தன்னம்பிக்கை
லைஃப்ஸ்டைல்
என்டர்டெயின்மென்ட்
Published:Updated:

கவலைகளைக் கரைக்க இது அழகிய வழி! - சந்திரா லக்ஷ்மணன்

கவலைகளைக் கரைக்க இது அழகிய வழி! - சந்திரா லக்ஷ்மணன்
பிரீமியம் ஸ்டோரி
News
கவலைகளைக் கரைக்க இது அழகிய வழி! - சந்திரா லக்ஷ்மணன்

மறுபக்கம்

கவலைகளைக் கரைக்க இது அழகிய வழி! - சந்திரா லக்ஷ்மணன்

விஜய் டி.வி ‘காதலிக்க நேரமில்லை’ சீரியல் உள்ளிட்ட பல சீரியல்கள் மற்றும் சினிமாவில் நடித்துப் பிரபலமானவர், நடிகை சந்திரா லக்ஷ்மணன். தன் 13 ஆண்டுக்கால தொடர்ச்சியான நடிப்புக்கு  இப்போது சற்றே ஓய்வுகொடுத்திருப்பவர், பிசினஸில் பிஸி. இருபாலர் ஆடைகளிலும், பல டிசைன்களைக் கைப்பட தத்ரூப ஓவியங்களாக வரைந்து விற்பனை செய்யும் ஃபேப்ரிக் பெயின்ட்டிங் தொழிலைப் பெற்றோருடன் இணைந்து செய்து வருகிறார்.

“என் அம்மா மாலதி லக்ஷ்மணன் வங்கி ஊழியராக வொர்க் பண்ணி, விருப்ப ஓய்வு வாங்கினவங்க. புரொஃபஷனலா பெயின்ட்டிங் கத்துக்கிட்ட அவங்க, வீட்டிலிருந்தே நிறைய பெயின்ட்டிங் வேலைப்பாடுகள் செய்ய ஆரம்பிச்சாங்க. பார்த்தவங்க எல்லோரும் பாராட்டினதோடு, ‘ஆர்டர் எடுத்துச் செய்து தர முடியுமா?’ என்றும் கேட்டாங்க. அப்போதான், இதையே பிசினஸா செய்யலாம்னு முடிவெடுத்தோம்.

அம்மா வீட்டிலிருந்தே பெயின்ட்டிங் வகுப்புகளும் எடுப்பாங்க. ஷூட்டிங் இல்லாத நாள்களில் நானும் அவங்க வகுப்பில் அமர்ந்து கத்துக்கிட்டேன்.

கவலைகளைக் கரைக்க இது அழகிய வழி! - சந்திரா லக்ஷ்மணன்

2013-ம் வருஷம், ‘கல்யாண் சில்க்ஸ்’ நிறுவனத்தினர் துபாயில் தங்கள் கிளையைத் தொடங்கினாங்க. அதில் ஆண்களுக்கான பிரிவுக்கு, 80 வேஷ்டிகள் மற்றும் 65 சட்டைகளில் பெயின்ட்டிங் செய்துகொடுக்கும் முதல் பெரிய ஆர்டர் வந்துச்சு. அதுக்குப் பிறகு நிறைய ஆர்டர்கள் தொடர, பிசினஸ் டெவலப் ஆச்சு.

கவலைகளைக் கரைக்க இது அழகிய வழி! - சந்திரா லக்ஷ்மணன்


காஞ்சிபுரத்திலுள்ள கைத்தறிக் கூடத்துல மொத்தமா பிளெய்ன் புடவைகளை நெசவு செய்து வாங்கி, பார்டர், பள்ளு, ஜரிகை பேட்டர்ன்னு பல்வேறு பெயின்ட்டிங் டிசைனிங் பண்ணி விற்பனை செய்கிறோம்.

சில்க், காட்டன் உள்ளிட்ட சில வகை மெட்டீரியல்கள்தான் பெயின்ட்டிங் செய்ய ஏற்றவை. அவற்றில் செய்யப்பட்டும் பெயின்ட்டிங் சாயம் போகாது; நீடித்திருக்கும்.

லிவிங் ரூம் மற்றும் பெட் ரூமில் வைக்கும் கான்செப்ட் ஓவியங்களுக்கும், பூஜையறையில் வைக்கும் கடவுள் உருவ ஓவியங்களுக்கும் இப்போ உள்நாடு மற்றும் வெளிநாடுகள்ல அதிக வரவேற்பு இருக்கு.

பெரிய சைஸில் (8 அடிக்கும் அதிகமான) கடவுள் உருவம் உள்ளிட்ட மிக நுணுக்கமான வேலைப்பாடுகளைக் கொண்ட கேன்வாஸ் பெயின்ட்டிங் ரொம்பவே ஸ்பெஷலானது. மிகச் சவாலான அந்த வேலையை செஞ்சு முடிக்க பல மாதங்கள் ஆகும்.

கவலைகளைக் கரைக்க இது அழகிய வழி! - சந்திரா லக்ஷ்மணன்

அடுத்தகட்டமா, ஹோம் டெக்கர் பொருள்கள் (டேபிள், டீபாய், ட்ரே உள்ளிட்டவை) மற்றும் ரிட்டர்ன் கிஃப்ட் பொருள்களிலும் வெரைட்டியான பெயின்ட்டிங் செய்து விற்பனை செய்ய ஆரம்பிச்சோம். இவற்றில் ஒரே டிசைன்ல பல்க் ஆர்டர்ஸ் வரும்போது, ஒருமுறை ஒரிஜினல் பெயின்ட்டிங் பண்ணி, அதை அப்படியே டிஜிட்டல் பிரின்ட்டிங் எடுத்துப்போம்.

ரிட்டர்ன் கிஃப்ட்ஸுக்கு அம்மாவும் நானும் பெயின்ட் பண்ணினா, அடுத்தகட்ட வேலைகளை அப்பா பார்த்துக்குவார். ‘மியூரல் ஆரா’ங்கிற பெயர்ல ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் பேஜ்ல எங்க பெயின்ட்டிங் வேலைகளுக்கான புரமோஷன், கஸ்டமர் என்கொயரி விஷயங்களை நான் கவனிச்சுக்கிறேன். ஆயிரம் ரூபாயில் தொடங்கி, பல லட்சம் மதிப்பிலான பெயின்ட்டிங்குகளை சேல்ஸ் பண்றோம். பண்டிகை காலத்தில், முகூர்த்த சீஸனில் நிறைய ஆர்டர்கள் வரும். ஆண்டுக்கு 35 - 50 லட்சம் ரூபாய் வரை டர்ன் ஓவர் ஆகுது. விரைவில் பொட்டீக் ஆரம்பிக்கவிருக்கோம்.

கவலைகளைக் கரைக்க இது அழகிய வழி! - சந்திரா லக்ஷ்மணன்

நுணுக்கமான ஒரு பெயின்ட்டிங் வேலையை முடிக்க மாதங்கள்கூட ஆகலாம். ஆனா, பெயின்ட்டிங் பிரஷ்ஷைக் கையில் பிடிச்சதுமே மனசுல இருக்கிற குழப்பங்கள், கவலைகள் எல்லாம் மறைஞ்சு அமைதி மட்டுமே இருக்கும். பெயின்ட்டிங், சிறந்த ஸ்ட்ரெஸ் பஸ்டர்னு சொல்லலாம். ஒரு நாளில் பெயின்ட்டிங் பண்ற பல மணி நேரமும் ஓர் அமைதியான உலகத்துல இருக்கிற உணர்வு கிடைக்கும். வரைஞ்ச ஓவியத்தை இறுதியில் பார்க்கிறப்போ, அதில் ததும்புற உயிரோட்டம் அவ்வளவு நிறைவும் மகிழ்ச்சியும் தரும்!'' 

- தான் டிசைனிங் செய்த ஆடைகளைக் காட்டியபடியே புன்னகைக்கிறார், சந்திரா.

- ஆனந்த் 

படங்கள் : செ.விவேகானந்தன்