நவீன ஓவியக் கலையில் பல ‘இஸங்கள்’ பற்றி சொல்லப்படுகின்றன. இம்ப்ரஷனிஸம் (Impressionism), எக்ஸ்பிரஷனிஸம் (Expressionism), சர்ரியஸிஸம் (Surrealism), க்யூபிஸம் (Cubism), டாடாயிஸம் (Dadaism), அப்ஸ்ட்ராக்ட் (Abstract) என்பவை அவற்றுள் சில. இவற்றில் தமிழகத்தில் சர்ரியலிஸம் சார்ந்த பல ஓவியங்களைப் படைத்து வருகிறார் சங்கர் லீ.

‘சர்ரியலிஸம்’ என்றால் என்ன?

“ ‘சர்ரியலிஸம்’ என்பது உண்மைத் தோற்றத்தை அப்படியே பிரதிபலிக்காமல் தமது கற்பனைக்கு கருத்துருவுக்கு ஏற்றவாறு மாற்றியோ அல்லது சிலவற்றைப் புறந்தள்ளிவிட்டோ, மாயத்தோற்றங்களை, மாய பிம்பங்களை, நம்ப முடியாத விஷயங்களை விளக்குமாறு காட்சிப்படுத்துதல் என்று சொல்லலாம். உதாரணத்திற்கு ஓவியர் சல்வடோர் டாலியின் ஓவியங்களை எடுத்துக்கொள்வோம். அவருடைய ஓர் ஓவியத்தில் யானை ஒன்று ஆகாயத்தைத் தொடும் அளவுக்கு உயரத்துடன் இருக்கும். அதன் உடல் ஆகாயத்தில் இருந்தாலும் அதனுடைய கால்கள் கொஞ்சம் கொஞ்சமாகச் சிறுத்து இறுதியில் பூமியில் பதியும்போது, பூச்சிகளின் கால்களைப்போல் தோற்றமளிக்கும். இந்த விசித்திரமான, மாயத்தோற்றத்தைக் காணும்போது நமக்கு வியப்பையும் மாறுபட்ட எண்ணங்களையும் தோற்றுவிக்கும். இன்னோர் ஓவியத்தில், காலங்கள் கடந்து செல்வதை உணர்த்தும் விதமாகக் கடிகாரங்கள் உருகி வழிவதைப்போல வரைந்திருப்பார். சில ஓவியங்களில், ஒரே ஓவியத்தில் பல உருவங்கள் மறைமுகமாகத் தெரிவதைப்போல் வரைந்திருப்பார். இந்த உத்தியைப் பயன்படுத்தி ஐரோப்பிய ஓவியர்கள் பலர் பல ஓவியங்களைப் படைத்திருக்கின்றனர். நானும் இந்த உத்தியைப் பயன்படுத்தி பல ஓவியங்களைப் படைத்திருக்கிறேன். தற்போது வரை 32 ஓவியங்களைப் படைத்திருக்கிறேன். ஐரோப்பியர்கள் இவ்வகையான ஓவியங்களை சர்ரியலிஸம் என்று பெயரிட்டு அழைத்தாலும் நான், DMF (Disguised Multiple Figures) Paintings (மறைபடு பல்லுருவ ஓவியங்கள்) என்று பெயரிட்டிருக்கிறேன்.

பெரும்பாலான ஓவியர்களும் உருவாக்க முயலாத ஓவியங்களை, அதாவது ஒரே ஓவியத்தை நேராகப் பார்த்தால் ஓர் உருவமும், தலைகீழாகத் திருப்பிப் பார்த்தால் வேறு ஓர் உருவமும் தெரிவதுபோல் படைத்திருக்கிறேன். இத்தகைய உத்தியில் ஒரு படைப்பினை உருவாக்குவது என்பது சவாலான காரியம். அதனால்தான், இத்தனை நூற்றாண்டுகளாக ஓவியக்கலை பெரும் வளர்ச்சி பெற்றிருக்கும் நிலையிலும், இந்த உத்தியைப் பயன்படுத்தி ஓவியங்களைப் படைப்பது என்பது மிக அரிதான ஒன்றாக இருந்து வருகிறது. தமிழில் நான் ஒருவனே இம்முயற்சியில் தீவிரமாக இயங்கிவருகிறேன். இதுவரை 34 ஓவியங்களைப் படைத்திருக்கிறேன். மேற்கண்ட வகையில் வரையப்படும் இந்த ஓவிய பாணிக்கு ‘DSV (Double Side view) Paintings’ (இருபுற காட்சி ஓவியம்) என்று பெயரிட்டுள்ளேன்.

இந்த ஓவியங்கள் ‘சர்ரியலிஸம்” எனும் பாணியில் அடங்கினாலும், சர்ரியலிஸம் பாணி ஓவியர்கள் எல்லோராலும் இதைச் சுலபமாகச் சாதித்துவிட முடியாது. இந்த மாதிரி ஓவியத்தைப் படைக்க வேண்டும் என்றால், அதற்கேற்ற மனநிலையோடு அமைதியாக அமர்ந்து, காகிதத்தின் மேல் பென்சில்கொண்டு மனதில் தோன்றியவற்றை வரைந்துகொண்டும், வரைந்ததைத் தலைகீழாகத் திருப்பிப் பிடித்து ஏதாவது உருவம், கருத்துருவாக்கம் தெரிகிறதா என்றும் முயன்றுகொண்டே இருப்பேன். திடீரென்று ஏதாவது உருவமோ, கருத்துருவோ, ஐடியாவோ, தீப்பொறிபோல் தோன்றும். அதைப்பிடித்து மேலும் மேலும் ஆராய்ந்து, திருத்தித் திருத்தி மெருகேற்றி உருவங்களையோ கருத்துருவாக்கங்களையோ உருவாக்குவேன். ஆனால், இது ஒரே நாளில் நடந்துவிடுமா அல்லது ஒரு வாரத்தில், ஒரு மாதத்தில், ஒரு வருடத்தில் நடந்துவிடுமா என்பதைக் கூறவே முடியாது. நேர் பார்வைக்குத் தெரியும் உருவம், கேன்வாஸ் தலைகீழாகத் திருப்பப்படும்போது தெரியும் வேறு உருவத்தைச் சற்றுகூட நெருடல் செய்யாமல் ஒன்றுடன் ஒன்று இதமாக இயைந்திருக்கும்படியாக மிகச் சாமர்த்தியமாக வரைந்திட வேண்டும். மேலும், இந்த ஓவியத்தின் இரண்டு புகைப்படப் பிரதிகளை ஒன்றை நேராகவும் மற்றொன்றை தலைகீழாகவும் ஒட்டிவைத்தால் அவை இரண்டும் வேறு வேறு ஓவியங்களாகத் தெரிய வேண்டும். அப்படி தெரியவில்லையென்றால் முயற்சியில் தோல்வி என்றுதான் அர்த்தம்.

ஓவியன் என்று சொன்னால், அவன் கண்டிப்பாக தத்ரூப பாணியில் சிறந்தவனாக விளங்க வேண்டும். அப்படிப்பட்டவனால்தான் நவீன பாணியிலும் சிறப்பாக வரைய முடியும். `பார்த்து வரைதல்’ என்பதுதான் ஓவியக்கலையின் அடிப்படை ஆதாரம். அதாவது தன் கண்களால் பார்க்கும் உருவத்தையோ காட்சியையோ அளந்து, பரிசீலித்து இன்னொரு ஊடகத்தின் (காகிதத்தின்) மேல் அதைப் பதிவுசெய்வது என்பது சுலபமான விஷயமல்ல. அது, நீண்ட நெடிய பயிற்சியின் மூலமாகவும் முயற்சியின் மூலமாகவும் பெறக்கூடிய திறமை.” என்றார் சங்கர் லீ.

`பொன்னியின் செல்வன் ஒவியங்கள் - வண்ணம் தீட்டி மகிழுங்கள்’ என்ற தலைப்பில் ஒரு புத்தகம் எழுதியிருக்கிறார் சங்கர் லீ. மேலும், மறைபடு பல்லுருவ ஓவியங்கள் (DMF - Disguised Multiple Figures Paintings), இருபுறக் காட்சி ஓவியங்கள் (DSV - Double Side View Paintings), நான்கு புறமும் சுழற்றிச் சுழற்றிப் பார்க்கும் படியான ஓவியங்கள், 360 டிகிரியும் சுழற்றிப் பார்க்கும்படியான ஓவியங்கள், தத்ரூப பாணி ஓவியங்கள் என பல நூறு ஓவியங்களை தொடர்ச்சியாக வரைந்துகொண்டேயிருக்கிறார் சங்கர்லீ என்று அழைக்கப்படும் சங்கரலிங்கம்.