Published:Updated:

கமாடிட்டி டிரேடிங்! - மெட்டல் & ஆயில்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
கமாடிட்டி டிரேடிங்! - மெட்டல் & ஆயில்
கமாடிட்டி டிரேடிங்! - மெட்டல் & ஆயில்

கமாடிட்டி டிரேடிங்! - மெட்டல் & ஆயில்

பிரீமியம் ஸ்டோரி

தங்கம் (மினி)

தங்கம்,  ஆகஸ்ட் 2018-ல் 29300 என்ற அளவில் இருந்தபோது, தங்கத்தில் முதலீடு என்பது அவ்வளவு லாபகரமாக இல்லாததுபோல்தான் இருந்தது. அதன்பின், ஒரு ஹயர் டாப் மற்றும் ஹயர் பாட்டம் அமைப்பைத் தோற்றுவித்துக்கொண்டே போனது.

கமாடிட்டி டிரேடிங்! - மெட்டல் & ஆயில்

ஆனால், செப்டம்பர் மாதம் பக்கவாட்டு நகர்விலிருந்து வந்தது. இந்தப் பக்கவாட்டு நகர்வு என்பது கீழே 30400-ஐ முக்கிய ஆதரவாகக் கொண்டிருந்தது. இன்னும் சொல்லப்போனால், எல்லா இறக்கத்திலும் இந்த 30400 என்பது மிக முக்கிய ஆதரவாக இருக்க வாய்ப்புள்ளது. மேலே 31050 என்பது முக்கியத் தடைநிலையாகவும் இருந்து வந்தது.  கடைசியாக அக்டோபர் மாத ஆரம்பத்தில் 31050 என்ற தடையும் உடைக்கப்பட்டு வலிமையாக மாறியுள்ளது. கூடவே, பங்குச் சந்தை இறங்கினால், தங்கம் ஏறும் என்ற கூற்றையும் மெய்பித்துள்ளது. தற்போது மிக வலிமையான தடைநிலைக்கு அருகில் உள்ளது.

சென்ற வாரம் சொன்னது… “அக்டோபர் 5-ம் தேதி நடப்பு கான்ட்ராக்ட் முடிவுக்கு வருவதால்,  நாம் அடுத்த மாத கான்ட்ராக்ட்டான நவம்பர் 5-ம் தேதி முடிவுக்கு வரும் கான்ட்ராக்ட்டை எடுத்துக்கொள்வோம். தங்கம் ஆதரவை உடைத்து இறங்க முயற்சிக்கும் இந்த வேளையில், கீழே 30150 என்ற மிக முக்கிய ஆதரவு ஆகும்.  மேலே 30400-க்குமேல் காளைகள் விலையை நகர்த்த முடிந்தால், அது அடுத்தகட்டமாக 31000 வரை நகரலாம்.” 

தங்கத்துக்கு நாம் கொடுத்திருந்த தடைநிலையான 30400-ஐ உடைத்து மிக வலிமையான ஏற்றத்திற்கு மாறியது. இந்த வலிமையான ஏற்றம் சென்ற வாரம் புதனன்று அடுத்த கட்டமான 31365 வரை ஏறியது. அடுத்து வியாழனன்று ஒரு பக்கவாட்டு நகர்வில் முடிந்து இருந்தாலும், மீண்டும் ஒரு வலிமையான ஏற்றத்திற்குத் தன்னைத் தயார் செய்து வருகிறது.

கமாடிட்டி டிரேடிங்! - மெட்டல் & ஆயில்

இனி என்ன நடக்கலாம்?

தங்கத்தின் உடனடித் தடைநிலை 31680 ஆகும். இதை உடைத்தால், அடுத்து மிக வலிமையாக ஏறி 32000 என்ற எல்லையையும் உடைக்கலாம். கீழே 31030 என்பது உடனடி ஆதரவு ஆகும்.

வெள்ளி (மினி)

சென்ற வாரம் சொன்னது… “தற்போது வெள்ளி 37200 என்ற எல்லையை ஆதரவாகவும், மேலே 38300 என்ற எல்லையைத் தடைநிலையாகவும் கொண்டுள்ளது.”

வெள்ளி சென்ற வாரம், தங்கத்துடன் எந்த முரண்டும் பிடிக்காமல், தங்கம் நகர்ந்த திசையிலேயே தொடர்ந்து நகர்ந்து வந்தது.  கடந்த திங்களன்று தங்கம் ஏறிய ஏற்றத்தைவிட வெள்ளி பலமாக ஏறியது. திங்கள் காலை 37658 என்ற எல்லையில் ஆரம்பித்து 38604 என்ற எல்லையில் முடிந்தது. நெடுநாள் களுக்குப்பிறகு வெள்ளியானது ஒரே நாளில் ஆயிரம் புள்ளிகள் ஏறியது இப்போதுதான். செவ்வாய் அன்று கொஞ்சம் பக்கவாட்டு நகர்வில் இருந்துவிட்டு, அடுத்து புதனன்று மீண்டும் மிகப் பலமான ஏற்றத்தைக் காட்டியது. அதன்பின் ஒரு பக்கவாட்டு நகர்வில் உள்ளது.

கமாடிட்டி டிரேடிங்! - மெட்டல் & ஆயில்

இனி என்ன செய்யலாம்?

வெள்ளி ஒரு தொடர் ஏற்றத்திற்குப்பிறகு, மேலே 39480 என்ற எல்லையில் தடுக்கப்பட்டு வருகிறது. கீழே 38120 என்பது முக்கிய ஆதரவு ஆகும்.

கமாடிட்டி டிரேடிங்! - மெட்டல் & ஆயில்

கச்சா எண்ணெய் (மினி)

சென்ற வாரம் சொன்னது… “வலிமையான ஏற்றத்தைக் கண்டுள்ள கச்சா எண்ணெய், 5130 என்ற எல்லையை ஆதரவாகவும், மேலே 5320 என்ற எல்லையைத் தடைநிலையாகவும் கொண்டுள்ளது.”

கச்சா எண்ணெய், மீண்டும் புதிய வரலாற்றைப் படைத்துள்ளது. நாம் தந்திருந்த தடைநிலையான 5320-ஐ உடைத்து திங்கள், செவ்வாய் மற்றும் புதன் ஆகிய மூன்று நாள்களில் பலமாக ஏறி உச்சமாக 5668 என்ற புள்ளியைத் தொட்டு வரலாறு படைத்தது. இதன்பிறகு ஒரு பக்கவாட்டு நகர்வுக்கு மாறியுள்ளது.

இனி, கச்சா எண்ணெய் 5700-ஐ தடைநிலை யாகவும், கீழே 5400-ஐ ஆதரவாகவும் கொண்டுள்ளது.

- தி.ரா.அருள்ராஜன் தலைவர், பங்குச் சந்தை, கமாடிட்டி சந்தை பயிற்சி மையம், www.ectra.in

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு