Published:Updated:

சங்கீத்!

சங்கீத்!
பிரீமியம் ஸ்டோரி
News
சங்கீத்!

சங்கீத்!

ணமகளையும் மணமகனையும் டயர்டாக்கி டயர்டாக்கி ரெஸ்ட் எடுக்கவைக்கும் திருமணச் சம்பிரதாயங்கள் கொண்டதுதான் வடநாட்டுத் திருமணங்கள். இவை பொதுவாக 10 நாள்களுக்கு நீள்கின்றன. அதில் `சங்கீத்’ மிகப் பிரசித்தம். திருமண நாளுக்கு இரண்டு அல்லது மூன்று நாள்களுக்கு முன்பாக, அலங்கரிக்கப்பட்ட இடத்தில் மணமக்களின் உறவினர்கள் ஒன்றுகூடி ஆடுவதும் பாடுவதும் வழக்கம். இரண்டு குடும்பங்களுக்கும் இடையிலான அந்நியத்தன்மையை விலக்கி, ஒன்றுபடுத்துவதுதான் `சங்கீத்’ நிகழ்ச்சியின் நோக்கம். இப்போ நம்ம ஊருக்கும் வந்தாச்சு சங்கீத்!

சங்கீத்!

``தமிழ்நாட்டுக்கு இறக்குமதியாகியிருக்கும் சங்கீத் நிகழ்வு, இங்கு இருக்கும் பண்பாட்டோடு இணைந்து நடத்தப்படுகிறது. நடனங்களை முறையாக, விஷுவல் ட்ரீட்டாக மாற்றித்தருவதுதான் சங்கீத் கோரியோகிராபர்களின் வேலை. இப்போதைய ட்ரெண்ட்டுக்கு ஏற்ப சங்கீத் நிகழ்ச்சிகளை அழகாக முறைப்படுத்துவதால், இது இப்போது ஒரு புரொஃபஷனாக மிளிர்கிறது’’ என்கிறார் சங்கீத் கோரியோகிராபர் நந்தா.

சங்கீத் கோரியோகிராபியை நந்தா தேர்ந்தெடுத்த பின்னணி என்ன?

``எனக்கு டான்ஸ் மேலதான் காதல். ஈவென்ட்ஸ், சினிமா... இப்படியான துறைகள் மட்டும்தான் டான்ஸுக்கானது இல்லைன்னு புரிஞ்சது. நம்ம ஜொலிக்கிற இடம், சினிமா, டெலிவிஷன்தான். ஆனாலும், இப்போ ட்ரெண்டிங்ல இருக்கிற இந்த சங்கீத் கோரியோகிராபியைப் பொறுத்தவரைக்கும், வாடிக்கையாளர்களான மணமக்களுக்கும், டான்ஸ் கோரியோகிராபர்ஸுக்கும் மனசுக்கு திருப்தியான வேலைதான். எல்லோருக்குமே தங்களுடைய திருமணம் என்பது ஸ்பெஷல்தானே? தன்னையும் தன் திருமணத்தையும் கொண்டாடுற இந்த புதிய ட்ரெண்ட் ரொம்ப நல்ல விஷயம்” என்கிறார் நந்தா.

``லைட் மியூசிக் ட்ரூப் வரவழைத்து, ஜோராக நடக்கும் தமிழ்நாட்டுத் திருமணங்கள் ஞாபகமிருக்கா?’’ என்றார் நந்தா. `ஆமாம்’ எனப் புன்னகைத்ததும், அதனுடன் இணைத்து சங்கீத் கோரியோகிராபியை விளக்கினார். ``ஏதோ ஒரு பாட்டு பாடி, டான்ஸே தெரியாத மணமக்களை ஆடவெச்சு அவங்களுக்குத் தயக்கத்தை உண்டுபண்ணி சிரிப்போமே? இது டோட்டலா வேற கான்செப்ட். மணமக்களைச் சந்திக்கும்போதே அவங்களுடைய விருப்பம், தயக்கம் எல்லாம் புரிஞ்சிடும். அவங்களுடைய எனர்ஜி லெவல் தெரிஞ்சுக்குவோம். அதுக்கப்புறம் அவங்களுக்கும் குடும்பத்தினருக்கும் சேர்த்தே டான்ஸ் ஸ்டெப்ஸ் கம்போஸ் பண்ணி பிராக்டீஸ் கொடுப்போம். வசதிக்கு ஏத்த மாதிரி, மணமக்களோட இடமோ, எங்களுடைய பிராக்டீஸ் ஹாலோ தேர்வுபண்ணிக்கிட்டு, பிராக்டீஸ் பண்ணவைப்போம்” என்று தனது உத்திகளைச் சொன்னார் நந்தா.

``ஆடப்போகிற சூழலையும் பாடல்களையும் மணமக்கள் தேர்ந்தெடுப்பாங்களா?’’ என்றோம். சிரித்துவிட்டு, ``அவங்களுக்கும் பிடிக்கிற மாதிரியான பாடல்களோடுதான் தொடங்குவோம். அரேஞ்சுடு மேரேஜ், லவ் மேரேஜ் பொறுத்தும் அவங்களுடைய கெமிஸ்ட்ரி இருக்கும். மணமக்கள் மட்டுமில்லாம, மணமக்களுடைய உறவினர்கள், நண்பர்கள் எல்லாருமே, இந்த டான்ஸ் பிராக்டீஸ் முடிக்கும்போது, ஒரே குடும்பமா ஒரு கம்ஃபர்ட்டை உணர ஆரம்பிச்சிருவாங்க. அதுதான் எங்களுடைய முதல் குறிக்கோளா இருக்கும்” என்கிறார் நந்தா.

``சங்கீத் நடனம், ரொம்ப அழகா, முழுமையா வரணும்னா என்ன டிப்ஸ் கொடுப்பீங்க நந்தா?’’


``சங்கீத் நடனங்களுக்கு தீம் ரொம்ப முக்கியம். சினிமாட்டிக்கான ஆசைகளுக்கும், இந்த தீம் சங்கீத் நல்லா இருக்கும். கிரிக்கெட் டீம்ஸ் சண்டைபோட்டு திரும்ப ஒண்ணுசேர்ந்து மகிழ்ச்சியாகிற மாதிரி, ஒரு கான்செப்ட், மணமக்களே லைஃப் டிப்ஸ் கொடுக்கிற மாதிரியான கான்செப்ட்னு நிறைய ட்ரெண்டிங் கான்செப்ட்ஸ் வெச்சு கோரியோகிராபி பண்ணுவோம். அதனால, மணமக்கள் கனவு கண்ட அவங்களுடைய கல்யாணத்துக்கு, சங்கீத் ஒரு கிரீடம் மாதிரி இருக்கும். சங்கீத் வீடியோ, வாழ்க்கை முழுக்க அவங்களுக்கான பரிசா இருக்கும்” என்றார் நந்தா.

மனங்கள் இசையட்டும்!

குணவதி - படங்கள்: ஸ்டூடியோ வைபவா, பெங்களூரு

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz