``கலைகளின் நகரம் தஞ்சை' என்று சொல்லும்படி, பல கலைகளின் தலைநகரமாக - கலைநகரமாகப் புகழ்பெற்றது தஞ்சை. கல்லிலும் மண்ணிலும்; தங்கம், பித்தளை, வெள்ளி என்று காணும் பொருள்கள் அனைத்திலும் சிற்பக் கலை வளர்த்த மண்ணும்கூட. சிற்பக்கலை மட்டும்தானா? உயிரோட்டம் நிறைந்த ஐம்பொன் சிற்பங்கள், கண்ணாடிப் பின்னணியில் வரையப்பட்ட அழகழகான தஞ்சாவூர் ஓவியங்கள், நுட்பமான கலை வேலைப்பாடுகளுடன் கூடிய தஞ்சாவூர்த் தட்டு, எந்தப் பக்கமும் சாயாமல் தலையாட்டிக்கொண்டே இருக்கும் தலையாட்டி பொம்மை, இசை மீட்டும் இசைக்கருவிகள் என்று தஞ்சை மண்ணில்தான் எத்தனையெத்தனை கலைகள் வாழ்ந்திருக்கின்றன!

அந்த வகையில் தஞ்சை மண்ணுக்கே உரிய ஒரு கலைதான் நெட்டிச் சிற்பக்கலை. மிக நுணுக்கமான வேலைப்பாடுகளுடன் கூடிய, அற்புத அழகு மிளிரும் நெட்டிச்சிற்பங்கள் இன்றைக்கும் பல வீடுகளிலும் அலுவலகங்களிலும் வரவேற்பறையை அலங்கரிக்கின்றன. பிளாஸ்டிக் பொம்மைகளையும் எலெக்ட்ரானிக்ஸ் பொம்மைகளையும் பார்த்துப் பழகிய இன்றைய தலைமுறைக்கு, நெட்டிச் சிற்பங்களைப் பற்றித் தெரிந்திருக்குமா என்பது சந்தேகம்தான்.

நெட்டிக்கலை குறித்து இன்றைய தலைமுறைக்கு அறிமுகப்படுத்தும் நோக்கத்தில், கும்பகோணத்தில் இருக்கும் கே.ஏ.சொக்கலிங்கத்தை அவருடைய கலைக்கூடத்தில் சந்தித்தோம்.

``நாம விரும்பற வடிவத்தைத் தந்தத்தில் செய்ததுபோல வெள்ளைச் சிற்பமாக்கி, கண்ணாடிப்பேழைக்குள் அடக்குவதுதான் நெட்டிச் சிற்பக்கலை'' என்று முன்னோட்டம் கொடுத்தவர், ``பிளேடு, கத்தரிக்கோல்னு சின்னச் சின்னக் கருவிகள் உதவியுடன் முழுக்கக் கைகளால் மட்டுமே ரொம்ப நுணுக்கமா செதுக்கற வேலை இது. கைத்திறனுடன் கலையுணர்வும் ஆர்வமும் ரொம்ப முக்கியம்'' என்று உற்சாகமாகப் பேசத் தொடங்கினார் சொக்கலிங்கம். நெட்டி எப்படிச் சிற்பமாக மாறுகிறது என்பதை நம்மிடம் பகிர்ந்துகொண்டார்.

``நெட்டிங்கிறது குளத்தில் விளையற ஒரு தாவரம். மஞ்சள்நிறப்பூவும், நெல்லி இலை மாதிரியான இலையும் இருக்கிற இந்தத் தாவரத்துக்கு, தாமரைத்தண்டு போலவே பச்சை நிறத்தில் தண்டு இருக்கும். தண்டில் கணுவுக்குக் கணு ரோமம்போன்ற வேர்களும் இருக்கும். தண்டோட நடுவுல சின்னதா துவாரம் இருக்கும். நாலிலிருந்து அஞ்சடி உயரத்துக்கு வளரும். ஜனவரி மாசத்துலதான் இந்தத் தண்டை அறுவடை பண்ண முடியும். குளத்துல முழங்கால் அளவுக்குத் தண்ணி இருக்கிறபோது உள்ளே இறங்கி, வேர்ப்பகுதியில் கொஞ்சம் இடம் விட்டுட்டு வெட்டி வருவோம். தண்டு கால் அங்குலத்திலிருந்து நாலு அங்குலம் வரை தடிமனாக உருண்டை வடிவத்தில் இருக்கும். வெட்டும்போது பச்சை நிறத்தில் இருக்கிற தண்டு காயவச்சதும் பழுப்பு நிறத்துக்கு மாறிடும். தண்டுக்குள்ள இருக்கிற சக்கை வெள்ளை நிறத்துல இருக்கும். அந்தச் சக்கையிலதான் நெட்டிச்சிற்பங்களைச் செய்யறோம். செய்யப்போற சிற்பத்துக்கு ஏற்ற மாதிரி சக்கைகளை சதுரம், உருண்டைன்னு பல வடிவங்களில் வெட்டி எடுத்துக்குவோம். வெட்டி எடுத்த துண்டுகளைப் பசைமூலம் ஒட்டிச் சிற்பம் உருவாக்குவோம்'' என்றவரிடம் கேள்விகளைத் தொடர்ந்தோம்.

``நெட்டி தட்டுப்பாடில்லாமல் கிடைக்கிறதா?'' ``டெல்டா பாசனப் பகுதிகள்ல இருக்கிற ஏரி, குளம், குட்டைகள்ல விளையற நெட்டிக்கு, கிடை, சடை, கிடச்சின்னு ஊருக்கு ஒரு பேர் இருக்கும். முன்னாடியெல்லாம் திருவாரூர், திருத்துறைப்பூண்டி, கும்பகோணம் சுத்தியிருக்கிற பகுதிகள்ல அதிகமா நெட்டி விளைஞ்சது. இப்ப மழை இல்லாம குளம், குட்டையெல்லாம் காஞ்சிடுச்சு. பல வருஷமாவே அஸ்ஸாம், ஆந்திரான்னு வெளி மாநிலங்கள்ல இருந்துதான் நெட்டி வரவழைக்கிறோம். அதனால, விலையும் ரொம்ப அதிகமாயிடிச்சு. ஜனவரி மாசமே நெட்டியை வாங்கிப் பத்திரப்படுத்தி வச்சிடணும். இல்லாட்டி அடுத்த வருஷம் வரை காத்துட்டிருக்கணும்.

``இந்தக் கலை வளர்ந்தது எப்படி?''

``கல்லிலும் மண்ணிலும் கலை இருக்கிறதைக் கண்டுபிடிச்சதுபோல், நெட்டியிலும் ஒரு கலை இருக்கும்னு நினைச்ச யாரோ ஒரு கலைஞன்தான் இந்தக் கலைக்கு உயிர் கொடுத்திருக்கான். இதோட பூர்வீகம் பத்தி எனக்குத் தெரியாது. ஆனா, சிலப்பதிகாரத்துல நெட்டி பத்திக் குறிப்பிருக்கு. அதில், `உள்ளீரம் பெற்ற கிடையின் போல்’னு நெட்டி பத்தி ஒரு வரி வருது. நெட்டிக்குக் கிடைங்கிற பேர் இருக்கிறதால, சிலப்பதிகாரக் காலத்துலயே நெட்டி இருந்திருக்குங்கிறது தெரியுது. அதேபோல், ராஜராஜ சோழனோட அரண்மனையில நெட்டிப்பூக்கள் வச்சி அலங்கரிச்சிருந்ததா சரித்திர ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிட்டிருக்காங்க. அந்தக் காலத்துல நெட்டியைப் பறிச்சு மாலையா கட்டி மாடுங்களுக்குச் சாத்தறது ரொம்பவே விசேஷம்'' என்று நெட்டியின் தொன்மை வரலாற்றை நம்மிடம் பகிர்ந்துகொண்டார்.

``இந்தக் கலை நுணுக்கம் பற்றிச் சொல்லுங்களேன்..?"

``கூர்மையான கத்தி, பிளேடு, கத்தரிதான் ஆயுதங்கறதால முதல்ல கத்தி பிடிக்கக் கத்துக்கணும். லேசா பிசகிட்டாக்கூடக் கைவிரல் துண்டாயிடும். கவனமெல்லாம் கையில இருக்கிற ஆயுதத்துலதான் இருக்கணும். கலையில் ஓரளவுக்கு ஆர்வம் இருக்கிற யார் வேணும்னாலும் இதைக் கத்துக்கலாம். எல்லாச் சிற்பமும் வெட்டியும் ஒட்டியும் செய்யறதுதான். சின்னச் சின்ன நெட்டித் துண்டுகளை ஒண்ணா சேர்த்து உருவாக்கறதுதான். சிற்பம் செதுக்கறதுக்கு முன்னாடி நாம செதுக்கப்போற சிற்பத்தை மனசுக்குள்ள பதிவு செஞ்சி வச்சிக்கணும். ஏதாவது ஒரு கட்டடத்தைச் செய்யறதா இருந்தா முதல்ல அந்தக் கட்டடத்தை ஒருமுறை நேர்ல போய்ப் பார்த்துடணும். அப்பதான் சிற்பம் தத்ரூபமா இருக்கும். இப்ப தஞ்சாவூர் பெரியகோயில் சிற்பம் செய்யணும்னா, அந்தக் கோபுரம், அதுல இருக்கிற சிற்பங்கள், விமானம், கலசம், மகாமண்டபம்னு ஓர் இடம்கூட விடாமப் பார்த்து மனசுல பதிஞ்சு வச்சிக்கணும். அப்புறம் ஒவ்வொரு பாகமா செஞ்சி, ஒட்ட வைக்கணும். முன்னாடி புளியங்கொட்டை பசை வச்சி ஒட்டுவோம். இப்ப பெவிக்கால்தான் பயன்படுத்தறோம்''

``இந்தக் கலையில் ஆர்வம் வர என்ன காரணம்?"

``பரம்பரையாவே நாங்க இந்தத் தொழில்ல இருந்ததும் ஒரு காரணமா இருக்கலாம். மராட்டிய மன்னர்கள் இந்தக் கலையில் ஆர்வமா இருந்தாங்க. மானியம்கூடக் கொடுத்தாங்க. என்னோட முன்னோர்கள்கூட தஞ்சாவூர் சமஸ்தானத்துல அலங்காரம் செஞ்சிருக்காங்க. இடையில ஒண்ணு ரெண்டு தலைமுறை விட்டுப்போச்சு. இப்ப நான் இந்தக் கலைக்குத் திரும்பிட்டேன். இப்ப எனக்கு 74 வயசு. எனக்கு இந்தத் தொழில்ல ஆர்வம் வர்றதுக்கும், பல சிரமத்துக்கிடையிலும் இதைக் கைவிடாம நடத்திட்டு வர்றதுக்கும் காரணம் ரெண்டு பேர்தான். ஒருத்தர் என் குரு உமையாள்புரம் சுவாமி சிவபிரகாசம். அந்த நன்றியுணர்வாலதான் நான் அவரோட பெயரிலேயே கலைக்கூடத்தை ஏற்படுத்தியிருக்கேன். இன்னொருத்தர் காங்கிரஸ் மூத்த தலைவரா இருந்த மறைந்த ஜி.கே.மூப்பனார். ஒருமுறை தஞ்சாவூர் பெரிய கோயிலின் மாதிரியைச் செய்து அவரிடம் கொடுத்தேன். அதுக்குக் கண்ணாடிப் பெட்டி செய்யக்கூட அப்ப என்கிட்ட காசில்லை. அதை வாங்கிக்கிட்ட மூப்பனார் முழுசா ஒரு நூறு ரூபாய் நோட்டு தந்தார். அன்னிக்கு அவர் கொடுத்த உற்சாகம்தான் இந்தக் கலையை நான் விடாம இருக்கிறதுக்குக் காரணம்'' என்று நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.

``இந்தக் கலைக்கு இப்பவும் வரவேற்பு எப்படி இருக்கு?''

``நான் நெட்டிச்சிற்பம் செய்யற தொழில்ல ஈடுபட்டப்ப பெரிசா மரியாதை இல்லாமத்தான் இருந்துச்சு. என்னதான் பார்த்துப் பார்த்துச் செஞ்சாலும், விலை கொடுத்து வாங்க ஆளிருக்காது. மாட்டுப் பொங்கல், கோயில் திருவிழான்னு ஏதாச்சும் விசேஷம் வந்தாத்தான் வேலை கிடைக்கும். அப்புறம் கரகாட்டத்துல சொம்புக்கு மேல வைக்கிற கிளியை நெட்டியிலதான் செய்யணும். இந்தப் பகுதியில நிறைய கரகாட்டக் குழுக்கள் இருக்கிறதால, ஓரளவுக்குக் கிளி செய்யற வேலையும் கிடைக்கும். ஆனா, அந்தக் கலையும் இப்போ நலிவடைஞ்சுட்டு வாரதால அதுக்கும் வாய்ப்பு குறைஞ்சது.

இதனால, காலப்போக்குல இந்தக் கலை அழிஞ்சுபோயிடுமோன்ற பயம் வந்தது. ஆனால், மத்திய அரசும் மாநில அரசும் இப்போ இதை ஒரு கைத்தொழிலாக மாற்றிக் கற்றுக்கொள்ள ஏற்பாடு செய்திருக்காங்க. பேங்க் கடனும் கிடைக்குது. திறமையானவங்களுக்கு விருது, பரிசு என்று லட்சக்கணக்குல பணமும் கொடுக்கிறாங்க. நெட்டிச்சிற்பத்தைப் பரிசாகக் கொடுக்கறதுங்கிறது கௌரவமாகவும் வழக்கமாகவும் இருக்கு. ஜனாதிபதி, பிரதமர்னு யார் வந்தாலும் இதை நினைவுப் பரிசா கொடுப்பாங்க. இந்தியா மட்டுமல்லாம வெளிநாடுகளிலும் பெரும்பாலான அருங்காட்சியகங்கள்ல இந்தச் சிற்பங்களைப் பாதுகாக்கிறாங்க. பூம்புகார் மற்றும் தனியார் கடைகள்ல இருந்தும் ஆர்டர்கள் வருகின்றன.”

``இந்தக் கலையின் அடுத்த கட்டம் என்ன?"

``வெறும் கலையா மட்டுமில்லாம தொழில்நுட்பமாகவும் இந்த நெட்டிக்கலை வளர்ந்திருக்கிறது. இப்போதெல்லாம் புதுசா வீடு, கோயில், பாலம்னு கட்டுறவங்க, பிளான் ரெடி பண்றதுக்கு மாடல் செய்து தரச் சொல்றாங்க. நெட்டிச்சிற்பத்தை அடிப்படையா வச்சுக் கோயில் கட்டுறவங்களும் இருக்காங்க. அப்படிப் பலபேரு இன்னைய நிலைமைக்கேற்ப மாறிட்டாங்க. சுவாமி சிற்பங்கள் மட்டுமில்லாம மகாத்மா காந்தி, தந்தை பெரியார், அம்பேத்கர், சாய்பாபா, மனுநீதிச்சோழன் போன்ற உருவங்கள், கிராமம், தொழிற்சாலை மாடல்களும் செய்து கொடுக்குறாங்க. அதோடு, வாழ்த்து மடல், பொக்கே, மாலை... இப்படி எதை வேணாலும் நெட்டியில செய்ய முடியும். ஆர்வமும் கற்பனையும் பொறுமையும் இருக்கிற பெண்கள் இதைக் கலையா மட்டுமில்லாம கைத்தொழிலாவும் செய்யலாம். அதோடு, இன்னும் புதுசா யோசிக்கிறவங்களுக்கு இதுல தனித்தன்மை கிடைக்கும். நெட்டிச்சிற்பம் செய்யறதைச் சில நூறுகளில் தொடங்கி, பல ஆயிரம் வரையில் வேலைப்பாடுகளுக்கேற்ப விற்பனை செய்யலாம்'' என்கிறார் சொக்கலிங்கம்.

- ஜி.லட்சுமணன், படங்கள்: ஏ.எஸ்.ஈஸ்வர்

அறுபது வருடங்களுக்கும் மேலாக இந்த அற்புதக் கலைக்குத் தன்னை அர்ப்பணித்துக் கொண்டு, இன்றைக்கும் அந்தக் கலையை உயிர்ப்புடன் வைத்திருப்பவர் சொக்கலிங்கம்.

கும்பகோணம் மகாமகக் குளத்துக்கு அருகில் தலைமைத் தபால் நிலையத்துக்கு எதிரிலுள்ளது `பிரகாசம் நெட்டிச் சிற்பக்கலைக்கூடம்.' கலைக்கூடம் முழுவதும் தஞ்சைப் பெரிய கோயில், திருச்சி மலைக்கோட்டை, ஸ்ரீரங்கம் ராஜ கோபுரம், திருப்பதி ஏழுமலையான் கோயில், கும்பகோணம் மகாமகக் கோயில், மதுரை மீனாட்சியம்மன் கோயில், திருவாரூர் ஆழித்தேர் என ஒரே இடத்தில் வரிசை கட்டி நம்மை வசீகரிக்கின்றன அவருடைய கைவண்ணத்தில் உருப்பெற்ற நெட்டிச்சிற்பங்கள். நூற்றுக்கணக்கானவர்களுக்குப் பயிற்சி அளித்திருக்கும் அவர், நெட்டிச்சிற்பத்துக்காக மத்திய அரசின் `மெரிட் அவார்டு' பெற்றிருக்கிறார். கும்பகோணம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் நெட்டிச்சிற்பம் என்று கேட்டாலே இவரைத்தான் குறிப்பிட்டுச் சொல்கிறார்கள். பத்து வயதிலிருந்து உமையாள்புரம் சிவபிரகாசத்திடம் கற்றுக்கொண்டவர், தன் குருவின் பெயரிலேயே கலைக்கூடம் நிறுவி நடத்திவருகிறார். புதுடில்லியிலுள்ள ஜனாதிபதி மாளிகை முதற்கொண்டு பல பிரபலங்களின் வீடுகளை இவருடைய கைவண்ணத்தில் உருவான நெட்டிச் சிற்பங்கள் அலங்கரிப்பதுடன், இவரின் கலைத்திறனையும் பறைசாற்றுகின்றன.

ஒரு கண்காட்சியில் சொக்கலிங்கம் செய்து வைத்த நெட்டி மலர்களை உண்மை என்று நம்பி, முகர்ந்து பார்த்துப் பாராட்டியிருக்கிறார்கள் முன்னாள் இந்திய ஜனாதிபதி ராஜேந்திர பிரசாத்தும், பிரதமர் ஜவஹர்லால் நேருவும். விவேகானந்தர் பாறை, வேளாங்கண்ணி மாதா கோயில், நாகூர் தர்கா, தஞ்சைப் பெரிய கோயில், மாமல்லபுரம் கடற்கரைக் கோயில், மதுரை மீனாட்சியம்மன் கோயில் எனச் சொக்கலிங்கத்தின் பெயர் சொல்லும் நெட்டிச்சிற்பங்கள் உலகெங்கும் உண்டு. இவருடைய நெட்டிச்சிற்பங்கள், இந்தியா முழுவதும் அரசு சார்பாக நடக்கும் கைவினைப் பொருட்காட்சிகளில் தவறாமல் இடம்பெறுகின்றன.