Published:Updated:

டெக் திருமணங்கள்!

டெக் திருமணங்கள்!
பிரீமியம் ஸ்டோரி
News
டெக் திருமணங்கள்!

நியூ ஐடியாபடம்: ஃபோகஸ் ஸ்டுடியோ

டெக் திருமணங்கள்!

ம்மி மிதித்து அருந்ததி பார்த்துப் பண்ணும் கல்யாணமெல்லாம் அந்தக் காலம். மேட்ரிமோனியில் பார்த்து ஸ்கைப்பில் பேசி முடிவாகும் கல்யாணம் எனும் நிலை வந்து சில ஆண்டுகள் ஆகிவிட்டன.

இந்தத்  தொழில்நுட்ப உலகின் ஓட்டத்துடன் நிகழும் நிகழ்ச்சிகளின் தன்மையும் மாறத்தானே செய்யும்? அதுதான் உலக நியதி. திருமண நிகழ்ச்சிகளும் தொழில்நுட்பத்தின் மூலம் தன் புது உருவை ஏற்றுக்கொண்டிருக்கிறது. திருமணம் என்பது வாழ்வில் ஒருமுறை ஒருநாள் மட்டும் நடக்கும் நிகழ்ச்சியே. ஆனால், அது வாழ்க்கை முழுவதும் அசைபோடும் இனிய நினைவு. ­அதனால், அந்நாளை மிகவும் ரசித்து அனுபவிக்கவும் அந்த நிகழ்ச்சிகளைப் படங்களாகப் பதிவு செய்து வைக்கவும் எல்லோரும் விரும்புவர். அதற்கு இந்தத் தொழில்நுட்ப வளர்ச்சிப் பெரும் உதவி கரம் நீட்டுகிறது. ஏற்பாடுகளில் தொடங்கி விருந்தினருக்கு விருந்தளித்து, நினைவுப் பரிசுகள் வழங்குவது வரை அனைத்துக்கும் நம் டெக் நண்பன் ஐடியாக்கள் கொடுக்கிறான்.

டெக் திருமணங்கள்!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

வெட்டிங் வெப்சைட்

இன்றைய காலத்தில் எதையும் இணையத்தில் தேடும் வழக்கம் இருந்துவருகிறது. அதில் திருமணப் பத்திரிகைகளும்  சேர்ந்துவிட்டன. நேரில் சென்று பத்திரிகை வைத்துவந்தாலும், விருந்தினருக்கு நினைவூட்டவும் நிகழ்ச்சி நடக்கும் இடம், அதற்கான வழி ஆகியவற்றுக்கு உதவும் வகையிலும் இந்த இணைதளங்கள் உதவும். `கோ டாடி’ போன்ற தளங்களில் மணமக்கள் பெயரில் தளம் ஒன்று தொடங்கி அதில் திருமண நாள், நிகழ்ச்சி நிரல், மண்டபம், அதற்குச் செல்லும் வழித்தடங்கள் அனைத்தையும் அப்டேட் செய்யலாம். அந்த இணைய முகவரிகளை வாட்ஸ் அப் மூலமாகவும் சமூக வலைதளங்கள் மூலமாகவும் பகிரலாம். நிகழ்ச்சிகள் நடக்க நடக்க அதன் அப்டேட்களையும் பதிவேற்றலாம்.

ஹேஷ்டேக்

திருமணம் என்றால் புகைப்படங் களுக்கும் செல்ஃபிகளுக்கும் குரூப்பீக் களுக்கும் பஞ்சமே கிடையாது. அதை ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் எனப் பகிர்தலும் இன்ஸ்டன்ட் செயல்பாடு. அப்படி பகிரப்படும் படங்களைத் தொகுத்து நாம் எடுத்துக்கொள்வதற்கு உதவி செய்கிறது ஹேஷ்டேக். மணமக்களின் பெயர்களை வைத்து எளிமையான ஒரு ஹேஷ்டாக்   உருவாக்கி, அதை விருந்தினர்களுக்குத்  தெரிவித்துவிட்டால் பகிரும் எல்லாப் படங்களும் நம் ஹேஷ்டேக்கோடு  வரும். ஆல்பத்துக்கும் அடிஷனல் ஷீட் போடும். அந்த ஹேஷ்டேக் டிரெண்டும் ஆகிவிட்டால் கூடுதல் மகிழ்ச்சிதான்!

டிரோன் படங்கள்


விருந்தினர்களைச் சிலை போல நிற்க வைத்து மரம் போல எடுக்கும் காலம் மாறி வருகிறது. இயல்பான படங்களே பிரபலமாகி வருகின்றன. அதன் வரிசையில் அடுத்து வருவது டிரோன் படங்கள். பறக்கும் கேமராக்கள் வைத்து, உயர்ந்த கோணத்தில் இருந்து படங்கள் எடுக்கும் முறை இது. இயல்பாக உறவினர்கள் வந்து பேசும் வாழ்த்தும் நிகழ்ச்சிகளை இதன் மூலம் பதிவு செய்யலாம். இப்போது திருமணங்களில் அதிக அளவில் ஹெலி கேமராக்கள் பறப்பதைக் காணலாம். இப்படியான படங்கள் திருமணத்தைப் புதிய கோணத்தில் நமக்குக் காட்டும்.

ரோபோ கேமரா

வரவேற்பு முகப்பிலோ, உறவினர்கள் கூடி நிற்கும் இடத்திலோ வீடியோ அல்லது படம் எடுக்க நாள் முழுக்க ஒரு நபர் நிற்பது சிரமமான விஷயம். அதற்கு நம் டெக் நண்பன் கூறும் வழி ரோபோ கேமராக்கள். ரோபோவை ஒரு லேப்டாப் அல்லது ஐபாட் உடன் இணைத்துவிட்டால் அது எல்லாவற்றையும் பதிந்துகொள்ளும். பின்னர் அதைப்  பிரித்து எடுத்துக்கொள்ளலாம். ரோபோ இருப்பது விருந்தினர்களையும் ஈர்க்கும்; குதூகலமும் கூடும்.

டெக் திருமணங்கள்!

மறை மாயங்கள்

கேண்டிடையும் தாண்டிய ஓர் உணர்ச்சி உள்நோக்கி ஒன்றுண்டு. அதுதான் ஹிட்டன் கேமராக்கள். ‘கோ ப்ரோ’ போன்ற சிறிய கையடக்கக் கேமராக்களை மலர் அலங்காரங்களில் இடையிலோ, மலர்ச்செண்டின் நடுவிலோ செருகி வைத்து அதன் வழியே மாற்றுக் கோணத்தில் படம் பிடிப்பது. இது மணமேடையின்  அருகில் இருந்து அவர்களின் உணர்வுகளைப் பதியவும் அவர்கள் நிலையில் இருந்து விருந்தினர்களைக் காணவும் வழி செய்யும்.

லப்-டப் மேப்

வாழ்வில் முக்கிய கட்டம் திருமணம். அந்தத் தருணத்தில் மணமக்களில் இதயத்துடிப்பு என்பது இமயமலை உயரத்தையே தாண்டி எகிறும். அதை பிற்காலத்தில் எடுத்துப் பார்த்தால் மகிழ்ச்சி ததும்பும். அதற்கு ஃபிட் பிட் பேண்ட்கள், ஆப்பிள் வாட்ச்சுகள் உதவுகின்றன. இதன்மூலம் அந்த நாளின் தொடக்கத்திலிருந்து பயணிக்கும் தூரம், இதயத்துடிப்பு உள்ளிட்டவற்றை மேப் போல போட்டு சேமித்து வைக்கும். அதையும் ஆல்பத்தில் சேர்த்து வைக்கலாம். ஒவ்வொரு திருமண நாளிலும் எடுத்துப் பார்த்து, இனிய நினைவுகளில் திளைக்கலாம்.

புரொஜெக்‌ஷன் மோதிரம்

திருமண வரவேற்பின்போது மணமக்களின் புகைப்படங்களைப் புரொஜெக்ட் செய்வது இப்போது இயல்பாகி விட்டது. இப்போது அதன் அடுத்த நிலை. திருமண மோதிரத்திலேயே அவர்களது புகைப்படத்தைப் பதித்து அதன் எதிர்புறம் உள்ள லென்ஸ் வழி ஒளியைச் செலுத்தி படங்களை புரொஜெக்ட் செய்யலாம். இதுபோலவே மணமக்களில் பெயர் ஒலிக்கும் மோதிரம், `வில் யு மேரி மீ?’ என்று ஒலிக்கும் மோதிரம் எனப் பல வெரைட்டிகளை நமக்கு தருகின்றனர் இணைய வியாபாரிகள்.

புரொஜெக்‌ஷன் கேக்

திருமணத்தின்போது கேக் வெட்டுவோம். அதை மேலும் சிறப்பாக்கும் வகையில் புரொஜெக்‌ஷன் செய்யலாம். டிஸ்னி தொடங்கிய இந்த வசதியை இன்று பல இணையதளங்கள் தந்துகொண்டிருக்கின்றன. கேக்கின் வடிவத்துக்கேற்ற வகையில் மணமக்களில் படங்களைக் கொண்ட ஒளிப்படங்கள், பாடல்கள் என அதில் குறும்பான குறும்படங்களை இயக்கலாம்!

நேரலைத் திருமணம்

நீண்ட தூரத்தில் இருப்பவர்கள், திருமணத்துக்கு வர முடியாதவர்கள் திருமணத்தைக் காண ஸ்கைப், கூகுள் ஹாங் அவுட், யு ஸ்ட்ரீம் உள்ளிட்ட தளங்கள் மேடை அமைத்துக் கொடுக்கின்றன. அதற்கென தனி ஆள் ஏற்பாடு செய்து நிகழ்ச்சிகளை நேரலையில் காட்டலாம்.

எனெர்ஜி ஊட்டிகள்

ஃபேஸ்புக் லைவ் விரும்பிகள், செல்ஃபி ப்ரியர்களுக்கு சார்ஜ் தீருவது ஒரு பெரும் பிரச்னையாகவே இருக்கும். அதற்காக சார்ஜிங் ஹப் ஒன்று ஏற்படுத்தலாம். நம் போன்களுக்குப் பொதுவாக நான்கு பின்கள்தான் வரும். அதனால் அந்தப் பின்கள் கொண்ட சார்ஜர்களை நிகழ்ச்சி நடக்கும் இடத்தின் ஒரு பகுதியில் அமைக்கலாம். 10 செல்ஃபி ஸ்டிக்களைக் கூட வைக்கலாம்.

மினி மீ

இன்று வளர்ந்துவரும் ஒரு தொழில்நுட்பம் 3டி பிரின்டிங். திருமண கேக்கின் மேல் மணமக்களில் உருவம் 3டி பிரின்டிங் மூலம் செய்து வைக்கலாம். அதுகூடவே வரும் விருந்தாளிகளின் உருவங்களையும் உடனே பிரின்ட் செய்து தரும் வகையில் நிகழ்ச்சியின் ஓர் அங்கமாக 3டி அரங்கம் ஒன்று ஏற்படுத்தலாம். குழந்தைகளுக்கும் குதூகலம் கூடும்.

ஸ்மார்ட் ஸ்பாட்

இன்றைய காலத்தில் அந்தரத்தில், ஆழ்கடலில், அடர்வனத்தில் என்று கற்பனைக்கே எட்டாத இடங்களிலும் திருமணங்கள் நடைபெறுகின்றன. அதேபோல ஓட்டுநர்  இல்லா வாகனங்கள் இப்போது பரவி வருகின்றன. அந்த வாகனங்களிலும் திருமணம் நடத்தலாம்.

வாழ்வின் நெகிழ்வான ஒரு நிகழ்ச்சியின் ஒவ்வோர் உணர்வுகளையும்  நம்  டெக் நண்பன் பதியவைத்து இப்படிப் பல பரிமாணங்களில் நமக்குப் பரிசாகத் தருவான். டெக் கல்யாணத்துக்கு ஆயிரம் தம்ஸ் அப்கள்!

கோ.ப.இலக்கியா,
படங்கள்: கே.மனோஜ்குமார்