Published:Updated:

கேழ்வரகுக் கொழுக்கட்டை, இளநீர் பாயசம்... தஞ்சாவூரில் ஒரு பாரம்பர்ய உணவகம்!

+
கேழ்வரகுக் கொழுக்கட்டை, இளநீர் பாயசம்... தஞ்சாவூரில் ஒரு பாரம்பர்ய உணவகம்!
பிரீமியம் ஸ்டோரி
News
கேழ்வரகுக் கொழுக்கட்டை, இளநீர் பாயசம்... தஞ்சாவூரில் ஒரு பாரம்பர்ய உணவகம்!

பாரம்பர்யம்

திண்ணை, துளசி மாடம், அழகிய கோலம், மாட்டு வண்டி, அம்மி, உரல்... எனப் பழங்காலக் கிராமத்துப் பாரம்பர்ய வீட்டை நினைவுக்குக் கொண்டு வருகிறது, அந்த உணவகம்.

திருச்சி-தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலையில் சாஸ்த்ரா பல்கலைக்கழகத்துக்கு எதிரில் அமைந்துள்ளது, இந்தக் ‘கும்பகோணம் ஐயர் காபி’ என்ற உணவகம். கீற்றால் வேயப்பட்ட கூரை, மண் சுவர்கள், மர ஜன்னல்கள் என அவ்வுணவகத்தின் புறத்தோற்றமே ‘சாப்பிட வாங்க’ எனச் சத்தமில்லாமல் அழைக்கிறது.

கேழ்வரகுக் கொழுக்கட்டை, இளநீர் பாயசம்... தஞ்சாவூரில் ஒரு பாரம்பர்ய உணவகம்!

 கீற்றால் வேயப்பட்ட ‘கும்பகோணம் ஐயர் காபி’ உணவகம்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

இது உணவகமா இல்லை, அருங்காட்சியகமா எனச் சந்தேகம் எழும் அளவுக்கு மண் குடுவைகள், ஏர் கலப்பைகள், நைலான் நாற்காலிகள், பழங்காலக் கடிகாரம், ஹார்மோனியம், கிராம போன், தொலைபேசி, ஹரிக்கேன் விளக்கு, மேசை நாற்காலிகள்... என ஆங்காங்கு வைக்கப்பட்டுள்ள பழங்காலப் பொருள்கள் அனைவரையும் கவர்கின்றன. அந்த உணவகத்தில், நெடுஞ்சாலையில் பயணிக்கும் பயணிகளும், பல்கலைக்கழக மாணவர்களும் அலை மோதுகிறார்கள். அங்கு பிளாஸ்டிக் பொருள்களை முடிந்த அளவுக்குக் குறைவாகவே பயன்படுத்துகிறார்கள்.

ஒரு காலை வேளையில், பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்த உணவகத்துக்குள் நுழைந்தோம். கமகமவென்று மூக்கில் ஏறிய சாம்பாரின் மணம் பசியைத் தூண்டியது. ஓர் இடத்தைப் பிடித்து அமர்ந்து சில பல இட்லிகள், தோசைகளை ருசித்தோம். நிறைவாகக் காபி ஆர்டர் செய்தவுடன் பித்தளை டபராவில் பரிமாறினர். அதையும் ருசித்துப் பருகிவிட்டு கடையின் உரிமையாளர் யார் என்று விசாரித்து அவரைச் சந்தித்து நம்மை அறிமுகப்படுத்திக் கொண்டோம்.

கேழ்வரகுக் கொழுக்கட்டை, இளநீர் பாயசம்... தஞ்சாவூரில் ஒரு பாரம்பர்ய உணவகம்!

மகிழ்ச்சியாக வரவேற்றவர், “என் பெயர் விஜயகுமார். 2013-ம் ஆண்டு, ஒரு காபி கஃபே ஆரம்பிக்கலாம் என்று முடிவு செய்தோம். அதையே கூரைவீடு போல அமைத்து, பாரம்பர்ய ருசியில் சமைக்கலாம் என முடிவு செய்தோம். அதைத் தொடர்ந்து பாரம்பர்யப் பொருள்களையும் சேகரித்து ஆங்காங்கு காட்சிக்கு வைத்தோம். அது எங்கள் வாடிக்கையாளர்களை வெகுவாகக் கவர்ந்தது. வீட்டில் எப்படிச் சமைக்கிறோமோ அப்படியேதான் அனைத்து உணவுகளையும் சமைக்கிறோம். இந்த ஐந்து ஆண்டுகளில் ஏகப்பட்ட வாடிக்கையாளர்கள் தொடர்ச்சியாக வருகை தருகிறார்கள்.

கேழ்வரகுக் கொழுக்கட்டை, இளநீர் பாயசம்... தஞ்சாவூரில் ஒரு பாரம்பர்ய உணவகம்!
கேழ்வரகுக் கொழுக்கட்டை, இளநீர் பாயசம்... தஞ்சாவூரில் ஒரு பாரம்பர்ய உணவகம்!
கேழ்வரகுக் கொழுக்கட்டை, இளநீர் பாயசம்... தஞ்சாவூரில் ஒரு பாரம்பர்ய உணவகம்!

அடை, சுழியம், கொழுக்கட்டை, இளநீர் பாயசம், தேங்காய்ப் பால் சர்பத், கற்றாழை மோர், கற்றாழை சர்பத், கம்புக் கொழுக்கட்டை, எள்ளுருண்டை, கேழ்வரகுக் கொழுக்கட்டை, இலைக் கொழுக்கட்டை, நீர் உருண்டை, பிட்டு... எனப்பல பாரம்பர்ய உணவுகளை இங்கே வழங்குகிறோம். அதிகமாக வருகை தரும் கல்லூரி மாணவர்களுக்காக மில்க் ஷேக், கோல்டு காஃபி போன்றவையும் உண்டு.

நாற்பது வயதைக் கடந்தவர்கள் பலரும் எங்களது உணவகத்தைப் பெரிதும் விரும்புகிறார்கள். ஏனென்றால் இங்கு கிடைக்கும் பல உணவுகள் அவர்களின் சிறு வயதில் சாப்பிட்டவையாக இருக்கும். இங்குள்ள பல பாரம்பர்ய பொருள்கள் அவர்கள் பயன்படுத்தியதாக இருக்கும். அவற்றைத் தங்கள் குழந்தைகளுக்குக் காட்டி மகிழ்கிறார்கள்.

கேழ்வரகுக் கொழுக்கட்டை, இளநீர் பாயசம்... தஞ்சாவூரில் ஒரு பாரம்பர்ய உணவகம்!

இங்கு சமைக்கப் பயன்படுத்தும் கம்பு, ராகி, பச்சரிசி, பயறு என அனைத்தையும் பெரும்பாலும் விவசாயிகளிடமிருந்து நேரடியாகவே வாங்குகிறோம். செக்கு எண்ணெய் வகைகளைத்தான் சமைக்கப் பயன்படுத்துகிறோம். பசும்பாலில்தான் காபி தயாரிக்கிறோம். இங்கு தயாரிக்கும் டிகிரி காபி மிகவும் பிரபலம். வீட்டில் அம்மா கையால், மனைவி கையால் சாப்பிடும் சுவையான உணவு வகைகளை வழங்கி, எங்கள் வாடிக்கையாளர்களுக்கு வீட்டில் சாப்பிட்ட திருப்தி ஏற்பட வேண்டும் என்பதுதான் எங்களுடைய குறிக்கோள். அதுதான் எங்கள் பலமும் கூட. காலை 6 மணியில் இருந்து இரவு 9 மணி வரை எங்கள் உணவகம் இயங்கும்” என்ற விஜயகுமார் நிறைவாக,

“கும்பகோணம் டிகிரி காபிக்குப் பிரபலம் என்பதால்தால் என் அப்பாவின் யோசனைப்படி இந்தப் பெயரை வைத்தோம். நான் கடை ஆரம்பித்த சமயத்தில் ஒருவர் பென்ஸ் காரில் இங்கு சாப்பிட வந்தார். சாப்பிட்டு முடித்துக் காரில் ஏறப்போன அவர், கயிற்றுக்கட்டிலைப் பார்த்ததும் அதில் வந்து சற்று நேரம் அமர்ந்துவிட்டு, மகிழ்ச்சியுடன் கிளம்பினார்.

பல சினிமா நடிகர்கள் எங்கள் வாடிக்கையாளர்கள். ஒருமுறை நடிகை கௌதமி இங்கே வந்தபோது 45 நிமிடங்கள் அமர்ந்து ரசித்துக் கொண்டிருந்தார். இப்படி இங்கு வரும் ஒவ்வொருக்கும் ஏதோவொரு நினைவலையை ஏற்படுத்துகிறது எங்கள் உணவகம்” என்றார் உற்சாகம் பொங்க.  மீண்டும் ஒரு டிகிரி காபியை ஆர்டர் செய்து ருசித்துப் பருகிவிட்டு விஜயகுமாரிடமிருந்து விடைபெற்றோம்.

- அப்துல்லா.மு, படங்கள்: ஏ.எஸ்.ஈஸ்வர்