Published:Updated:

ஒயிட் காலர் வேலைகளை விடுங்க...`நியூ காலர்' வேலைகளுக்குத் தயாராகும் நேரம் இது!

ஒயிட் காலர் வேலைகளை விடுங்க...`நியூ காலர்' வேலைகளுக்குத் தயாராகும் நேரம் இது!
ஒயிட் காலர் வேலைகளை விடுங்க...`நியூ காலர்' வேலைகளுக்குத் தயாராகும் நேரம் இது!

`நியூ காலர்' வேலைகள் உருவாகக் காரணம் என்ன? நாம் ஏன் அதற்கேற்ப மாற வேண்டும்?

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

னிதனும் அவனுக்கான வேலைகளும் காலப்போக்கில் மாறிக்கொண்டேதான் வருகின்றன. அதில், மாறும் சூழ்நிலைகளுக்கேற்ப தயாராகும் மக்களே வெற்றி காண்கின்றனர். அபார தொழில்நுட்ப வளர்ச்சி இன்றைய சூழலில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. மற்ற விஷயங்களைப் போலவே வேலைவாய்ப்புகளிலும் இதனால் மாற்றம் நிகழ்ந்துள்ளது. தகவல் தொழில்நுட்பம் தொடர்பான வேலைகள் பெருமளவும் உயர்ந்துள்ளன. ஏற்கெனவே இருந்த வேலைகளுக்கும் தொழில்நுட்பங்களை கையாளும் திறன் வேண்டுமென எதிர்பார்க்கப்படுகிறது.

ஒருபுறம் செயற்கை நுண்ணறிவு மற்றும் ரோபோக்கள் மூலம் மனிதனின் வேலைகளில் பல பறிபோகிவிடும் என்ற அச்சமும் இருந்துவருகிறது. இதில் ஓரளவு உண்மை இருந்தாலும் முக்கிய வேலைகள் என்றுமே மனிதர்களின் கைகளில்தான் இருக்குமென நம்பப்படுகிறது. சொல்லப்போனால் ரோபோக்களும், தொழில்நுட்பமும் உங்களின் தற்போதைய வேலைகளைப் பறித்துக்கொள்ளுமா என்ற கேள்விக்கு பதில் சொல்ல `Will Robots Take My Job?' என்ற தளம் ஒன்றே இருக்கிறது. இதில் தேடினால் வருங்காலத்தில் உங்கள் வேலை, ரோபோக்கள் கைகளுக்கு மாறும் வாய்ப்பு எத்தனை சதவிகிதம் என்பதைக் கணிக்கும். இது எந்த அளவு சரியாக இருக்கும் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும். ஆனால், நாள்கள் செல்லச்செல்ல செயற்கை நுண்ணறிவு போன்ற தொழில்நுட்பங்கள் மேலும் பல முன்னேற்றங்களைக் காணப்போகிறது என்பதில் எந்த மாற்றுக் கருத்துமில்லை. இதன் விளைவாக உருவாகியுள்ளவைதாம் இந்த `நியூ காலர்' வேலைகள். 


 

அது என்ன `நியூ காலர்' வேலைகள்?

என்னதான் தொழில்நுட்பம் வளர்ந்தாலும் ஓரளவு வேலைகளே பறிபோகும் என்றும், பெரும்பாலான வேலைகள் இன்னும் மேம்படும் என்றும் புதிய வேலைகள் பல உருவாகும் என்றே வல்லுநர்களால் தெரிவிக்கப்படுகிறது. காக்னிசன்ட் நிறுவனம்கூட கடந்த வருடம் `21 jobs of the Future' என்று வருங்காலத்தில் உருவாகப்போகும் புதிய வேலைகள் சிலவற்றைக் கணித்திருந்தது.

IBM நிறுவனம் இவற்றை வேறு மாதிரி கையாளுகிறது. அதைத்தான் `நியூ காலர்' வேலைகள் என்று அழைக்கிறது. இந்தத் திட்டத்தில் தற்போதைக்கு சைபர் பாதுகாப்பு ஆராய்ச்சியாளர்கள், அப்ளிகேஷன் வடிவமைப்பாளர்கள், கிளவுட் வல்லுநர்கள் போன்ற வேலைகளில் ஆள் எடுக்கின்றனர். இவர்களுக்குத் தேவையான திறன்களில் மட்டும் சிறந்தமுறையில் பயிற்சி அளிக்கப்பட்டு பின்னர் பணிகளுக்கு அழைக்கப்படுகின்றனர். இவர்கள் 4 வருடப் பட்டப்படிப்பு படிக்கவேண்டும் என்பது கூட கட்டாயம் கிடையாது. இந்த வேலைகளுக்காகச் சட்டம் ஒன்றைக் கூட இயற்றியுள்ளது அமெரிக்கா. நாளை உலகம் இதைப் போன்ற ஒரு வடிவத்தை நோக்கித்தான் நகரும் என்பதுதான் கணிப்பாக இருக்கிறது. பள்ளியில் அனைத்தைப் பற்றியும் கற்று, பின்பு ஏதேனும் ஒரு துறையில், அதுவும் ஏதேனும் ஒரு பணிக்கான திறனை மட்டும் மிகச்சரியாகக் கற்றுக்கொள்ள மக்களைத் தள்ளும் இந்த முறை. இதற்கு வேண்டுமென்றாலும் வேண்டுமென்றாலும் அனைவரும் தயாராக்கித்தான் ஆகவேண்டும்.

ஏனென்றால் தொழில்நுட்பங்கள் ஒருவரின் வேலையில் இருக்கும் முக்கியச் சுமைகளை தளர்த்திவிடும். ஆனால், அதே நேரத்தில் அதைப் பயன்படுத்தும் மனிதன் மீதம் இருக்கும் பணிகளை மிகச்சிறந்த முறையில் செய்யவேண்டும் என்பதே தொழில்நுட்ப நிறுவனங்கள் மட்டுமல்லாமல் அனைத்து நிறுவனங்களின் எதிர்பார்ப்பாகவும் இருந்து வருகிறது.

இந்த மாற்றம் என்பது கல்வியிலிருந்துதான் முதலில் தொடங்க வேண்டும். வாய்ப்புகள் இருந்தும் அதற்குத் தயாராக உதவாத நிலையில்தான் இந்தியா உட்பட உலக நாடுகள் பலவற்றின் நிலை. கடந்த 10 வருடங்களில் ஏற்பட்ட மாற்றங்களையும், நமது கல்விமுறையில் இருக்கும் மாற்றங்களையும் ஒப்பிட்டுப் பார்த்தாலே நிலவரம் எப்படி இருக்கிறது என்பது நமக்குப் புரியும். இதற்கு நாமும் நமது அடுத்த தலைமுறையும் தயாராவது மிகமுக்கியம். ``It Is Not the Strongest of the Species that Survives, But the Most Adaptable" என்கிறார் சார்லஸ் டார்வின். அதாவது, ``வலிமையான உயிரினங்கள் நீடித்து வாழ்வதில்லை; மாற்றத்திற்கு ஏற்ப தன்னை மாற்றிக்கொள்ளும் உயிரினங்கள்தான் கடைசிவரை வாழ்கின்றன." இது நம் அனைவருக்கும் பொருந்தும்.  

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு