Published:Updated:

`பிளாஸ்டிக் தடை அரசாணையை ரத்து செய்ய முடியாது!’ - வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம்

`பிளாஸ்டிக் தடை அரசாணையை ரத்து செய்ய முடியாது!’ - வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம்
`பிளாஸ்டிக் தடை அரசாணையை ரத்து செய்ய முடியாது!’ - வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம்

அணு ஆயுதங்களைவிட உலக நாடுகளை அச்சுறுத்தலுக்கு ஆளாக்கி இருப்பது பிளாஸ்டிக் கழிவுகள்தான். மக்களின் அன்றாட வாழ்விலிருந்து பிளாஸ்டிக் குப்பைகளைப் பிரித்தெடுக்க முடியாமல் ஒவ்வொரு நாடும் திணறி வருகிறது. நாம் தினமும் தூக்கியெறியும் பிளாஸ்டிக் குப்பைகள் மண்வளம் மற்றும் சுற்றுச்சூழலைப் பாதிக்கிறது. முக்கியமாக உயிரினங்கள் உட்கொள்ளும் உணவில் ஏதோ ஒரு வடிவில் பிளாஸ்டிக் கலக்கும்போது, பல்வேறு நோய்களுக்கான அடித்தளத்தைப் போடுகிறது. இதைக் கட்டுப்படுத்த பல முயற்சி செய்துவருகின்றனர்.

இந்நிலையில் மதுரையைச் சேர்ந்த ரமேஷ் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல மனுவைத் தாக்கல் செய்திருந்தார். அதில், ``தமிழக அரசு கடந்த ஜூன் 25-ம் தேதி அரசாணை ஒன்றைப் பிறப்பித்தது. அந்த அரசாணை மறுசுழற்சி செய்ய முடியாத பிளாஸ்டிக்குக்கு மட்டுமே தடை விதிக்கும் வகையில் உள்ளது. இதனால் பிளாஸ்டிக் பயன்பாட்டை முழுமையாகக் குறைக்க இயலாது. ஆகவே, இந்த அரசாணையை ரத்து செய்து, மத்திய அரசு விதிப்படி, பிளாஸ்டிக்கை முழுமையாகத் தடை செய்யும் வகையில் சட்டம் இயற்றவோ அல்லது புதிதாக அரசாணையை இயற்றவோ உத்தரவிட வேண்டும்" என மனுவில் கூறியிருந்தார்.

இந்த வழக்கு  நீதிபதிகள் சசிதரன், ஆதிகேசவலு அமர்வு முன்பாக இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில், இது போன்ற அரசாணையை பிறப்பிக்க அதிகாரம் இல்லை எனத் தெரிவித்தார். அதற்கு மாநில அரசுத்தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், மத்திய அரசு இது போன்ற அரசாணைகளைப் பிறப்பிக்க மாநில அரசுக்கு அதிகாரம் வழங்கியுள்ளது. ஏற்கெனவே சிக்கிம், ஹரியானா, கர்நாடகா உள்ளிட்ட 14 மாநிலங்களில் இது போல அரசாணையைப் பிறப்பிக்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்தார். இதையேற்ற நீதிபதிகள், பிளாஸ்டிக் தடை தொடர்பான அரசாணையை ரத்து செய்யக்கோரிய வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.