Published:Updated:

`டெஸ்லா எலெக்ட்ரிக் காருக்கு பெட்ரோல் நிரப்ப முயன்ற பெண் '- வைரலான வீடியோ

`டெஸ்லா எலெக்ட்ரிக் காருக்கு பெட்ரோல் நிரப்ப முயன்ற பெண் '- வைரலான வீடியோ
`டெஸ்லா எலெக்ட்ரிக் காருக்கு பெட்ரோல் நிரப்ப முயன்ற பெண் '- வைரலான வீடியோ

எலெக்ட்ரிக் கார் ஒன்றுக்கு பெண் ஒருவர் பெட்ரோல் போட முயற்சி செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியிருக்கிறது. அமெரிக்காவில்தான் இப்படி ஒரு சம்பவம் நடந்திருக்கிறது.

அங்கெல்லாம் பெரும்பாலும் நம் ஊரைப் போல பெட்ரோல் பங்குகளில் எரிபொருளை நிரப்புவதற்கென தனியாக ஆள்கள் இருக்க மாட்டார்கள். காரை ஒட்டி வருபவர்கள் அவர்களுக்குத் தேவைப்படும் எரிபொருளை அவர்களாகவே நிரப்பிக்கொள்ளலாம். அப்படி ஒரு பெண் டெஸ்லா எலெக்ட்ரிக் காரை பெட்ரோல் பங்கில் கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறார். டெஸ்லாவின் கார்கள் அமெரிக்காவில் மிகப் பிரபலமானவை. அவை அனைத்துமே மின்சாரத்தில் இயங்குபவை. எலெக்ட்ரிக் காருக்கு பெட்ரோல் பங்கில் என்ன வேலை இருக்க முடியும்?

காரை விட்டு இறங்கிய அந்தப் பெண், காரில் எரிபொருளை நிரப்புவதற்கான இடத்தைத் தேடுகிறார். இயந்திரத்தில் கார்டைத் தேய்த்தவர் பெட்ரோல் போடும் பம்பை எடுத்து காரில் நுழைக்க முயற்சி செய்கிறார். ஆனால், அது எலெக்ட்ரிக் கார் என்பதால் அந்த இடத்தில் சார்ஜிங் போர்ட் கொடுக்கப்பட்டிருந்தது. எனவே, பெட்ரோல் பம்பை உள்ளே நுழைக்க முடியவில்லை. இதனால் குழம்பிய அவர் என்ன செய்வதென்று தெரியாமல் மொபைலை எடுத்து இதைப் பற்றி தேடத் தொடங்குகிறார். இவற்றையெல்லாம் அந்தக் காருக்குப் பின்னால் இருந்தவர்கள் கவனித்திருக்கிறார்கள். அந்தப் பெண் செய்வதைப் பார்த்தவர்களுக்கு சிரிப்பை அடக்க முடியவில்லை. ஒரு கட்டத்தில் காரில் இறங்கி ஒருவர் சென்று நிலைமையை விளக்கிக் கூறிய பின்னர்தான், அந்தப் பெண்ணுக்கு உண்மை என்னவென்று தெரிந்திருக்கிறது. இந்த மொத்த சம்பவத்தையும் அவர்கள் வீடியோவாக எடுத்து வெளியிட சமூக வலைதளங்களில் அது வைரலாகியிருக்கிறது.