னை ரொம்பவே கவர்ந்தது DJதான். அவ்ளோ பெரிய கூட்டத்தை ஒரு தனி ஆளா சமாளிச்சு எல்லோரையும் சந்தோஷமா ஆட வெச்சிட்டு இருப்பார். `சூப்பரா இருக்கே!’னு ரொம்ப பிரமிப்பா பார்த்துட்டிருப்பேன். ஸ்கூல் முடிச்சுட்டு காலேஜ் சேர்ந்ததும். ஏதாவது இசைக்கருவி கத்துக்கலாம்னு தோணுச்சு. ஆனா, அந்த அளவுக்குப் பொறுமை இல்லை. சரி பேசாம DJ பண்ணலாம்னு முடிவு பண்ணி, அதை முறைப்படி கத்துக்கவும் செஞ்சேன். அம்மாவோட சப்போர்ட் இல்லைன்னா நிச்சயம் இந்தத் துறையில வந்திருக்க மாட்டேன். பெஸ்ட் DJ-ing கருவிகளை அம்மாதான் வாங்கிக்கொடுத்தாங்க. நிறைய போட்டிகள்ல கலந்துக்கிட்டு, ஏகப்பட்ட பரிசுகளையும் ஜெயிச்சிருக்கேன்.

மறக்க முடியாத அனுபவம் ஏதாவது..?


புதுச்சேரி பிரின்ஸ் காலேஜ்ல முதன்முதலா 3,000 கல்லூரி மாணவர்கள் முன்னாடி DJ-ing பண்ணினோம். எல்லார்கிட்டயும் செம எனர்ஜி லெவல். குடிச்சுட்டு ஆடினாத்தான் DJ-ing-ங்கிற கான்செப்ட்டை உடைச்சது, அங்கேதான். நான் தனியா நிறைய கல்லூரிகள்ல DJ Nights பண்ணியிருக்கேன். ஆனா, தீபிகாகூட சேர்ந்து பண்ணின முதல் காலேஜ் DJ நிகழ்ச்சி அதுதான்” என்று, மலரும் நினைவுகளில் மூழ்கிவிட்டார் நவீன்.

முழுக்கமுழுக்க பாசிட்டிவ் எனர்ஜி நிறைந்த அந்த இடத்தைவிட்டு பிரிய மனமில்லாமல் விடைபெற்றேன்.

கானப்ரியா