Published:Updated:

பண்டிகை பர்ச்சேஸ்... ஸ்மார்ட் ஷாப்பிங் செய்ய சூப்பர் வழிகள்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
பண்டிகை பர்ச்சேஸ்... ஸ்மார்ட் ஷாப்பிங் செய்ய சூப்பர் வழிகள்!
பண்டிகை பர்ச்சேஸ்... ஸ்மார்ட் ஷாப்பிங் செய்ய சூப்பர் வழிகள்!

ஷாப்பிங்

பிரீமியம் ஸ்டோரி

து பண்டிகைக் காலம். ஆடைகள், பரிசுப்பொருள்கள், வீட்டு உபயோகப்பொருள்களை வாங்கவேண்டிய கட்டாயத்தில் இப்போது இருக்கிறோம். தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகைகள் வரும்போது, இன்னொரு நாள் ஷாப்பிங் செய்யலாம் எனத் தள்ளிப்போட முடியாது. அதேவேளை, பண்டிகைக்காலம் முடிந்தபிறகு, அதிகமாகச் செலவழித்துவிட்டோமே என்ற கசப்பான உணர்வைப் பெறவேண்டியிருக்கும். அதற்காக ஷாப்பிங் பட்டியலைக் குறைப்பதைவிட ஸ்மார்ட்டான சில ஷாப்பிங் யோசனைகளைப் பின்பற்றினால் அதிக செலவைக் குறைக்கலாம்.

ஆன்லைன் ஷாப்பிங் செய்யலாம்

இ-காமர்ஸ் ஆன்லைன் ஷாப்பிங் வெப்சைட்டுகள், இருந்த இடத்திலிருந்தே ஷாப்பிங் செய்வதற்கானவை மட்டுமல்ல, குறைந்த விலையிலும் இங்கே பொருள்களை வாங்க முடியும். உடையோ அல்லது வீட்டு உபயோகப் பொருள்களோ, எதுவானாலும் பண்டிகைக் காலங்களில் ஆன்லைன் ஷாப்பிங்கில் குறிப்பிட்ட சதவிகிதம் தள்ளுபடியில் விற்பனை செய்கிறார்கள். கிரெடிட் கார்டுகள் மற்றும் இ-வாலட்டுகள் மூலம் ஷாப்பிங் செய்யும்போது இன்னும் விலை குறைய வாய்ப்புள்ளது. கிரெடிட் கார்டுகள் மற்றும் இ-வாலட்டுகளை வழங்குவோர், சில்லறை விற்பனையாளர்களோடு வியாபார ஒப்பந்தம் போட்டிருப்பதால் இது முடிகிறது. 

பண்டிகை பர்ச்சேஸ்... ஸ்மார்ட் ஷாப்பிங் செய்ய சூப்பர் வழிகள்!

விலை தெரியாத பொருளை வாங்கும் போது, குறிப்பாக அதிக விலையுள்ள பொருளை வாங்கும்போது சந்தையில் அதன் விலையோடு ஒப்பிட்டுப் பாருங்கள். அதேபோல, விலையை ஒப்பிட்டுப் பார்க்க உதவும் வெப்சைட்டுகளிலும் அதன் விலை சரியானதா என செக் செய்யுங்கள். விலையை ஒப்பிட்டுச்சொல்லும் வெப்சைட்டு களின் மூலம், ஆன்லைனிலும், கடைகளிலும் அந்தப் பொருளுக்கான குறைந்தபட்ச விலை என்னவென்பதை அறியலாம். அதற்கு அந்தப் பொருளின் பார்கோடை ஸ்கேன் செய்ய வேண்டும். விற்பனையில் போட்டி அதிகமாக இருக்கும் சூழலில் ஆன்லைன் மற்றும் கடைகளுக்கு இடையே விலைக்குறைப்பிலும் போட்டி இருக்கும். சில நேரம், ஆன்லைனில் அந்தப் பொருளுக்கான குறைந்த விலை விவரத்தைக் கூறி, அதைவிடக் குறைந்த விலையில் கடையில் வாங்கவும் வாய்ப்புள்ளது.

கடன்பெறுவதில் கவனம்

பண்டிகைக் காலங்களில் வாகனங்கள் மற்றும் வீட்டு  உபயோகப் பொருள்கள் விற்பனையின்போது வங்கிக் கடனுக்கான பிராசஸிங் கட்டணம் பூஜ்ஜியம் என்றும், வட்டியில் தள்ளுபடி என்றும் சில வங்கிகள் அறிவிக்கும். சிறிய விலையிலுள்ள பொருள்களை வாங்க விரும்பினால், கிரெடிட் கார்டுகள் மூலமாகவே நீங்கள் வாங்கலாம். ஏனெனில், கிரெடிட் கார்டுகள் 45 நாள்கள் வரை வட்டியில்லாமல் அனுமதிக்கின்றன.
மேலும், ரிவார்ட் பாயின்டுகள், கேஷ்பேக் சலுகைகளை கிரெடிட் கார்டு மூலம் ஷாப்பிங் செய்தால் பெற இயலும். செலவழித்த தொகையை மாதத் தவணை முறையில் திரும்பச் செலுத்தி விடலாம்.  வங்கிக் கடன் அல்லது கிரெடிட் கார்டு மூலம் பொருள் வாங்கும்முன் அந்தத் தொகையைத் திருப்பிச்செலுத்துவது குறித்து திட்டமிட்டுக் கொள்ளுங்கள்.

பண்டிகை பர்ச்சேஸ்... ஸ்மார்ட் ஷாப்பிங் செய்ய சூப்பர் வழிகள்!

வாங்கவேண்டியவற்றைப் பட்டியலிடுங்கள்

நாம் வாங்க நினைத்ததையெல்லாம்  வாங்குவ தால் எதிர்பார்த்ததைவிட அதிகமாகச் செலவாகக் கூடும். தள்ளுபடி விற்பனை மற்றும் கடைக்காரரின் வற்புறுத்தல் காரணமாகக் கூடுதலாக ஷாப்பிங் செய்ய நேரும். இதைத் தடுக்க, ஆன்லைன் அல்லது கடையில் ஷாப்பிங் செய்யுமுன் வாங்க வேண்டிய பொருள்களின் பட்டியலைத் தயாரிக்க வேண்டும். ஷாப்பிங்கிற்கு எவ்வளவு தொகை செலவழிக்கப்போகிறோம் என்ற அடிப்படையில் இந்தப் பட்டியலை உருவாக்க வேண்டும். ஒவ்வொரு வகை பொருள்களுக்கும் ஒரு குறிப்பிட்ட தொகையை ஒதுக்கவேண்டும்.

பிரத்யேகமான அன்பளிப்புகளைக் கொடுக்கலாம்

பண்டிகைக் காலங்களில் அன்பளிப்பு தருவதும், உறவினர்கள், நண்பர்களிடையே அன்பளிப்புகளைப் பரிமாறிக்கொள்வதும் தவிர்க்க இயலாததே. விலையுயர்ந்த பொருள்களை அன்பளிப்பாகத் தருவதைவிட வேறு என்ன மாதிரியான அன்பளிப்பு கொடுக்கலாம் எனச் சிந்தியுங்கள். அன்பளிப்பின் மதிப்பு விலையில் இல்லை; நம் அன்பைச் சொல்லும் விதத்தில் இருக்கிறது. உதாரணமாக, ஓர் ஓவியம் வரைந்து அல்லது கைவேலைப்பாடுள்ள பொருளைச் செய்து பரிசாக அளிப்பதன்மூலம் நண்பர்களின் மனதைக் கவரலாம்.

- அதில் ஷெட்டி,  சிஇஓ, பேங்க் பஜார்

தொகுப்பு : தெ.சு.கவுதமன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு