Published:Updated:

ஃப்ரெண்டு... இது ட்ரெண்டு

ஃப்ரெண்டு... இது ட்ரெண்டு
பிரீமியம் ஸ்டோரி
ஃப்ரெண்டு... இது ட்ரெண்டு

ஃப்ரெண்டு... இது ட்ரெண்டு

ஃப்ரெண்டு... இது ட்ரெண்டு

ஃப்ரெண்டு... இது ட்ரெண்டு

Published:Updated:
ஃப்ரெண்டு... இது ட்ரெண்டு
பிரீமியம் ஸ்டோரி
ஃப்ரெண்டு... இது ட்ரெண்டு

பெரிய பொட்டு:

ஃப்ரெண்டு... இது ட்ரெண்டு

சென்ற ஆண்டு கண்ணுக்கே தெரியாத சிறிய அளவு பொட்டு மற்றும் கற்கள் பதித்த பொட்டு ட்ரெண்டாகின. ஆனால், இந்த வருடம் பழைய 25 பைசா சைஸ் பொட்டுதான் ட்ரெண்டு. `பத்மாவத்’, `நடிகையர் திலகம்’, `காலா’ போன்ற படங்களின் தாக்கத்தினாலோ என்னவோ, புடவை, பொட்டு, மூக்குத்தி போன்றவற்றின் மீது பெண்களுக்கு இருக்கும் ஈர்ப்பு அதிகமாகியுள்ளது. ஸ்ட்ரெயிட்னிங், கர்லிங் என மாடர்ன் பெண்மணிகளாய் மாறியவர்கள்கூட அடர்ந்த நிறத்தில் பெரிய பொட்டு வைத்துக்கொள்கின்றனர்.

ஃப்ரெண்டு... இது ட்ரெண்டு

பாவாடை தாவணி:

ஃப்ரெண்டு... இது ட்ரெண்டு

`அவுட் ஆஃப் ஃபேஷன்’ என்று நாம் ஒதுக்கிவைத்த பாவாடை தாவணி, இந்த ஆண்டு ட்ரெண்டாகியுள்ளது. இதற்கு ஒருவகையில் `கடைக்குட்டி சிங்கம்’, `தானா சேர்ந்த கூட்டம்’, `சீமராஜா’ போன்ற திரைப்படக் கதாநாயகிகள் உடுத்தியிருந்த விதவிதமான அழகிய பாவாடை தாவணிகளும் காரணம். ஆம், இந்தக் காலத்து மாடர்ன் பெண்களையும் இது ஈர்த்தது. முன்பெல்லாம் பிளெயின் அல்லது கட்டம்போட்ட டிசைன்களில் குறிப்பிட்ட சில நிறங்களில் மட்டுமே இந்தத் தாவணி செட் இருந்தன. ஆனால், விதவிதமான பேட்டர்ன்களிலும் புதுமையான நிறங்களிலும் தற்போது கிடைக்கக்கூடிய இந்தத் தாவணி செட்களை வாங்குவதற்கு அனைவரும் ஆர்வமாக இருக்கின்றனர். வெல்கம் பேக் டிரெடிஷன்!

ஃப்ரெண்டு... இது ட்ரெண்டு

சென்டர் ஸ்லிட் லாங் குர்த்தி:

ஷா
ர்ட் ஸ்கர்ட், ஷார்ட் டாப் போன்ற `ஷார்ட்’ ட்ரெண்டு மறைந்து, லாங் டாப், லாங் டிரஸ் என எக்ஸ்ட்ரா ஸ்பெஷல் உடைகள்தான் தற்போது ட்ரெண்டிங்கில் உள்ளன. அதிலும், சென்டர் ஸ்லிட் லாங் குர்த்தி டாப் ஃபேஷனில் உள்ளது. லெக்கிங்ஸ், ஜீன்ஸ், பலாஸோ, குலோட்ஸ் என எல்லாவிதமான பேன்ட்டுகளோடும் இந்தக் குர்த்திகளை மேட்ச் செய்துகொள்ளலாம். எம்ப்ராய்டரி, பிரின்ட்ஸ் போன்ற வேலைப்பாடுகளில் குறைந்த விலை முதல் காஸ்ட்லி ஆடை வரை எல்லா ரேஞ்சுகளிலும் கிடைக்கின்றன. வாவ் குர்த்தி!

ஃப்ரெண்டு... இது ட்ரெண்டு

டெர்மல் பியர்ஸிங் (Dermal Piercing):

கா
து மற்றும் மூக்கில் சிறு துளையிட்டு, தங்கம், வெள்ளி போன்ற உலோகங்களினால் ஆன அணிகலன்களை அணிந்துகொள்வது பற்றி நமக்கெல்லாம் தெரியும். ஆனால், கைவிரல், கழுத்துப் பகுதி போன்ற இடங்களில் துளையிட்டுத் தகடு வைத்து, அதன்மேல் கற்கள் பதிக்கும் `டெர்மல் பியர்ஸிங்’ இந்த ஆண்டின் மிரளவைக்கும் ட்ரெண்டு. அதுவும் நிச்சயதார்த்த மோதிரத்தைக் கைவிரலில் பதிக்கும் வரை சென்றது வியப்பின் உச்சம். ஆனால், இந்த ட்ரெண்டு இன்னும் இந்தியாவைத் தாக்கவில்லை என்பது கொஞ்சம் நிம்மதியைத் தருகிறது!

ஃப்ரெண்டு... இது ட்ரெண்டு

டெனிம் (Denim):

கா
ர்கோ, லெக்கிங்ஸ் என எத்தனை மாடல்கள் வந்தாலும் `பேன்ட்’ உலகின் கிங் என்றுமே ஜீன்ஸ்தான். மொத்தமான `டெனிம்’ துணிவகையில் தயாராகும் இந்த ஜீன்ஸில், ஸ்லிம், ரெகுலர், ஸ்கின்னி, ரிப்டு போன்ற பல வெரைட்டிகள் மார்க்கெட்டில் கொட்டிக்கிடக்கின்றன. ஜீன்ஸ் பேன்ட்டுடன் ஸ்வெட்பேன்ட், ஜாக்கெட், ஷர்ட், டாப், குர்த்தி, ஸ்கர்ட், ஜம்ப்சூட் என விதவிதமான ஆடைகளிலும் இந்த ஆண்டு டெனிமின் பங்கு களைகட்டியுள்ளது. ஆடைகள் மட்டுமல்ல, டெனிம் துணியிலானா கேப், ஷூ போன்றவையும் ட்ரெண்டானது.